காளைக்கு மரியாதை
Page 1 of 1
காளைக்கு மரியாதை
சிவபெருமானின் உற்சவ வாகனம் காளை என எல்லோருக்கும் தெரியும். ஒருமுறை சிவபெருமான் காளையிடம், பூலோகம் போய் தினம் எண்ணெய் குளியலுடன், மாதமொருமுறை உணவுண்ணுங்கள் என சொல்லி வாவென அனுப்பினாராம். தினமும் உணவுண்ணுங்கள், மாதமொருமுறை எண்ணெய் குளியலிடுங்கள் என்று பூலோகவாசிகளிடம் மாற்றிச் சொல்லிவிட்டு திரும்பிய எருதைக் கண்டு சிவன் கோபமுற்றாராம். செய்த தவறுக்கு பரிகாரமாக மனிதர்களிடம் போய் காலம் முழுக்க பாடுபடுவென சிவன் சாபமிட்டதாய் கதையுண்டு. எனவேதான் இன்றும் மாடு மனிதனுக்கு மாடாக உழைக்கிறதென்பர். மாட்டுப்பொங்கலில் இந்த உழைக்கிற ஜீவனை வழிபட்டால் வரும் காலங்களில் வேளாண்மை செழிக்குமென்ற ஐதீகம் இருக்கிறது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மரியாதை ராமன் கதைகள்
» மரியாதை ராமன் கதைகள்
» ஹரிதாஸுக்கு போஜ்பூரியில் மரியாதை
» மரியாதை ராமண்ணா ரீ-மேக்கில் சந்தானம்
» மரியாதை ராமனின் மகத்தான தீர்ப்புகள்
» மரியாதை ராமன் கதைகள்
» ஹரிதாஸுக்கு போஜ்பூரியில் மரியாதை
» மரியாதை ராமண்ணா ரீ-மேக்கில் சந்தானம்
» மரியாதை ராமனின் மகத்தான தீர்ப்புகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum