பக்தியில் அகம்பாவம் கூடாது!
Page 1 of 1
பக்தியில் அகம்பாவம் கூடாது!
பகவான், மிகவும் எளிமையானவன், பக்தர்கள் உள்ளன்போடு எவ்வளவு எளிய பொருளை அர்ப்பணம் செய்தாலும், அதை ஏற்று, அருள் புரிகிறான். திருமலை ஸ்ரீனிவாசனிடம் மிகுந்த பக்தி கொண்டு, பல திருப்பணிகளையும், திருவிழாக்களையும் செய்து வந்தான் தொண்டைமான் என்ற அரசன். ஆனால், அவன் மனதில் ஒரு அகம்பாவம் இருந்தது. நாம் தான் இவ்வளவு செலவு செய்து பிரமாதமாக இதை செய்கிறோம் என்ற அகம்பாவம் இருந்தது.
தினமும் ஸ்ரீனிவாசனுக்கு ஸ்வர்ண புஷ்பங்களால் அர்ச்சனை செய்வான் தொண்டைமான். ஒரு சமயம், ஸ்வர்ண புஷ்பம் அர்ச்சனை செய்ய சென்ற போது, பகவான் திருவடிகளில், இவன் முதல் நாள் அர்ச்சித்த ஸ்வர்ண புஷ்பங்கள் ஒதுக்கித் தள்ளப்பட்டு, அந்த இடத்தில் மண்ணால் ஆன துளசி தளங்கள் இருக்கக் கண்டான். இது எப்படி வந்தது என்று வேதனைப்பட்டு, "பகவானே… நான் ஏதாவது தவறு செய்தேனா? நான் அர்ச்சித்த ஸ்வர்ண புஷ்பங்களை நீ ஏற்றுக் கொள்ளவில்லையா? இந்த மண்ணால் செய்த துளசி இலைகளை நீ ஏற்றுக் கொண்டாயா?’ என்று அழுதான்.
அப்போது, "அரசே… என்னுடைய பக்தர்கள் ஏராளமானவர்கள் உண்டு. அவர்களில் சிலர் ஆடம்பரத்தை விரும்புபவர்; ஒரு சிலர் உண்மையான பக்தியுடன் வழிபடுவர். அவர்களில் மிகவும் ஏழையான பீமன் என்றொரு குயவன், இங்கிருந்து வடக்கே ஒரு யோஜனை தூரத்தில் இருக்கிறான். "என்னைப் போல் உருவம் செய்து வைத்து, மண்ணாலான துளசியால் என்னை பக்தியுடன் அர்ச்சிக்கிறான். அவனால் முடிந்தது அதுதான். அவன் அர்ச்சிக்கும் அந்த மண் துளசி தளங்கள் தான், தினமும் இங்கு என் பாதங்களுக்கு வந்து சேர்கிறது. "அவன் பக்தியோடு அர்ச்சிக்கிறான்; நீ அகம்பாவத்துடன் அர்ச்சிக்கிறாய். அதனால், பீமன் அர்ச்சிக்கும் மண் துளசியை நான் ஏற்றுக் கொண்டேன்…’ என்றார் பகவான்.
இதைக் கேட்ட தொண்டைமான் மிகவும் மனம் வருந்தி, ஸ்ரீனிவாசன் சொன்ன குயவனைத் தேடி, அவன் இருப்பிடம் சென்றான். சக்கரவர்த்தி, தன் வீட்டு வாசலில் வந்து நிற்பதைக் கண்ட குயவனும், அவன் மனைவியும், தாங்கள் ஏதும் தவறு செய்து விட்டோமோ, அதற்காக அரசன் தண்டிக்க வந்திருக்கிறானோ என்று பயந்து , அரசனின் காலடியில் வந்து விழுந்தனர்.
அதற்குள் ஸ்ரீனிவாசனே அங்கு வந்து விட்டார். அவரைப் பார்த்த குயவனும், அவன் மனைவியும் ஆனந்தக் கூத்தாடி, பகவானை வழிபட்டு, தங்களால் இயன்ற அமுது செய்து படைத்தனர். ஏழை, எளியவர் என்று பாராத பகவானின் கருணையை கண்டு, புகழ்ந்து மகிழ்ந்தனர். பகவான் சிரித்துக் கொண்டே அவர்களுக்கு அருள் செய்தார். உடன் ஒரு தேவ விமானம் வந்து, குயவனையும், அவனது மனைவியையும் அதில் ஏற்றி, விண்ணுலகம் சென்றது.
மிகவும் வருந்தி பகவானை பார்த்து, "பிரபோ… குயவனுக்கு கிடைத்த பாக்கியம் எனக்குக் கிடைக்காதா?’ என்றான் அரசன். பகவானும், அரசனை பார்த்து, "குயவன் அகம்பாவம் இல்லாமல் பக்தியுடன் வழிபட்டதால், இப்போது அவனுக்கு நற்கதி கிடைத்தது. நீ சிறிது அகம்பாவத்துடன் வழி பட்டதால், இந்தப் பிறவியில் உனக்கு நற்கதி கிடைக்காது. "நீ, இந்த சரீரத்தை விட்டு, அடுத்த ஜென்மத்தில் வேறு சரீரம் பெற்று, என்னை வழிபட்டு, என்னை வந்தடைவாய்…’ என்று சொல்லி மறைந்தார். தொண்டைமானும், அந்த ஜென்ம சரீரத்தை விட்டு, அடுத்த பிறவியில் வேறு சரீரத்தில் பகவானை பக்தியுடன் வழிபட்டு, புண்ணியலோகம் அடைந்தான்.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» வெள்ளை வெளேல் என்று இருப்பவர்கள் சில விஷயங்களை செய்யவேக் கூடாது. அதாவது அவர்கள் நிறத்திலேயே வெள்ளையாக இருப்பதால் அதிகமாக பவுடர் பூசிக் கொள்ளக் கூடாது. அப்படி செய்யும் போது அவர்களது அழகை பவுடர் குலைத்து விடும். அதேப்
» மத விரோதம் கூடாது
» எப்போது தரிசனம் கூடாது?
» அச்சமும் ஆசையும் கூடாது
» தற்பெருமை தலைதூக்க கூடாது
» மத விரோதம் கூடாது
» எப்போது தரிசனம் கூடாது?
» அச்சமும் ஆசையும் கூடாது
» தற்பெருமை தலைதூக்க கூடாது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum