தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

துப்பாக்கி - எதிர்பார்ப்பில் மும்பை

Go down

துப்பாக்கி - எதிர்பார்ப்பில் மும்பை Empty துப்பாக்கி - எதிர்பார்ப்பில் மும்பை

Post  ishwarya Thu Mar 07, 2013 11:53 am

துப்பாக்கி இன்று வெளியாகியிருக்க வேண்டும். அடுத்த வாரம் 13ஆம் தேதிக்கு தள்ளிப் போனதில் அனைவருக்குமே வருத்தம். முக்கியமாக விநியோகஸ்தர்கள், திரையரங்கு உ‌ரிமையாளர்கள்.


இன்று வெளியாகியிருந்தால் வழக்கமான ஓபனிங்கும் கிடைக்கும், 13ஆம் தேதி தீபாவளி என்பதால் மூன்று நாட்களுக்கேனும் திருவிழா கூட்டமும் சேரும். ஒரே படத்துக்கு இரண்டு ஓபனிங் பார்க்கலாம் என்றிருந்தவர்களுக்கு பெருத்த ஏமாற்றம். வெளிநாடுகளைப் பொறுத்தவரை வீக் எண்ட் வெளியானால்தான் கூட்டம் அம்மும். 13 தீபாவளி என்றாலும் கூட்டம் சேருமா என்ற கவலை வெளிநாட்டு உ‌ரிமை வாங்கியவர்களுக்கு.

ச‌ரி, மேட்டருக்கு வருவோம். பொதுவாக தமிழ்ப் படங்கள் மும்பையில் ஒன்றிரண்டு பி‌ரிண்ட்கள் வெளியாகும், மாஸ் ஹீரோவாக இருந்தால் கொஞ்சம் அதிகமாக வெளியாகும். துப்பாக்கி முழுக்க மும்பையில் நடக்கும் கதை, இயக்கியது முருகதாஸ். இந்தக் காரணங்களால் மும்பைவாழ் மக்கள் படத்தை அதிக ஆவலுடன் பார்க்கக் காத்திருக்கிறார்கள்.

இதை மனதில் வைத்து மும்பை மற்றும் இந்தி பேசும் பகுதிகளில் சுமார் 100 பி‌ரிண்ட்கள் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்களாம். இப்படியொரு பிரமாண்ட ‌ரிலீஸை விஜய் படங்கள் இதற்கு முன் கண்டதில்லை என்பது முக்கியமானது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum