முன்னோர் ஆசியால் மங்கலங்கள் நிகழும்
Page 1 of 1
முன்னோர் ஆசியால் மங்கலங்கள் நிகழும்
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் தாலுகாவில் மங்கலம் பேட்டையிலிருந்து 6 கி.மீ. தொலைவில் இருக்கிறது எடைச்சித்தூர் அய்யனார் கோயில். மங்கலம்பேட்டையிலிருந்து ஆட்டோ வசதிகள் இருக்கின்றன. சுழலும் கற்பூரத்தட்டின் வெளிச்சத்தில், கருவறையில் இருக்கும் அய்யனாரைப் பார்க்கும் போது கொள்ளுத்தாத்தாவைப் பார்ப்பது போன்ற ஒரு அச்சம் கலந்த மரியாதையும், அன்பும் ஏற்படுவது உண்மை. ‘‘இந்த அய்யனாருக்கு வேண்டிக்கிட்டு, ஆலயத்தில் கற்சிலையாக இருக்கும் யானைக்கு அபிஷேகம் செஞ்சா, நம்ம குறைய தீர்க்க இந்த யானைல ஏறி அய்யனார் நம்ம வீடு தேடி வருவாங்கறது எங்க நம்பிக்கை. இந்த கோயில்ல திருட வந்தவன் பார்வைய அய்யனார் பறிச்சிட்டார்.
அவன் தன் தப்ப உணர்ந்து மன்னிப்பு கேட்டதும் பார்வை திரும்ப கிடைச்சிது. அதுக்கு நன்றி தெரிவிக்கிற விதமா வெச்சது தான் இந்த நூற்றுக் கணக்கான குட்டி கல்யானைங்க. இந்த கிராமத்த சுத்தி இருக்கற மக்கள் எந்த நல்லது கெட்டதுன்னாலும் அய்யனாரு காதுல போடாம எதுவும் செய்ய மாட்டாங்க” என்கிறார் கோயில் பூசாரி. பணம், பொருள், நிலம் என பிறரால் ஏமாற்றமடைந்தவர்கள் இவரிடம் முறையிட்டு தீர்வு காண்கிறார்கள் என்பது கண்கூடு.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» முன்னோர் ஆசியால் மங்கலங்கள் நிகழும்
» நிகழும் காதல் வருடம்
» மங்கலங்கள் அருள்வார் மங்கள சனீஸ்வரர்
» மங்கலங்கள் பொங்கிப் பெருகச் செய்யும் மாதங்கி
» முன்னோர் ஆசி வேண்டுமா?
» நிகழும் காதல் வருடம்
» மங்கலங்கள் அருள்வார் மங்கள சனீஸ்வரர்
» மங்கலங்கள் பொங்கிப் பெருகச் செய்யும் மாதங்கி
» முன்னோர் ஆசி வேண்டுமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum