வாழ்வை வளமாக்கும் திசை, வடக்கு திசையே!
Page 1 of 1
வாழ்வை வளமாக்கும் திசை, வடக்கு திசையே!
நான்கு முக்கிய திசைகளுடன், நான்கு கூட்டு திசைகளும் ஆக மொத்தம் 8 திசைகளும் அஷ்டதிக்குகள் எனப் பெயர் பெறும். 4 முக்கிய திசைகளான கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு மட்டுமே நடைமுறையில் எல்லோராலும் அறியப்பட்டுள்ளது. கூட்டு திசைகளான வடகிழக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு மற்றும் வடமேற்கு ஆகியவை பண்டிதர்களாலும் வாஸ்து நிபுணர்களாலும் பேசப்பட்டு வருகின்றன. தமிழகத்தில், ஏன், இந்தியாவிலேயே வடக்கு திசையைக் குறிப்பிட்டோ, சூரியன் உதிக்கும் கிழக்கு திசையை அடிப்படை ஆதாரமாகக் கொண்டோ மனைகள் பிரிக்கப்படுவதில்லை. விதி விலக்காக சில இடங்களில் நடைபெறுகின்றன. புதுச்சேரி, சண்டிகர் போன்ற நகரங்கள் வடக்கு, கிழக்கு திசைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
இப்படி காந்தபுலனையோ, சூரியன் உதிக்கும் திசையையோ வைத்து மனைகள் பிரிக்கப்படும்போது அவை சிறப்பாக இருக்க வாய்ப்பு உள்ளது. இதை நில உரிமையாளர்கள் தெரிந்துகொண்டு செயல்படும்போது அனைவருக்கும் நல்ல பலன்கள் கிடைக்கும். கிழக்கு, மேற்கு திசைகளை பற்றி அறிந்துகொண்ட நாம் இப்போது வடக்கு திசையைப் பற்றி தெரிந்து கொள்வோம். வடக்கு திசை பெரும்பாலோருக்கும் மிகவும் பரிச்சயமானதுதான். காந்தமுள் எப்போதும் வடக்கு நோக்கியே இருக்கும் என்பதும் வடக்கில் தலை வைத்து தூங்காதீர்கள் என்ற சம்பிரதாயம் நடப்பில் இருப்பதாலும் நமக்கு பரிச்சயமானதுதான்.
பூமியானது காந்த புலனால் சூழப்பட்டிருப்பதால் காந்தத் தன்மை உடையதாக இருக்கிறது. காந்த புலம் வடக்கில் 0 டிகிரியில் உச்ச கட்டமாக ஆரம்பித்து நேர்கோட்டில் பாய்ந்து தெற்கில் 0 டிகிரியில் முடிவடைகிறது. இதனால்தான் காந்த முள் வடக்கு நோக்கியே இருக்கிறது. இதையே பயன்படுத்தி கப்பல், விமானம் போன்றவை அட்சரேகை, தீர்க்க ரேகையைக் கண்டுபிடித்து சரியான இடத்தை அறிந்துகொள்ள முடிவதால் சரியான இடம் சென்று சேர்கின்றன.
ஆக, வடக்கு என்பது பல வகையிலும் சிறப்புற்றதாக இருக்கிறது.
சிறப்பு இயல்புடைய வடக்கு மனை:
வடக்கு தாழ்வாகவும் தெற்கு மேடாகவும் இருப்பது.
வடக்கு திசையில் கிணறு, குளம், ஆறு, கடல் போன்றவை இருப்பது.
தெற்கைவிட வடக்கு திசை அளவு நீண்டு இருப்பது.
வடக்கிலுள்ள சாலை கிழக்காக சரிவாக செல்வது.
வடக்கு சாலை, மனையைவிட தாழ்வாக இருப்பது.
வடக்குமனை கெடு பலனை கொடுக்கும் நிலை:
வடக்கு உயரமாகவும் குன்று அல்லது மலைகளைக் கொண்டதாக இருப்பது.
வடக்கு சாலை உயரமாக இருப்பது.
தெற்கில் கடல், ஆறு அல்லது குளம் கொண்டதாக இருப்பது.
வடக்கு திசையை நோக்கிய மனையும் காந்தப் புலனை பார்த்த மனையாக இருப்பதால் பல சிறப்புகளை பெற்றதாகவே இருக்கிறது. வடக்கு மனையின் மூலம் பெண்களைப் பற்றியும் பொருளாதார ஏற்றம், பதவிகளில் உயர்வு பற்றியும் தெரிந்துகொள்ள முடியும். வடக்கு மனையில் தென்மேற்கு பாகத்தில் கட்டடத்தை அமைக்கும்போது அவ்வீட்டிலுள்ள பெண்கள் சிறப்பு பெறுவார்கள்; பெரும்புகழ் அடைவார்கள்; அரசியலில் பங்கு கொள்வார்கள்.
கேரள மாநிலம் தெற்கே சிறுத்தும் வடக்கே பெருத்தும் இருப்பதும் மேற்கே மலையைக் கொண்டு கிழக்கே சரிவாக இருப்பதும்தான் அங்கே பெண்கள் எண்ணிக்கையில் அதிகமாகவும் படித்தவர்களாகவும் சொத்தில் ஆண்களுக்குச் சமபங்கு உடையவர்களாகவும் திகழ்கிறார்கள். வடக்கு திசை சரியாக இருப்பின் பொருளாதார மேன்மை இருக்கும். அரசியலில் புகழ் பெறுவதும் வடக்கு திசை நன்கு அமையப் பெற்றவர்களுக்கு அமையும். அமெரிக்காவின் தெற்கு சிறுத்தும் வடக்கே நயாகரா நீர்வீழ்ச்சியும் கிழக்கே கடல் கொண்டதும் உள்ள அமைப்பினால் உலக அரசியலில் பிரகாசிப்பதை பார்க்க முடிகிறது.
மியான்மர், தென் ஆப்பிரிக்கா, நைஜீரியா, ஈராக்கில் வடக்கே முறையே மலைகள், பாலைவனம் போன்றவையால் அரசியல் ஸ்திரத் தன்மையின்றி இருப்பதையும் அரசியல் போராட்டங்களும் அரசியல் பிரமுகர்கள் சிறைபட்டிருப்பதையும் காண முடிகிறது. ஆக, வடக்கு திசை மனை நற்பண்புகள் உள்ள மனையாகவும் வடக்கு பாதிக்கப்படும்போது பொருளாதார வீழ்ச்சி, பெண்கள் பாதிக்கும் தன்மையும் வந்தடையும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வாழ்வை வளமாக்கும் சுந்தரகாண்டம்
» வாழ்வை வளமாக்கும் தியானம்
» வாழ்வை வளமாக்கும் நேர நிர்வாகம்
» வாழ்வை வளமாக்கும் திருமந்திரம்
» வாழ்வை வளமாக்கும் திருமந்திரம்
» வாழ்வை வளமாக்கும் தியானம்
» வாழ்வை வளமாக்கும் நேர நிர்வாகம்
» வாழ்வை வளமாக்கும் திருமந்திரம்
» வாழ்வை வளமாக்கும் திருமந்திரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum