திருத்தணியில் கந்த சஷ்டி நிறைவு : 99 வகையான மலர்களால் முருகனுக்கு லட்சார்ச்சனை
Page 1 of 1

திருத்தணி: கந்தசஷ்டி நிறைவு விழாவை முன்னிட்டு திருத்தணி முருகப் பெருமானுக்கு 99 வகையான வண்ண மலர்களால் லட்சார்ச்சனை செய்யப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 14-ம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்கியது. இதன் நிறைவு விழா நேற்று நடந்தது. திருச்செந்தூர் உள்பட எல்லா முருகன் கோயில்களிலும் நேற்று சூரசம்ஹாரம் நடந்தது. முருகன் சினம் தணிந்த இடம் என்பதால் திருத்தணியில் மட்டும் சூரசம்ஹாரம் நடப்பதில்லை. அதற்கு பதிலாக முருகனுக்கு புஷ்ப லட்சார்ச்சனை நடக்கும்.
அதன்படி, திருத்தணி மூலவர் முருகனுக்கு நேற்று புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் சஷ்டி விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பொதுமக்கள் குடும்பத்துடன் லட்சார்ச்சனை செய்து வழிபட்டனர். காவிரி மண்டபத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப் பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். சாமந்தி, ரோஜா, துளசி, கதம்பம், மல்லி, வில்வம் உள்பட 99 வகையான வண்ண மலர்களால் முருகனுக்கு லட்சார்ச்சனை செய்தனர். பள்ளி குழந்தைகள், நாதஸ்வர வித்வான்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் புகழேந்தி செய்திருந்தனர். திருத்தணி அரசு போக்குவரத்து கழக மேலாளர் குப்புசாமி, முன்னாள் அறங்காவலர் உஷா ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» திருத்தணியில் கந்த சஷ்டி நிறைவு : 99 வகையான மலர்களால் முருகனுக்கு லட்சார்ச்சனை
» கந்த சஷ்டி கொண்டாடுவது ஏன்?
» கந்த சஷ்டி விழா
» கந்த சஷ்டி விழா
» கந்த சஷ்டி விரதம்
» கந்த சஷ்டி கொண்டாடுவது ஏன்?
» கந்த சஷ்டி விழா
» கந்த சஷ்டி விழா
» கந்த சஷ்டி விரதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum