நன்மையே செய்யும் நவகிரக நாயகர்கள்
Page 1 of 1
நன்மையே செய்யும் நவகிரக நாயகர்கள்
உலகிலேயே மிகப் புண்ணிய பூமியாக கருதப்படும், தேவர்களால் பக்தியுடன் தொழப்படும் ஒரு தலம் தமிழ்நாட்டில் உண்டு. அது தேவாரப் பாடல்க ளால் போற்றப்பட்ட, காவிரியின் தென்புற கரையில் அமைந்திருக்கும் அக்னீஸ்வரர் கோயில் ஆகும். அகத்தியர் தமது நூலில்,
‘‘நெல்லிக்காத் தங்கூராங் கோட்டூருவண்
துறையாரூர், அச்சாங் கொள்ளிக்காடுறை
யீசனைப் பணிவார் குபேரராகுவரே’’
என்கின்றார்.
அதாவது திருவாரூர் மாவட்டத்தில் விளங்கும் காவிரி நதியின் தென்கரையில் உள்ள பிரசித்தி பெற்ற புண்ணிய க்ஷேத்திரங்களான திருநெல்லிக்காவல், திருத்தங்கூர், கோட்டூர், திருவண்டுதுறை ஆகிய கோயில்கள் சூழ, நடுவில் கோயில் கொண்டுள்ள திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரன் மிகுந்த வரப்பிர சாதி. சனி தசை, சனி வக்ர கதி தோஷம், வக்ர நிவர்த்தி தோஷம், தீய கோள்களினால் சனிக்கு தோஷம் ஏற்பட்டு அதனால் ஏற்படும் தொல்லை, மூல திரிகோண, அஷ்டம, கண்டக, பாத சனி தோஷங்களினால் சொல்ல முடியாத சங்கடங்களை கொண்டவர்கள் மற்றும் திருநள்ளாறு சென்று அடிக்கடி தரிசனம் செய்தும், சனி பீடை விலகாதவர்கள் தொழவேண்டிய ஒரு புண்ணிய, சக்தி வாய்ந்த கோயில் இது.
ராஜகோபுரம் இங்கு கிடையாது. இந்த ஆலயத்தின் மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றும் மிகவும் சக்தி வாய்ந்தவை. சனி கிரகத்தினால் உண்டாகும் பீடைகள், தொழில் மந்தம், கொடிய நோய் கள், கண் பார்வை மங்குதல், சரீரத்தில் தீராத வலி உண்டாதல், அங்கக் குறைபாடு ஏற்படுதல், கல்வியில் தடை, திருமணத்திற்குப் பின் வரும் சங்க டங்கள், ஆசைகள் நிறைவேறாது போதல், திருடர்களால் பயம், ரத்தம் சிந்துதல், மாதவிடாய் கோளாறுகள் போன்றவை இந்த அக்னீஸ்வரரை நாம் அணுகினால், நம்மை விட்டு ஓடிப்போகும். இவை அனைத்திற்கும் நிவாரணம் தேடுபவர்கள் செல்ல ஒரு திவ்ய க்ஷேத்திரம் இந்த அக்னீஸ்வர க்ஷேத்திரமே.
‘‘மந்தனால் வந்த பீடை
மாயமாய் மறைந்திட யண்டுவீர்
முன்னை வினை முற்றிலுங்கரைய
முயன்று தஞ்சமடை வீரக்கினீசனையே’’
-என்கிறார் அகத்தியர்.
அக்னீஸ்வரர் மேற்கு நோக்கித்தான் அருள்பரிபாலிக்கின்றார். நெருப்புக்கு இறைவனாம் அக்னிபகவான் வந்து தங்கி தவம் செய்த புண்ணியத் தலம் இது. அக்னி தேவனால் உருவாக்கப்பட்ட மூர்த்திக்கு அக்னீஸ்வரன் என்று பிரம்மதேவன் பெயர் சூட்டினார். அக்னி தேவன் தவம் செய்த வனம் இது. எனவே, இத்தலத்திற்கு கொள்ளிக்காடு என்று பெயர் உண்டாயிற்று. கொள்ளி என்றால் நெருப்பு எனப் பொருள். அக்னீஸ்வரனை தேவர்களும் சித்தர்களும் ‘தீவண்ணநாதா’ என கொண்டாடுகின்றனர். எனவே இவருக்கு தீவண்ணநாதர் என்ற மற்றொரு பெயரும் உண்டு.
மூலவரை சற்று உற்றுப் பார்த்தால் உண்மை தெரியும். ஆம். சிவபெருமானாம் தீவண்ணநாதரின் திருமேனி சற்று சிவப்பு ஒளி படர்ந்து காணப்படும். இங்குள்ள அம்பிகை மிகுந்த வரப்பிரசாதி. கருணைக்கு, அன்பிற்கு இவரை விட வேறு ஒரு தெய்வம் இல்லை என்கிறார் சிவவாக்யரும், நந்தி தேவ ரும். தமது நூலில் நந்தி தேவர்,
‘‘பஞ்சினுமெல் லடியாளவள்
தாயினுஞ் சாலப் பரிந்து எமக்கு
வேண்டுதலெலாமீந்தெனை யொரு
பொருட்டாக்கி பொருளாக்கினளே’’
-என்கிறார்.
‘‘அம்பிகைக்கு பஞ்சினும் மெல்லடியாள் என்று பெயர். பெயருக்கேற்றார்போல, கருணை கொண்ட கண்கள், சாந்தமான கனிவான புன்னகை, மலர்ந்த முகம். அன்னையை அடைந்தாருக்கு எந்நாளும் இன்பம்’’ என்கிறார், அகத்தியர்.
‘‘குறையேதும் இனியில்லை யுனக்கு
பஞ்சினும் மெல்லடியாளை தஞ்சம் புகவே
கிட்டாததேது. துயரற்ற பேரின்பம்
பெறுதல் திண்ணமென யறி நெஞ்சே.’’
லிங்கோத்பவர் சந்நதியின் இருபுறமும் பிரம்மாவும் மகாவிஷ்ணுவும் நின்ற கோலத்தில் அருள்பரிபாலிப்பதினால், இங்கு மும்மூர்த்தி தரிசனம் பெற லாம். மூகாம்பிகை க்ஷேத்திரத்தில் மூன்று சக்திகளும் கூடப் பெற, ஆதிசங்கரர், கோயில் அமைத்துப் பின் அவர் வந்து தொழுத மூர்த்திகள் இவர் களே. கையிலே வேலுடன் விளங்கும் முருகன், இங்கு வில்லுடன் அருள்பரிபாலிப்பது மிக அற்புதம். இவரை விஸ்வாமித்ரர் ‘தனுசு சுப்பிரமணியர்’ என விவரித்து போற்றுகின்றார். தனுர் வேதத்தை ராமபிரானுக்கு போதித்த விஸ்வாமித்திரர் தொழுத மூர்த்தி இந்த தனுசு சுப்பிரமணியர்.
‘‘நடக்கப்போகும் பலன்கள் சுபிட்சமாக இருக்கவும் எல்லா மங்களங்களும் சேரவும் கொடிய நோய் தொற்றாது தடுக்கவும் வல்லவர் இந்த சுப்பிரமணி யர். பேய் பிசாசு போன்றன இவரைக் கண்ட மாத்திரத்தில் ஓடி ஒழியும். கந்தர் சஷ்டி கவசம், சண்முக கவசம் போன்றவற்றை தேய்பிறை சஷ்டி, வ ளர்பிறை நவமியில் இந்த சந்நதிமுன் பாராயணம் செய்துவர, எண்ணிய எண்ணம் ஈடேறும்’’ என்கின்றார், அகத்தியர்.
‘‘நாடிய பொருள் கைகூடும்
தேடிய யோகம் தானேயண்டும்
கிருட்டிண சட்டிகொடு சுக்கிலநவமி
தனுரேந்திய கந்தனடி கவசஞ்
செய்வருக்கே’’
எப்போதுமே நவகிரகங்கள் ஒன்றை ஒன்று பார்த்துக் கொள்வது இல்லை. ஏன் இப்படி? ஒரு ஜாதகருக்கு ஒரு கோள் என்ன நற்பலனை அல்லது துர்ப லனை தந்தது என்பது இன்னொரு கோள் அறியக்கூடாது என்ற அடிப்படை நியதியால்தான். ஆக, எல்லா இடத்திலும் நவகோள் நாயகர்கள் ஒருவரை யொருவர் பார்த்துக் கொள்வது இல்லை. ஆனால், இந்த திவ்ய க்ஷேத்திரத்தில் மட்டுமே நவநாயகர்கள் பார்வை பரிமாற்றம் செய்து கொள்கின்றார்கள். சூரியன் முதல் கேது வரை உள்ள நவ நாயகர்கள் இங்கு ‘ப’ வடிவத்தில் அமைந்து அருள்பரிபாலிப்பது சிறப்பு.
அதிக தொல்லைக்கு ஆளானவர்கள் இங்கு சென்று பிரார்த்திக்க, நவநாயகர்கள் நன்மை அதிகம் செய்வதற்காகவே அவர்களை இவ்வாறு சந்நதி கொள்ள வைத்திருக்கிறார், அக்னீஸ்வரர். மேலும் ‘‘நமது இப்பிறவி பாவங்களையும் முன்னை பிறவியில் செய்த பாவங்களையும் செம்மை வர்ணம் கொண்ட இந்த தீவண்ணநாதர் அழித்துவிடு வதினால் நவகிரக தொல்லைகள் நமக்கு குறைய ஏதுவாகும்’’ என்கின்றார் அகத்தியர்.
‘‘பேய்களுடனே மாநடம் புரியுஞ்
சுடலையின் நீறுபூசி பெரிதுடை
குணங்கொண்ட நங்கொள்ளிக்
காடரை கூடுவார் வினை நீராமே’’
நீர் என்றால் சாம்பல். நமது பாவங்கள் யாவும் சாம்பலாய் போகும் கொள்ளிக்காடுடை அக்னீஸ்வரரை தொழுதால், ஞான சம்பந்தர் சிவபெருமானின் நடனத்தை கண்ட இந்த புண்ணிய பூமியை தொழுவார் பெரும் புண்ணியரே.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நன்மையே செய்யும் நவகிரக நாயகர்கள்
» நவகிரக தலங்கள்
» நவகிரக தலங்கள்
» நவகிரக தலங்கள் நவகிரக தலங்கள்
» நோபெல் நாயகர்கள்
» நவகிரக தலங்கள்
» நவகிரக தலங்கள்
» நவகிரக தலங்கள் நவகிரக தலங்கள்
» நோபெல் நாயகர்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum