இறைவனின் கருவறை இருட்டாக இருப்பது ஏன்?
Page 1 of 1
இறைவனின் கருவறை இருட்டாக இருப்பது ஏன்?
வெளிச்சமான பகுதியில் வெளிச்சத்தைப் பார்ப்பது அவ்வளவு சந்தோஷம் தராது. ஒரு கோயில் திருவிழா நடக்கிறதென்று வைத்துக் கொள்வோம். நம் மனம் அலங்கரிக்கப்பட்ட பூக்களையும், மாலைகளையும், வண்ண விளக்குகளையும் காண்பதிலேயே மனம் லயித்திருக்கும். கச்சேரிகள், பாட்டுகள் என அமர்க்களப்பட்டு போயிருப்போம். ஆனால் இருட்டாக இருக்கின்ற கருவறையில் எண்ணெய் தடவிய அந்த கருங்கல் சிலைக்கு முன்பு கற்பூர ஆரத்தியோ அல்லது நெய் விளக்கோ காட்டுகிற பொழுது கண்கள் பளபளக்க உதடுகள் மினுமினுக்க அதனுடைய உயரமும் அகலமும் தெரியவர, நம் கண்ணுக்குள் தனியாக அந்த உருவம் காட்சியளிக்கிறது. இருட்டில் ஒளியை தரிசிப்பது என்பது இன்னும் நெருக்கமாக மனதை அங்கு கொண்டு போய் வைக்கிறது. நம் முன்னோர்கள் மிகவும் கெட்டிக்காரர்கள். எதனால் உங்கள் மனம் ஒன்றாகக்கூடும் என்பதை நன்றாக கவனித்து உங்களுக்குச் சொல்லி இருக்கிறார்கள்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கருவறை கருவறை
» இறைவனின் இருப்பிடம்
» இறைவனின் வடிவங்கள்-(அமிர்தானந்தமயி
» இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?
» இறைவனின் பெருமை
» இறைவனின் இருப்பிடம்
» இறைவனின் வடிவங்கள்-(அமிர்தானந்தமயி
» இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?
» இறைவனின் பெருமை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum