தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இது காஞ்சிபுரம் ஸ்பெஷல் கோயில் இட்லி

Go down

இது காஞ்சிபுரம் ஸ்பெஷல் கோயில் இட்லி Empty இது காஞ்சிபுரம் ஸ்பெஷல் கோயில் இட்லி

Post  meenu Wed Mar 06, 2013 1:08 pm

வழக்கமான மாவுதான். புழுங்கல் அரிசி, பச்ச
ரிசி, உளுந்து மூன்றையும் சம அளவில் சேர்த்து,
கொஞ்சம் வெந்தயமும் போட்டு ஊறவைத்து
உப்புமா ரவை பதத்துக்கு முதல் நாளே அரைத்து,
புளிக்க வைக்கிறார்கள் .

மறுநாள் , புளித்து பொங்கியிருக்கும் மாவில் இஞ்சி, மிளகுத்தூள் , சீரகம், பெருங்காயத்தூள் ,முந்திரி, கறிவேப்பிலை, நெய் ஆகியவற்றைப் போட்டு நன்றாகக் கலக்குகிறார்கள்.

குவளை போன்ற பாத்திரத்தைச் சுற்றி வாழை இலையை வைத்து, முக்கால் பாகத்துக்கு மாவை ஊற்றி இட்லி சட்டிக்குள் வைத்து மூன்று மணி நேரங்கள் (!) வேக வைக்கவேண்டும். பின்,பாத்திரத்தை தலைகீழாகப் பிடித்து தட்டினால் இட்லி நழுவும். அதை வட்டமாகவோ, சதுரமாகவோ வெட்டி, பரிமாறு
கிறார்கள் .

இட்லிப்பொடி உகந்த சைடிஷ். புதினா சட்னி
யும் சுவையைக் கூட்டும். சாதாரண இட்லியைப்
போல ஒருநாளில் கெட்டுப்போகாது. 2 நாள் வைத்
துச் சாப்பிடலாம். புரோட்டீன், வைட்டமின், மினரல், கார்போஹைட்ரேட் என எல்லாச் சத்துகளும்
நிரம்பியது இந்தக் கோயில் இட்லி.

இது, பேருந்து நிலையத்தின் வெளிப்புறம்,
காமராஜர் சாலையில் உள் ள கிருஷ்ணவிலாஸ் உணவகத்தில் ரெகுலர் ஐட்டமாக கிடைக்கிறது. கிருஷ்ணமூர்த்தி அய்யர் தொடங்கிய இந்த உணவகம், இப்போது அவரது மகன் ஹரிஹர அய்யரின் நிர்வாகத்தில் இருக்கிறது.

வெ.நீலகண்டன் படங்கள் : பாஸ்கரன் காஞ்சிபுரத்தின் ஒவ்வொரு தெருவிலும் பள்ளிகள் இருக்கிறதோ இல்லையோ,கோயில்கள் கண்டிப்பாக இருக்கும்.

பல்லவர்கள் , நாயக்கர்கள் , விஜயநகர பேரரசு
என ஆன்மிக மார்க்கத்திலும், கலையம்சத்திலும்
ஈடுபாடு கொண்ட மன்னர்களின் ஆளுமையில்
இருந்ததால் இந்நகரம் வான்முட்டும் கோயில்
நகரமாகவே மாறிவிட்டது. அதனால்தான், 1000
கோயில்கள் கொண்ட திருநகரம் என்று காஞ்
சியை புலவர்கள் சிலாகிக்கிறார்கள் . நகரங்களில்
சிறந்தது காஞ்சி என்ற பொருளில் ‘நகரேஷு
காஞ்சி’ என மகாகவி காளிதாசன் சொன்னது
எவ்வளவு உண்மை?

அப்படிப்பட்ட காஞ்சி நகரத்திலுள்ள வரதராஜப் பெருமாள் கோயில் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாக வணங்கப்படுகிறது. இவரது விருப்பத்துக்
குரிய உணவுதான், கோயில் இட்லி.குழாய்ப்புட்டு கணக்காக, கோபுரத்தை ஒத்த நீண்ட வடிவம். மசாலா மணம்,வித்தியாசமான சுவை என பல தனித்
தன்மைகளை கொண்ட இந்த கோயில் இட்லி தான் வரதராஜர் கோயில் பிரசாதம்.பொதுவாக இட்லி
எல்லா தட்பவெப்பத்துக்கும் உகந்த உணவு.

தமிழர்களின் பண்பாட்டு அடையாளம். வெளிநாடு
களில் எவ்வளவு முயன்றும் நம்மூர் இல்லத்தரசிகள் கைப்பதத்தை நெருங்கவே முடியவில்லை.
அதனால்தான் பெருந்தேவித் தாயாரின் ¬ கமணத்தில்
மயங்கியே வரதரும் கோயில்...
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum