கடவுள் அவதாரம் எடுப்பாரா ரஜினி?
Page 1 of 1
கடவுள் அவதாரம் எடுப்பாரா ரஜினி?
இந்த தலைப்பே தப்பு. ரஜினி இப்போதே ஏறக்குறைய கடவுள்தான், பலருக்கு. நூறாவது படத்தில் ஸ்ரீராகவேந்திரராக நடித்தார். பாபாவில் வாழும் கடவுள் பாபாவின் அருள் பெற்றவராக. கோச்சடையானின் சிவ தாண்டவன் போஸ் பிரபலம்.
இந்நிலையில் மீண்டும் கடவுளாக நடிக்க அழைப்பு வந்திருக்கிறது. அழைப்பு தந்தவர் அக்சய் குமார்.
அக்சய் குமார் தயாரித்து சிறிய வேடத்தில் நடித்திருக்கும் ஓ மை காட் படம் செப்டம்பர் 28 வெளியாகிறது. ஏ டிவைன் காமெடி என்று படத்தை விளம்பரப்படுத்தியிருக்கிறார்கள். கதை இந்த கேப்சனுக்கு நெருக்கமானது.
கன்ஜி பாய் என்பவர் தீவிர கடவுள் பக்தர். பழங்கால பொருட்கள் விற்பனையகம் ஒன்றை நடத்தி வருகிறார். ஒருநாள் பெரும் சூறாவளி கடையை பிரித்துப் போட்டு விடுகிறது. பொருட்கள் அனைத்தும் நாசம். தீவிர பக்தனான தனக்கே இப்படியா என்று கடவுளை மறுக்கவும், அதனை தீவிரமாக செயல்படுத்தவும் ஆரம்பிக்கிறார் கன்ஜி. ஒருகட்டத்தில் அவருக்கு கிருஷ்ணரே நேரில் வந்து காட்சி தருகிறார்.
இந்தக் கதை குஜராத்தி நாடகமான Kanji Virrudh Kanji மற்றும் இந்தி நாடகமான Kishen vs Kanhaiya இரண்டையும் தழுவி எழுதப்பட்டது. இதில் முக்கியமான கன்ஜி வேடத்தில் பரேஷ் ராவலும், கிருஷ்ணராக அக்சய் குமாரும் நடித்துள்ளனர்.
படம் வெளிவரும் முன்பே ரீமேக் ரைட்ஸுக்கு கடும் போட்டி. ரஜினி நடித்தால் தமிழ் ரீமேக் உரிமையை தருகிறேன் என்று அழைப்பையும், ஆஃபரையும் ஒரே வார்த்தையில் தெரிவித்திருக்கிறார் அக்சய்.
இன்னொரு குசேலனுக்கு ரஜினி சம்மதம் தெரிவிப்பார் என்று நினைக்கிறீர்கள்...?

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இயக்குநர் அவதாரம் எடுப்பாரா ரஹ்மான்
» விநாயகர் 12 அவதாரம்
» பரசுராம அவதாரம்
» தன்வந்திரி அவதாரம்
» ஜலமூர்த்தி அவதாரம்
» விநாயகர் 12 அவதாரம்
» பரசுராம அவதாரம்
» தன்வந்திரி அவதாரம்
» ஜலமூர்த்தி அவதாரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum