தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிறந்தது ஆங்கில புத்தாண்டு விடிய விடிய கொண்டாட்டம் : சிறப்பு பிரார்த்தனை, வழிபாடுகள்

Go down

பிறந்தது ஆங்கில புத்தாண்டு விடிய விடிய கொண்டாட்டம் : சிறப்பு பிரார்த்தனை, வழிபாடுகள் Empty பிறந்தது ஆங்கில புத்தாண்டு விடிய விடிய கொண்டாட்டம் : சிறப்பு பிரார்த்தனை, வழிபாடுகள்

Post  meenu Fri Mar 08, 2013 1:27 pm

சென்னை: மெரினா கடற்கரையில் விடிய விடிய புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டின. தேவாலயங்கள், கோயில்களில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. 2013 பிறப்பையொட்டி சென்னை மெரினா கடற்கரை விழாக்கோலம் பூண்டது. 31ம்தேதி இரவு 10 மணிக்கே காமராஜர் சாலை சிவாஜி சிலையருகே உள்ள மணிக்கூண் டில் ஏராளமானோர் குவிந்தனர். 1ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு மணிக்கூண்டு ஒலித்த தும் அதிர்வேட்டுகள் முழங்கின. வானில் மத்தாப்புகள் ஜொலித்தன. கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் புத்தாண்டு வாழ்த்துக்களை உரத்த குரலில் தெரிவித்தனர். அனைத்து தரப்பினருக் கும் வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.

சிலர் மற்றவர்கள் மீது வண்ணப்பொடிகளை வீசியும், வண்ணப்பொடி கலந்த நீரை தெளித்தும், இன்னும் சிலரோ பீரை தெளித்தும் வாழ்த்து தெரிவித்தனர்.
சில இளைஞர்கள் ஆபத்தான முறையில் பைக் ரேஸ் நடத்தியும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆங்காங்கே பேரி கார்டு அமைக்கப்பட்டு போக்குவரத்து மாற்றப்பட்டது. அசம்பாவிதங்களுக்கு இடம் கொடுக்காமல் விடிய விடிய புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றன. தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை: சாந்தோம் மற்றும் பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி தேவாலயங்களில் புத்தாண்டு நள்ளிரவு பிரார்த்தனைகள் நடைபெற்றன. பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்ததோடு சாந்தியும், சமாதானமும் நிலவ வேண்டிக் கொண்டனர்.

அதேபோல பூக்கடை அந்தோணியார் சர்ச், கதீட்ரல், பெரம்பூர் சர்ச், ராயப்பேட்டை சி.எஸ்.ஐ சர்ச், லஸ் சர்ச் உள்ளிட்ட தேவாலங்கள், பேராலயங்களில் விடிய விடிய பிரார்த்தனைகளும், புத்தாண்டு திருப்பலிகளும் நடைபெற்றன. காலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலியும் நடந் தது. மேலும் பன்மொழி திருப்பலிகளும் நடைபெற்றன. ஏராளமான கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து திருப்பலியில் பங்கேற்றனர். மேலும் சென்னை மாநகரில் உள்ள கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. வடபழனி முருகன் கோயிலில் அதிகாலை 3 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து சர்வ அலங்காரம் நடந்தது. அதிகாலை 4 மணிக்கு வெள்ளி அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

தி.நகர் திருப்பதி தேவஸ்தானத்தில் புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை 2 மணியி லிருந்து பெருமாள் சேவை சாதித்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோயிலில் அதிகாலை 4 மணி முதல் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. ஆதிலட்சுமி, தான்ய லட்சுமி, தைரிய லட்சுமி ஆகிய சன்னதிகளில் சிறப்பு அர்ச்சனைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆதிலட்சுமி முதல் அனைத்து லட்சுமிகள் சன்னதிகள், பெருமாள், மகாலட்சுமி சன்னதிகள் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. அதிகாலையில் குவிந்த பக்தர்கள் தங்கள் பெயருக்கு சிறப்பு அர்ச்சனைகள் செய்து இறையருள் பெற்றனர்.

மயிலாப்பூர் முண்டக கண்ணியம்மன் கோயிலில் 4 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தங்க கவசம் அணிவிக்கப்பட்டு பூஜைகள், மகாதீபாராதனை நடந்தது. ஏராளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். புத்தாண்டு பிறப்பு சிறப்பு பூஜைகளை முன்னிட்டு கோயில் பிரகாரத்தில் பழப்பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. பக்தர்களுக்கு அம்மன் உருவம் பதித்த வெள்ளி டாலர் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மூலவருக்கு அதிகாலை 4 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. புத்தாண்டு பிறப்பையொட்டி கோயிலில் முன்னேற்பாடாக பக்தர்கள் வரிசையாக செல்ல பேரிகார்டு அமைக்கப்பட்டிருந்தன. பக்தர்கள் தங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து வணங்கினர். பூங்கா நகர் தங்கசாலைத்தெரு ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் சுவாமிக்கு சந்தனக்காப்பு நடந்தது.

திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் நள்ளிரவு 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம், மகாதீபாராதனை நடந்தது. குன்றத்தூர் முருகன் கோயிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டது. முருகன், வள்ளி, தெய்வானைக்கு நள்ளிரவு 12 மணிக்கு மகா அபிஷே கம் நடந்தது. தொடர்ந்து புஷ்ப அலங்காரமும், மகா தீபாராதனையும் நடந்தது. முக்கிய கோயில்கள், தேவாலயங்கள், பேராலயங்களில் சிறப்பு வழிபாடுகள், பிரார்த்தனைகள் நடைபெற்றன. புத்தாண்டை முன்னிட்டு 108 வாகனங்கள், அவசர போலீஸ் வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள் ரோந்து மற்றும் கண்காணிப்பில் இருந்தன. இதனால் சிறு காயம் பட்டவர்களும் உடனுக்குடன் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். நட்சத்திர ஓட்டல்கள், கிழக்கு கடற்கரை சாலை ரிசார்ட்டுகளில் விடிய விடிய கோலாகல கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  பிறந்தது ஆங்கில புத்தாண்டு விடிய விடிய கொண்டாட்டம் : சிறப்பு பிரார்த்தனை, வழிபாடுகள்
» பிறந்தது ஆங்கில புத்தாண்டு விடிய விடிய கொண்டாட்டம் : சிறப்பு பிரார்த்தனை, வழிபாடுகள்
» புத்தாண்டு கொண்டாட்டம் : தேவாலயம், கோயில்களில் சிறப்பு வழிபாடு
» விடிய விடிய பிரபுதேவா பிறந்தநாள் கொண்டாட்டம்!
» விடிய விடிய சொல்லித் தாருங்கள்...!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum