ஒருவர் மீது சுமத்திய வீண் பழிக்கு என்ன பிராயச்சித்தம்?
Page 1 of 1

அறிந்தும் அறியாமலும் சில நேரங்களில் பிறர் மீது வீண் பழி சுமத்துவதற்கு நாம் காரணமாகி விடுகிறோம். பின்பு அதற்கு என்ன பிராயச்சித்தம் செய்யலாம் என்ற வருத்தம் அனைவருக்கும் இருக்கும். இதற்கு மகான் ஒருவர் எளிய வழி ஒன்றைக் கூறுகிறார்... தலைசிறந்த மகான் ஒருவரிடம் வந்த ஒருவன், சுவாமி! நான் ஒருவர் மீது வீணாக பழி சுமத்திவிட்டேன். என் மனசாட்சி இப்போது உறுத்துகிறது. நான் செய்த தவறுக்கு ஏதாவது பிராயச்சித்தம் இருந்தால் கூறுங்கள் சுவாமி என்று கூறினான். அவனையே சிறிது நிமிடங்கள் உற்றுப் பார்த்த சுவாமி, ஒரு காகிதத்தை எடுத்து பல துண்டுகளாக கிழித்தார்.
அதை அவனிடம் கொடுத்து, நாளை காலை இது ஒவ்வொன்றையும் ஒவ்வொருவரது வீட்டு வாசலிலும் வைத்து விட்டு வா என்று கூறினார். அவ்வாறே செய்து விட்டு வந்தவன், இப்போது என் பாவம் தொலைந்திருக்கும் அல்லவா? என்று வினவினான். சிறிது நேரம் கழித்து, நீ இன்னொரு வேலை செய்! ஒவ்வொரு வீட்டு வாசலிலும் வைத்த காகித துண்டுகளை மீண்டும் எடுத்து வா என்று கூறினார்.
இதைக் கேட்டு திகைத்த அவன், என்ன சுவாமி கூறுகிறீர்கள் காற்றில் அவையெல்லாம் பறந்து போயிருக்குமே என்றான். மகனே! இப்படித்தான் ஒருவர் மீது சுமத்திய பழியும்; காகிதத்துண்டு போல் உன் வாயிலிருந்து வந்த வார்த்தையும் திரும்ப வராது. அதற்காக கவலைப்படாதே! நீ மனப்பூர்வமாக வருந்தி கடவுளிடம் மன்னிப்புக் கேள். அவர் எல்லையற்ற கருணை கொண்டவர். நீ செய்த பாவத்தையும் அவர் பறந்தோடச் செய்வார். எனவே செய்த தவறுக்கு மனப்பூர்வமாக வருந்தி கடவுளிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» திருமண தடை, வீண் வழக்குகளை ஏற்படுத்தும் சர்ப்ப தோஷம் நீங்க என்ன பரிகாரம்?
» ஒருவர் மீது இருவர் சாய்ந்து முக்கோண காதல்கதை அல்ல
» ஒருவர் வாய்ப்பை ஒருவர் தட்டிப் பறிக்கும் நயன்தாரா – த்ரிஷா!
» எனது வீட்டை, ஊரில் உள்ள செல்வாக்கான படை பலமும், பணபலமும் மிக்க ஒருவர் அபகரிக்க முயலுகிறார். அதற்காக அவர் அனைத்து தவறான வழிகளையும் கையாளுகிறார். நான் வீட்டை தக்க வைத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?
» “பழிக்கு பழி வாங்கணும் சாமி…”

Permissions in this forum:
You cannot reply to topics in this forum