தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வள்ளலார் என்ற ஆன்மிக விஞ்ஞானி!

Go down

வள்ளலார் என்ற ஆன்மிக விஞ்ஞானி! Empty வள்ளலார் என்ற ஆன்மிக விஞ்ஞானி!

Post  meenu Fri Mar 08, 2013 1:19 pm


இறைவன் ஒளிமயமானவன், அவன் படைத்த மனிதனும் ஒளிமயமானவன். இதை உணர்த்துவதுதான் வடலூரில் வள்ளலார் நிறுவிய ஞானசபை. இதன் தெற்கு வாயில் வழியாக உள்ளே சென்றால் வலதுபுறம் பொற்சபை. இடதுபுறம் சிற்சபை. பஞ்ச பூத தத்துவங்களை குறிக்கும் ஐந்து படிகளை கடந்தால் சதுரபீடம். அதில் வள்ளலார் ஏற்றி வைத்த தீபம் உள்ளது. அதன் முன் 7 அடி உயரம், 4 அடி அகலம் கொண்ட நிலைக் கண்ணாடி. நிலைக் கண்ணாடிக்கு முன்னால் பல வண்ணங்களில் ஏழு திரைகள்.

இந்த திரைகளை நீக்கி, நிலைக் கண்ணாடிக்கு பின் உள்ள தீபத்தை தரிசிப் பதே ஜோதி தரிசனம். கருப்புத் திரை மாயையையும் நீலத் திரை உயரிய நோக்கங்களுக்கு ஏற்படும் தடையையும் பச்சைத் திரை எல்லா உயிர்களிடமும் அன்பு, கருணை உண்டு என்பதை அறியாதிருத்தலையும் சிவப்புத் திரை உணர்ச்சிகளை சீரமைக்காததையும் பொன் திரை ஆசையால் உண்டாகும் துன்பத்தையும் வெள்ளைத் திரை அகங்காரத்தையும் இந்த ஆறு வண்ணங்களும் இணைந்த ஏழாவது திரை உலகப் பற்றுகளை சீரமைத்தல் என்ற தத்துவ உண்மையையும் உணர்த்துகின்றன. இத்தனை திரைகளையும் நீக்கி அகத்தில் ஒளி காண்பதே வள்ள லார் வகுத்த வழி.

நமது உடலில் உள்ள ஏழுவகை சுரப்பிகள் வெளியிடும் திரவம், ரத்தத்தில் கலந்து வாதம், பித்தம், சிலேத்துமம் ஆகிய மூன்று நாடிகளை இயக்குகி றது. இதன் மூலம் உடலுக்கு தேவையான புரதம், கொழுப்பு, மாவு சத்துகளை சமப்படுத்தி சீரான வெப்ப நிலையில் நமது உடலை ஆரோக்கியமாக பாதுகாத்து வருகிறது. இந்த ஏழு சுரப்பிகளையும் ஏழு வண்ணத் திரைகளாக நமக்கு காட்டுகிறார் வள்ளலார். இயற்கைக்கு புறம்பாக, முறையற்ற பழக்க வழக்கங்களை நாம் கடைபிடிக்கும்போது, இந்த சுரப்பிகளின் தன்மை மாறி உடல் நலக்கேடுகள் உண்டாகின்றன. தேவையற்ற எண்ணங்களையும், ஆசைகளையும் நமது மனத்தில் இருந்து அகற்ற வேண்டும். அதற்கு மனத்தூய்மை வேண்டும். இந்த மனத்தூய்மையை தியானத்தால் மட்டுமே அடைய முடியும். இதையே வள்ளலார் ‘ஆன்ம விசாரணை’ என்கிறார். மனம் ஒருமைப்படும் பயிற்சிக்கு சுவாசம் உறுதுணையாக இருக்க வேண்டும்.

இதை விளக்கும் வகையில் ஞானசபையை வடிவமைத்து, ஏழு திரைகளை நீக்கிய பின் நிலைக் கண்ணாடி வழியாக ஜோதி தரிசனத்தை உருவாக்கித் தந்துள்ளார், வள்ளல் பெருமான். வான்வெளியில் சூரியன் வடகிழக்காக சஞ்சரிக்கிற காலம் உத்தராயண காலம் என அழைக்கப்படுகிறது. இது தை முதல் நாளில் தனது பயணத்தை துவக்குகிறது. இந்த கால கட்டத்தில் சூரிய பிரகாசம் அதிகரிக்கும். தைப்பூசம், பௌர்ணமி தினத்தில்தான் வரும். அன்றைய தினம் காஸ்மிக் எனர்ஜி எனப்படும் மெய்காந்த அலைகளின் தாக்கம் அதிகமாக இருக்கும். தைப்பூசத்தன்று அதிகாலையில் கிழக்கில் சூரியனும் மேற்கில் முழு நிலவும் ஞானசபை நடுவில் உள்ள ஜோதியும் ஒரே நேர் கோட்டில் அமையும். தைப்பூச தினத்தில் மட்டுமே இது நிகழும்.

அதனால்தான் அன்றைய தினம் அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. வள்ளலார் என்கிற ஆன்மிக விஞ்ஞானி, ‘‘ஆன்ம விசாரணை என்ற தியானத்தை தினமும் செய்து வந்தால் மெய்காந்த அலைகளை பெற முடியும்’’ என வலியுறுத்துகிறார். வள்ளல் பெருமான் இவ்வுலகை நீத்தது ஓர் அற்புதம். வடலூரிலுள்ள ஸித்தி வளாகத்தின் ஓர் அறைக்குள் போய் தாளிட்டுக்கொண்டார்.

அதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும் உணவு, பிறகு அதிலும் பாதியளவு, கால்பாகம் என்று தம் ஆகாரத்தைக் குறைத்துக்கொண்டே வந்தார். பிறகு உணவை முற்றிலுமாக நிறுத்திவிட்டு வெறும் கீரை மட்டும் உண்டு, பிறகு அதுவும் போய் குடிநீர்மட்டுமே அருந்தி வந்தார். தம் இழப்புக்குத் தயாராகும்படி சீடர்களைப் பக்குவப்படுத்தினார். 1874ம் ஆண்டு, ஜனவரிமாதம் 30ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு அவர் முற் றிலுமாக உடலோடு மறைந்துபோனார். சென்னை-கும்பகோணம் சாலையில், கடலூர் மாவட்டம், வடலூரில் இருக்கிறது வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபை.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum