திருவண்ணாமலை தீபத்திருவிழா : மகாதீப நெய் காணிக்கை இந்தாண்டு ரூ.52 லட்சம்
Page 1 of 1

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, மகா தீப நெய் காணிக்கையாக ரூ.52 லட்சத்தை பக்தர்கள் செலுத்தியுள்ளனர். திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா உற்சவம், கடந்த மாதம் 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 27ம் தேதி வரை உற்சாகமாக நடந்து முடிந்தது. 27ம் தேதி மாலை 6 மணிக்கு, மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம் வரும் 7ம் தேதி வரை பிரகாசிக்க உள்ளது. இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் செலுத்தும் நெய் காணிக்கை மூலம் மகா தீபம் ஏற்றப்படுகிறது. நெய் காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு ஆருத்ரா தரிசனம் முடிந்த தும் தீப மை வழங்கப்படும்.
இந்த ஆண்டு 3,500 கிலோ நெய் பக்தர்களின் காணிக்கை மூலம் கோயில் நிர்வாகம் கொள்முதல் செய்தது. தொடர்ந்து 11 நாட்கள் மலையில் தீபம் ஏற்ற இந்த நெய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதன் படி, மகா தீப நெய் காணிக்கையாக இந்த ஆண்டு ரூ.52 லட்சத்தை பக்தர்கள் செலுத்தியுள்ளனர். அதில், ரூ.37 லட்சம் காசோலையாகவும், ரூ.15 லட்சம் ரொக்கமாகவும் செலுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான பக்தர் களால் குறிப்பிட்ட கால அவகாசத்தில் நெய் காணிக்கை செலுத்த முடிவதில்லை. எனவே, ஆண்டு முழுவதும் நெய் காணிக்கை செலுத்தி, அதற்கான ரசீது பெறும் வசதியை நடைமுறைப்படுத்த கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» திருவண்ணாமலை தீபத்திருவிழா : மகாதீப நெய் காணிக்கை இந்தாண்டு ரூ.52 லட்சம்
» திருவண்ணாமலை திக்குமுக்காடியது : 20 லட்சம் பேர் மகா தீப தரிசனம்
» பொட்டுத்தாலி காணிக்கை
» வில்லுப்பாட்டு காணிக்கை செலுத்தும் கோவில்
» தி.மலை தீபத்திருவிழா நிறைவு : அண்ணாமலையார் கிரிவலம் ஏராளமான பக்தர் தரிசனம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum