நவராத்திரி பிரம்மோற்சவம் : கருட வாகனத்தில் மலையப்பர் பவனி
Page 1 of 1
நவராத்திரி பிரம்மோற்சவம் : கருட வாகனத்தில் மலையப்பர் பவனி
திருமலை: திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கருட சேவை நேற்றிரவு நடந்தது. திருமலை ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 5ம் நாளான நேற்று காலை மலையப்ப சுவாமி மோகினி அவதாரத்திலும், கிருஷ் ணர் அலங்காரத்திலும் நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ் டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள் கோலாட்டம், தப்பாட்டம் பஜனைகளுடன் சுவாமி வீதிஉலா நடைபெற்றது. பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக கருதப்படும் கருட சேவை நேற்றிரவு கொட்டும் மழையிலும் விமரிசையாக நடந்தது. இதில், கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி மகா விஷ்ணு அலங்காரத்தில் நான்கு மாடவீதியில் பவனி வந்தார். அப்போது அங்கு திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என முழக்கமிட்டனர். மேலும், பக்தர்களுக்கு தட்டுப்பாடின்றி கிடைக்க 4 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நவராத்திரி பிரம்மோற்சவம் : பெரிய சேஷ வாகனத்தில் மலையப்பசுவாமி வீதிஉலா
» ஏழுமலையான் சிறிய சேஷ வாகனத்தில் பவனி
» தி.மலை தீப திருவிழா 4வது நாள் உற்சவம் : நாக வாகனத்தில் சந்திரசேகரர் பவனி
» கல்ப விருட்ச வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி : இன்று இரவு கருடசேவை
» திருப்பதி பிரம்மோற்சவம் : ஹனுமந்த வாகனத்தில் மலையப்ப சுவாமி உலா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum