புத்திரப் பேறளிக்கும் சந்தான ராமன்
Page 1 of 1
புத்திரப் பேறளிக்கும் சந்தான ராமன்
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் கோயில் கொண்டிருக்கும் சந்தான ராமஸ்வாமி வரலாற்று சிறப்புடையவர்!
தஞ்சையை ஆண்ட மஹாராஷ்டிர மன்னர் பிரதாப சிம்ம மஹாராஜாவுக்கு பலகாலம் புத்திரப்பேறு இல்லாமையால் அரசரும், அவரது தேவியார் யமுனாம்பாளும் நீடாமங்கலம் சந்தான ராமரை வழிபட்டு, புத்திரப்பேறு பெற்றார்கள்! சந்தான பாக்கியம் பெற்ற அரசர் கோயிலை சிறப்பாகக் கட்டி குடமுழுக்கும் செய்ததாக வரலாறு சொல்கின்றது. நீடாமங்கலத்துக்கு தன் மனைவியின் பெயரால் ‘யமுனாம்பாள்புரம்’ என்று பெயரிட்டு, கோயிலில் வருமானத்துக்கும் பூஜைகள் சிறப்பாக நடைபெறவும் வழிசெய்தார்.
கோயில் துவஜஸ்தம்பத்தை அடுத்து இரு நிலைகளைக் கடந்து சென்றால் சந்தான ராமன் அருள் தரிசனம் தருகிறார். மூலவர் ராமர், லட்சுமணர்&சீதா தேவியுடன் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். ஆஞ்சநேயர் சற்று தள்ளி நின்று கொண்டிருக்கிறார்.
உற்சவர் அழகான திருமேனியுடன் லட்சுமணர்&சீதா தேவி மற்றும் சற்று தள்ளி நிற்கும் ஆஞ்சநேயருடன் காட்சி தருகிறார். பக்கத்தில் ஆலிலை கண்ணன் ரூபத்தில் ஸ்ரீராமன்! குழந்தை பாக்கியம் வேண்டுவோர், இந்த ஆலிலை ராமகிருஷ்ணனை கையில் ஏந்தி வழிபடுகிறார்கள். சந்தான ராமனை சேவித்தால் சந்தான பாக்கியம் கிடைப்பது உறுதி என்று நம்பப்படுவதால் இக்கோயில் மிகச்சிறந்த பரிகாரத்தலமாக விளங்குகின்றது. சந்தான ராமன் குழந்தை வரம் கொடுக்கும் ராமனாக இருப்பதால் பிரம்மச்சாரியான ஆஞ்சநேயர் இங்கிதம் உணர்ந்து சற்று தள்ளி நிற்பதாகவும் கூறப்படுகின்றது.
ஒரே பிராகாரம் கொண்ட பெரிய கோயில் இது. கோயிலில் நாலுகால பூஜை நடைபெறுவதுடன் பங்குனி மாதத்தில் ஸ்ரீராமநவமி உற்சவம் பத்து நாட்களுக்குக் கொண்டாடப்படுகின்றது. சூர்ய பிரபை, கருட வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம், ஹனுமந்த வாகனம் என்று ஸ்ரீராமனை வாகனத்தில் அலங்கரித்து, வீதி உலா நடைபெறும். ஒவ்வொரு மாதமும் புனர்பூச நட்சத்திரத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகின்றது. இதுதவிர நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ராமானுஜர் மற்றும் ஸ்ரீமத் நிகமாந்த தேசிகன் ஆகியோர் திருநட்சத்திர நாட்களிலும் அவ்வாறே சிறப்பு திருமஞ்சனமும் நடத்துகிறார்கள்.
இங்கு நேர்ந்து கொண்டு புத்திர பாக்கியம் பெற்றவர்கள், இக்கோயிலில் மரத் தொட்டில்களும் வெள்ளி தொட்டில்களும் கட்டுகிறார்கள்.
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதர் இக்கோயிலின் நாயகனான சந்தான ராமஸ்வாமி பெயரில் சந்தான ராமஸ்வாமி வனம் என்ற கீர்த்தனம் (ஹிந்தோள வஸந்த ராகத்தில்) பாடித் துதித்திருக்கிறார்.
கும்பகோணம்-மன்னார்குடி பேருந்து வழியில் நீடாமங்கலம் பேருந்து நிலையத்துக்கு அருகிலேயே உள்ளது, இக்கோயில்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கம்பனில் ராமன் எத்தனை ராமன்
» கம்பனில் ராமன் எத்தனை ராமன்
» புத்திரப் பேறு பெற விழையும் பெண்களுக்கான ஆலோசனைகள்
» சந்தான வரம் தரும் சங்கரன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum