தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அருள் மழை பொழியும் அறப்பள்ளீஸ்வரர்

Go down

அருள் மழை பொழியும் அறப்பள்ளீஸ்வரர் Empty அருள் மழை பொழியும் அறப்பள்ளீஸ்வரர்

Post  meenu Fri Mar 08, 2013 4:44 pm

ஆச்சர்யமாக இருக்கிறதா? அதுதான் நடைமுறை உண்மை. அதாவது, கோயில் இறைவனுக்கு பூஜை நடைபெறும் முன், இம்மீன்களுக்கு மணியடித்து பூஜை செய்கிறார்கள்! இது பல்லாண்டுகளுக்குமுன் நிகழ்ந்த ஓர் அற்புதத்தின் தொடர்ச்சிதான்!

ஒருமுறை இந்தக் கோயிலை சூறையாட சில கொள்ளையர்கள் வந்தனர். ஆற்றில் உள்ள மீன்களைப் பார்த்ததும் அவற்றை சுவைக்க வேண்டும் என்ற ஆவல் அவர்களுக்கு உண்டாயிற்று. உடனே அந்த மீன்களைப் பிடித்து, அறுத்து, பாத்திரத்தில் போட்டு சமைக்க ஆரம்பித்தனர். அப்போதுதான் அவர்களுடைய விழிகள் தெறித்து விழும்படியான அதிசயம் நிகழ்ந்தது. வெட்டி வைக்கப்பட்டிருந்த மீன் துண்டங்கள் ஒன்றாய் இணைந்து, முழு வடிவம் பெற்று, துள்ளி, ஆற்றில் குதித்து மறைந்தன. இதைப் பார்த்த கொள்ளையர்கள் கதி கலங்கி, பயந்துபோய் அந்த இடத்தை விட்டே ஓடி விட்டனர். அறுபட்ட மீன்கள் மீண்டும் பொருந்தியதன் அடையாளமாக மீன்களின் முதுகில் கரிய கோடு இருப்பதை இன்றும் காணலாம்.

சங்க இலக்கியத்திலும், வரலாற்று சான்றுகளிலும் முக்கிய இடம் பிடித்திருக்கிறது கொல்லிமலை. எப்போதும் பனி பொழிந்தபடி இருக்கும் அந்த இடமே ஏகாந்தமானதுதான். அங்கே அறப்பள்ளீஸ்வரம் எனும் அழகுக் கோயில், அருள் ஒளிர அமைந்திருக்கிறது.

சேலம் மற்றும் நாமக்கல் நகரில் இருந்து கொல்லிமலைக்கு பேருந்து வசதி உண்டு. மலையின் மேற்குப் பக்கத்தில் அமைந்துள்ள காரவள்ளியிலிருந்து 45 கி.மீ. தொலைவில் அறப்பள்ளி அமைந்துள்ளது.

தமிழகத்தில் சமண சமயம் உயர் நிலையில் இருந்த போது இந்தக் கோயிலும் சமணத் தலமாகத்தான் இருந்தது. பிறகு சைவக் கோயிலாக மாற்றப்பட்டது. கோயிலை ஒட்டியுள்ள பாறையில் சமண தீர்த்தங்கரர் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. கி.பி. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த திருஞான சம்பந்தரும், திருநாவுக்கரசரும் தத்தம் பதிகங்களில் அறப்பள்ளியை குறிப்பிட்டுள்ளனர்.

அருணகிரிநாதர் தம் திருப்புகழால் இங்குள்ள முருகப் பெருமானைப் பாடியுள்ளார்.

வளப்பூரில் அமைந்துள்ள அறப்பள்ளீஸ்வரர் கோயிலைச் சுற்றிலும் மதில் சுவர். ஒரே ஒரு நுழைவாயில். நுழைவாயிலுக்கு கோபுரம் கிடையாது. கொடிமரம், பலிபீடம், நந்தி, மகாமண்டபம், அர்த்த மண்டபம், அந்தராளம், கிழக்கு நோக்கிய மூலவர் கருவறை என எல்லாமே ஆகம முறைப்படி வடிவமைக்கப்பட்டுள்ளன.

சோழர் கால கட்டிடச் சிறப்பு விளங்கும் கோயில் இது. இறைவன் அறப்பள்ளீஸ்வரரையும், அம்மன் தாயம்மையையும் முறையே தர்மகோசீஸ்வரர், தர்மகோசீஸ்வரி என்று அழைக்கின்றனர். அர்த்த மண்டபத்தின் இடப்பக்கம் உள்ள அம்மன் கருவறை, தெற்கு நோக்கி அமைந்துள்ளது. சமீபத்தில் நடந்த திருப்பணியால், அம்மன் கருவறை சற்று பின்நோக்கி அமைக்கப்பட்டு, அர்த்த மண்டபம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

கோயில் பிராகாரத்தின் தென் பகுதியில் ஆறுமுகப் பெருமான் சந்நதி. கருவறை சுற்றுப் பிராகார தேவகோட்டத்தில் தெற்கே தட்சிணாமூர்த்தியும், மேற்கே லிங்கோத்பவரும், வடக்கே பிரம்மாவும் வீற்றிருக்கின்றனர். கருவறையின் பின்புறம் விநாயகர், காசி விஸ்வநாதர் மற்றும் விசாலாட்சிக்கு தனித் தனியாக சந்நதிகள். கருவறை விமானம் வட்ட வடிவமாக மூன்று நிலைகளைக் கொண்டது. கருவறைக்கு வடக்கில் சண்டேஸ்வரர் சந்நதி. மகா மண்டபத்தில் நவகிரகங்களுக்கான மேடை உள்ளது. சமயக்குரவர் நால்வருக்கும் சிலைகள் உள்ளன. மூன்று கால வழிபாடும் உண்டு.

கருவறையைச் சுற்றிலும், கருவறை நிலைக்காலிலும் உத்தம சோழனுடைய கல்வெட்டுகள் உள்ளன. இப்பகுதியிலுள்ள 12 ஊர்களுக்கும் செம்பியன் மாதேவியார் 100 கழஞ்சு பொன் கொடுத்து அதிலிருந்து கிடைக்கும் வட்டியை வைத்து கோயிலுக்கு பூஜை செய்யுமாறு ஏற்பாடு செய்ததாக கல்வெட்டு கூறுகிறது. பரகேசரி என்ற பெயரில் உள்ள கல்வெட்டுகள் சுந்தர சோழனைப் பற்றி குறிப்பிடுகிறது. அறப்பள்ளீஸ்வரருக்கு கொடுக்கப்பட்ட தேவதானங்கள், கோயில் ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்ட ஊதியம், பூஜை விளக்கேற்றுதல், திருவிழா, நந்தவனம் முதலியன தொடர்பாக அநேக கல்வெட்டுகள் உள்ளன.

கி.பி. 1580-ல் மதுரையை ஆண்ட முத்து வீரப்பநாயக்கர் காலத்தில், சேர்ந்தமங்கலம் பாளையக்காரர் கோனூர் ராமச்சந்திர நாயக்கரின் மகன் இம்முடி ராமச்சந்திர நாயக்கர், அறப்பள்ளீஸ்வரர் - நாச்சியார் திருக்கோயில்களைப் பழுது பார்த்து சாதாரண ஆண்டு மாசி மாதம் குடமுழுக்கு செய்ததாக ஒரு கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த குடமுழுக்கின் போது குத்தமலை நாட்டிலுள்ள அசை என்ற ஊரை கோயிலுக்கு இறையிலியாக அளித்துள்ளார். அந்த அசையூர், இப்போது அறப்பள்ளீஸ்வரர் கோயிலுக்கு தென்மேற்கில் அசைக்காடு என்ற பெயரில் உள்ளது.

18-ம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த அம்பலவாணக் கவிராயர், Ôஅறப்பள்ளீஸ்வர சதகம்Õ என்ற நூறு பாடல்களைக் கொண்ட நூலைப் பாடியுள்ளார். சதக நூலில் சிறந்ததாக இந்நூலை சொல்கிறார்கள். உறையூர் பசிப்பிணி மருத்துவர் அருணாசல முதலியார் அண்மைக் காலத்தில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் Ôஅறப்பள்ளீஸ்வரர் அந்தாதிÕ என்ற நூலை வெளியிட்டார். இந்தக் கோயிலை ஒட்டி ஓடும் ஆற்றுக்கு பெயரே கோயிலாறுதான்.

மலை முகட்டில் உருவாகும் சிற்றோடைகள்தான் இந்த ஆற்றில் நீரைக் கொண்டு வந்து கொட்டுகின்றன. கோயிலைச் சுற்றி மூன்று கி.மீ. தூரத்துக்கு ஆறாக ஓடி, பின் அருவியாகப் பாய்கிறது. சுமார் 150 அடி உயரத்தில் இருந்து கொட்டும் அருவிக்கு ‘ஆகாச கங்கை’ என்று பெயர். புளியஞ்சோலை சமவெளியில் ஓடும்போது ஐயாறு என்றும், சுவேத நதி என்னும் வெள்ளாறாகவும் ஓடி கடலில் கலக்கிறது.

கொல்லிமலைவாழ் மக்களுக்கு அறப்பள்ளி நாதர்தான் குலதெய்வம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum