துர்க்கை எத்தனை துர்க்கையடி..!
Page 1 of 1
துர்க்கை எத்தனை துர்க்கையடி..!
நவராத்திரியின் போது, ஒரு காலத்தில் துர்க்கையை மட்டுமே ஒன்பது வடிவங்களாக வழிபட்டனர். இப்போதும்கூட துர்க்கை கோயில்களில் ஒன்பது வடிவங்களில் அலங்காரம் செய்கிறார்கள். அந்த ஒன்பது வடிவங்கள் எவை?
பிரம்ம துர்க்கை: சகல வித்தைகளுக்கும் அதிபதி இவள். கல்வி ஞானம் தருபவள். அறிய இயலாத கலைகளையும் அறிய வைப்பவள். பாடங்கள் கஷ்டமாக இருக்கிறது என சொல்லும் குழந்தைகளை நவராத்திரியின் ஆறாவது நாளில் துர்க்கை சந்நதிக்கு அழைத்துச் சென்று, அவளை பிரம்ம துர்க்கையாகப் பாவித்து வணங்கினால் கல்வி ஞானம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. புதிய படைப்புக்களை உருவாக்கும் சக்தியையும் இவள் தருகிறாள்.
ஜல துர்க்கை: நீர் நிலைகளில் குளிக்கச் செல்லும்போது முதலில் இவளை வழிபட்ட பிறகே செல்ல வேண்டும். நீரில் மூழ்கி திண்டாடும் பலரைக் காத்து கரையேற்றுபவள் இவள். எப்பேர்ப்பட்ட வல்லவனும் வாழ்க்கை என்ற நீர் சுழலில் சிக்கிக் கொள்கிறான். அப்படிப்பட்டவனை இவள் அருள் தந்து காப்பாற்றுகிறாள். இவளை ‘தாராதேவி’ என்றும் அழைப்பர்.
சூலினி துர்க்கை: இவள் சூலாயுதம் ஏந்தியிருப்பவள். பஞ்ச பூதங்களும் இவளுக்குக் கட்டுப்பட்டது. உயிர்களிடத்தில் உள்ள பயத்தைப் போக்குபவள்.
ருத்ர துர்க்கை: இவள் கடும் கோபக்காரி. தனது கோபாக்னியால் பகைவர்களை அழிப்பவள். தன்னை நம்பி இருப்பவர்களுக்கு இடையூறு ஏதும் ஏற்பட்டால் அவர்களைக் காப்பாற்ற ஓடோடி வருவாள். பகைவர்கள் தொல்லையால் அவதிப்படுபவர்கள் இவளை வணங்கலாம்.
மகா துர்க்கை: இவள்தான் உலகம் அனைத்தையும் தன்னுள் அடக்கியவள். காலத்தைக் கடந்து இவளால் பயனளிக்க முடியும். வாழ்வில் எதிர்பாராத உயர்வுக்கு இவளே காரணமாக இருக்கிறாள். செல்வச் செழிப்பை நாடுபவர்கள் இவளை வணங்குகிறார்கள்.
விஷ்ணு துர்க்கை: வைஷ்ணவி நாராயணீ என்பது இவளது இன்னொரு பெயர். சிவதுர்க்கா ஆவேசத்துடன் இருப்பவள். இவளோ சாந்தி துர்க்கையாக காட்சி தருவாள். சங்கு, சக்கரம் ஏந்தி இருப்பவள். துன்பம் கொண்ட மனதில் ஏற்பட்ட துயரை விலக்கி அமைதியையும் ஆறுதலையும் தருபவள்.
ஸ்தூல துர்க்கை: ‘ஸ்தூலம்’ என்றால் உடல். உடலில் நோய் ஏற்பட்டால் மருத்துவர் காப்பதுபோல இவளும் பாதுகாக்கிறாள். ஆனால் இவள் செய்யும் சிகிச்சையில் கடுமையான வலி இருக்கும். அந்த வலியே வாழ்வில் ஏற்படும் சோதனைகள். இதைத் தாண்டி விட்டால் உடல் பூரண குணமடையும். இவளை அதர்வண பத்ரகாளி என்றும் சொல்வார்கள்.
அக்னி துர்க்கை: இவள் பசித்தீ, காமத்தீ, ஆசைத்தீ ஆகியவற்றிலிருந்து விடுதலை தருபவள். நெருப்பில் சிக்கிய ஒருவன் மழை பெய்தால் எப்படி தப்பித்துக் கொள்கிறானோ, அதுபோல இவள் மனித ரூபத்தில் நம்மிடையே வந்து துன்பத்தைப் போக்குவாள்.
வனதுர்க்கை: உல்லாச சுற்றுலாவாகவோ, பணி நிமித்தமாகவோ காடுகளுக்குச் செல்வோர் உண்டு. இவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பை வனதுர்க்கை ஏற்றிருக்கிறாள். மிருகங்கள், விஷ ஜந்துகளிடமிருந்து காப்பாள். நமது மனதை வனத்திற்கு ஒப்பிட்டால் அதில் ஏற்படும் பயத்தை நீக்கி தெளிவு தந்து
அருள் செய்வாள்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» துர்க்கை எத்தனை துர்க்கையடி..!
» துர்க்கை ஸ்லோகம்
» துர்க்கை அம்மன்
» துர்க்கை வழிபாடு
» துர்க்கை ஸ்லோகம்
» துர்க்கை ஸ்லோகம்
» துர்க்கை அம்மன்
» துர்க்கை வழிபாடு
» துர்க்கை ஸ்லோகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum