தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பழநிமலை முருகா, பழம்நீ திருக்குமரா...

Go down

 பழநிமலை முருகா, பழம்நீ திருக்குமரா...  Empty பழநிமலை முருகா, பழம்நீ திருக்குமரா...

Post  meenu Fri Mar 08, 2013 5:34 pm

தைப்பூசம் என்றாலே முருகன் தலங்களில் எல்லாம் திருவிழாதான். குறிப்பாக பழநியில் அந்த விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. பக்தர் கள் லட்சக்கணக்கில் திரள் திரளாக விழாவில் கலந்துகொள்கிறார்கள் என்றால், பழநியாண்டவர் கோயிலிலும் அந்த பக்தர்களின் பக்தியை மெச்சும்படி யாகவும் அங்கீகரிக்கும் வகையிலும் பல நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

இந்த வருடம், பத்துநாள் உற்சவம், 20.1.2013 அன்று தொடங்குகிறது. முதல்நாள், பெரியநாயகி அம்மன் கோயிலில் அன்று இரவு கிராம சந்தி விநாய கர் பூஜை, சங்கல்பம், விநாயகருக்கு அபிஷேகம், விநாயகர் மற்றும் அர்த்தக தேவர்களுக்கு காப்பு கட்டுதல் என்று துவங்குகிறது. பெரியநாயகி அம் மன் கோயில் முன்புறம் அமைந்துள்ள சிலைகளுக்கு பைரவர் பூஜை யாகம் நடைபெறும். தென்மேற்கு மூலையில் வாஸ்து சாந்தி நடைபெறும். அடுத்த நாள், 21.1.2013 அன்று, அதிகாலை நான்கு மணிக்கு மலைக்கோயில் முருகனின் விஸ்வரூப தரிசன காட்சியும் விசேஷ பூஜையையும் காண லாம். காலை 10 மணிக்கு மேல் 10:30க்குள் மீன லக்னத்தில் ஊர்க்கோயில் என்றழைக்கப்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றுதல் நடைபெறும்.

அதைத் தொடர்ந்து முத்துக்குமாரசாமி சந்நதியில் மயூரயாகம் மேற்கொள்ளப்படும். பிறகு, முத்துக்குமாரசாமிக்கு அபிஷேகம் ஆராதனை காலசந்தியின் காப்பு கட்டுதல் விநாயகர், சோமஸ்கந்தர் (மூலவர்), கொடி மரம், மயில் முத்துக்குமாரசாமிக்கு காப்பு கட்டுதல், கொடி மரத்திற்கு கீழ் உள்ள தேவதைகளுக்கு பூஜை செய்தல், கொடி ஏற்றுதல், வேத மந்திரம், தேவாரம் பாராயணம் செய்தல், பேரி வாத்திய பூஜை, சூர்நிகை என்ற ராஜ வரவேற்பு வாசித்தல், முத்துக்குமாரசாமி கொடிமரம் முன்பு தீபாரதனை, திரு ஆவினான் குடி கோயிலில் உச்சி காலத்தில் மலைக்கோயிலில் மூலவர், உற்சவர் சண்முகர், துவார பாலகர், விநாயகர், வீரபாகுவுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெறும். பெரியநாயகி அம்மன் கோயிலில் யாக சாலை பூஜை முடிந்து நான்கு ரத வீதிகளில் நவசந்தி தீக்பாலகர் பூஜை பலி நடைபெறும்.

பத்து நாட்களும் இரண்டு காலங்களிலும் காலை, மாலை, யாகசாலை பூஜையும் சாமி புறப்பாடு நடைபெறும். 25ம் தேதியிலிருந்து 29ம் தேதி வரை தங்கத்தேர் புறப்பாடு கிடையாது. 25.1.2013 அன்று திருக்கல்யாணத்திற்கு உச்சிகால பூஜையில், பழநியாண்டவரிடம் அனுமதி வாங்குவார்கள். 26.1.2013, அதாவது, 6வது நாள், அதிகாலை 4 மணிக்கு விஸ்வரூப தரிசனத்தோடு விசேஷ பூஜையும் நடைபெறும். பெரியநாயகி அம்மன் கோயிலில் இரவு 7 மணிக்கு மேல் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறும். விழாவில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அன்று இரவு 9 மணிக்கு வெள்ளித் தேர் உலாவரும். 27.1.2013 அன்று காலை சண்முக நதியில் சிறப்பு யாகம் காலை 5 மணிக்குத் தொடங்கும்.

அபிஷேகம், ஆராதனை, உச்சிகாலத்தில் அதாவது 12 மணியளவில் வள்ளி-தெய்வானை-முத்துக்குமாரசாமி ரதம் ஏறி ஊர்வலம் வருவர். அன்று மாலை 4:20 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல், தேர்கால் நிகழ்வு முடிந்தவுடன், முத்துக்குமாரசுவாமிக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும். அன்று, தமிழகம், மற்றும் பிற மாநிலங்களிலிருந்தும் வரும் பக்தர் களின் அரோகரா கோஷத்தில் திருத்தேர், மெல்ல அசைந்தாடி உலாவரும். எட்டாம் நாள் திருவிழா, 28.1.2013 அன்று, பெரியநாயகி அம்மன் கோயிலில் தங்க குதிரைவாகனத்தில் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறும். வான வேடிக்கை, வானத்து தேவர்களையே பழநியை குனிந்து பார்க்கச் செய்யும்.

நிறைவாக 30.1.2013 அன்று பத்தாம் நாள் திருவிழா. மாலை 6 மணிக்கு தெப்பத்தேர் மண்டபத்தில் வள்ளி-தேவசேனா சமேத முத்துக்குமாரசாமிக்கு சிறப்பு யாகம், அபிஷேகம், ஆராதனை, 16 வகை உபசாரங்களுடன் வேத மந்திரம், தேவார இசையுடன் மகா தீபாரதனை நடைபெறும். அதன்பின் தெப்பத்தேரில் பக்தர்களுக்கு வள்ளி-தேவசேனா சமேத முத்துக்குமாரசாமி, அருள்பாலிக்கிறார். தெப்பத்தேர் உலா நிறைவுபெற்றதும், ரத வீதிகளில் அவர்கள் வலம் வருகிறார்கள்; பெரியநாயகி அம்மன் கோயில் வந்தபின் கொடி இறக்குதல் நிகழ்ச்சியுடன் விழா முழுமை பெறும். பத்து நாட்கள் பூஜை செய்த பிரதான கலசங்களால், பழநி மலைக்கோயிலில் உள்ள பழநியாண்டவருக்கு, ராக்காலத்தில் அபிஷேகங்கள் மேற்கொள் ளப்பட்டபின் மூலவருக்கு காப்புகட்டு அவிழ்த்தல் நிகழ்ச்சி நடைபெறும்.

பழநி தைப்பூச பாதயாத்திரையை 400 வருடங்களுக்கு முன் துவக்கி வைத்தவர்கள், நகரத்தார் எனப்படும் செட்டியார் இன மக்கள்தான். முருகப் பெரு மானை ‘செட்டிமகன்’ என்று செல்லமாக அழைக்கும் இம்மக்கள், தைப் பூசத்திருவிழாவிற்கு காரைக்குடி, தேவகோட்டை, குன்றக்குடி பகுதிகளிலிருந் து, பல்வேறு தான தர்மங்களை செய்து கொண்டே பாதயாத்திரையாக பழனிக்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்தனர். முருகனின் வாகனமான மயில் தோகையை காவடியாக கொண்டு அதில் இருபக்கமும் தீர்த்தகுடம் ஏந்தி இருப்பர். 500க்கும் மேற்பட்டவர்கள் இப்படி மயில்காவடி எடுத்து வரி சையாக வருவது கண் கொள்ளாக் காட்சியாகும். இந்த மயில் காவடிகளை வருடம் முழுவதும் பாதுகாப்பாக வைத்திருப்பர்.

பாதயாத்திரையை துவங் கும்போது ஒவ்வொரு காவடியும், சபரிமலை பக்தருக்கு இருமுடிபோல், தனித்தனியாக பக்தர்களுக்கு தரப்படுகிறது. இந்தக்காவடியை பக்தரின் குடும் பத்தினர் மட்டுமே மாறி, மாறி சுமந்து வருவார்கள். தோள்மீது சுமந்து வரப்படும் மயில்காவடி தங்க ரத நடப்பிற்கு பின் மீண்டும் தலைசுமையாகவே கொண்டு வரப்படுகிறது. கண்டிப்பான விரதமுறை களை இவர்கள் கட்டாயம் கடைப்பிடிக்கிறார்கள். காவடிகள் வரும்போது எதிரே வரும் நபர்கள் காவடிக்குள் செருப்பு அணிந்தவர்களை உள்ளே வரா மல் பார்த்துக் கொள்கின்றனர். இந்த மயில் காவடிகளை சிரசின் மேல் வைத்து லாவகமாக சுழற்றி ஆடும் திறமைமிக்கவர்களும் உண்டு.

காவடியுடன் பழநி கிரிவலம் சென்று மலை ஏறும் பக்தர்கள், தீர்த்தத்தை முருகனுக்கு அபிஷேகம் செய்து, மயில் காவடிகளுக்கு தீபாராதனை காட்டி விரதம் முடிக்கின்றனர். வருடா வருடம் பாதயாத்திரைக்கு வரும் இந்த மயில் காவடி, ஊர் திரும்பும்போது வாகனங்களில் ஏற்றாமல் தனியாக ஆட்கள் மூலமா கவே பாதயாத்திரையாகவே திரும்பவும் கொண்டு செல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மலைக்கோயில் முருனுக்கு ஆறுகால பூஜைகளில் தினசரி செய்யப்படும் அலங்காரங்களை அறிந்து கொள்வோமா!

காலையிலேயே சாது சந்நியாசி அலங்காரம், சிறு கால சந்தியில் வேடர் அலங்காரம், கால சந்தி பாலசுப்ரமணியர் அலங்காரம், உச்சி காலம் வைதீக தோற்றப்படி அலங்காரம், சாய ரட்சை என்கிற மாலையில் ராஜ அலங்காரம், அர்த்தஜாமத்தில் வெள்ளை சாத்துப்படி புஷ்ப அலங்காரம் என்று தினமும் அருட்கோலம் காட்டுகிறார். வருடம் முழுக்க இல்லத்தில் தீட்டு ஏற்படாமல் இருந்தால்தான் மயில்காவடி சுமக்க முடியும் என்பது மரபாக இருந்து வருகிறது. பழநியில் பால்காவடி, தொடுமுடி, தீர்த்தகாவடி, கரும்பு காவடி என்று பலவகை இருந்தாலும் நகரத்தாரின் மயில் காவடி தனிச் சிறப்புடையது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum