இது சைதாப்பேட்டை ஸ்பெஷல் வடைகறி
Page 1 of 1
இது சைதாப்பேட்டை ஸ்பெஷல் வடைகறி
அந்தக் காலத்தில் சாப்பிடும்போது பக்கத்திலேயே ஒரு ஊசியை வைத்திருப்பார்களாம்.சாதம் கீழே சிந்தினால் அந்த ஊசியால் குத்தியெடுத்து, தண்ணீரில் கழுவி தட்டில் போட்டுக் கொள்வார்களாம். வியர்வை வழிய உழைத்து, களைத்து கிடைக்கும் உணவாதலால், ஒரு பருக்கை கூட வீணாவதை அவர்கள் விரும்பியதில்லை.
இன்றும் கிராமப்புறங்களில் சாதம் மீந்தால் மறுநாள் அதை பழைய சோறு அல்லது வத்தலாக்கி விடுவதைப் பார்க்கலாம். இட்லி மிஞ்சினால் மறுநாள் அதை உதிர்த்துப் போட்டு, தாளித்து, இட்லி உப்புமா ஆக்கி விடுவார்கள். மிஞ்சிப்போகும் குழம்பு, வெஞ்சனங்க
ளை மிக்ஸிங் செய்து சாப்பிடுவது இன்றும் கிராமப்புறங்களில் உண்டு. அதன் வாசனையும், சுவையும் புதுவிதமானது. இப்படியான பிறப்புதான் வடைகறியும்.தீபாவளிக்கு மறுநாள் பெரும்பாலான வீடுகளில் இந்த வடைகறி மணக்கும். காரணம், முதல்நாள் செய்து மீதமான பருப்புவடை. தூக்கி எறிந்து விடாமல் வடையை உதிர்த்துப் போட்டு தாளித்து ஊற்றி இறக்கினால் புதுவிதமான ஒரு குழம்போ, சைட் டிஷ்ஷோ ரெடியாகிவிடும். அவ்விதம் உருக்கொண்ட வடைகறி இப்போது சென்னையின் ஸ்பெஷலாகி விட்டது.
குறிப்பாக, சைதாப்பேட்டை வி.எஸ்.முதலி தெருவில் உள்ள மாரி ஹோட்டல் வடைகறி என்றால் கேட்போர் வாயில் உமிழ்நீர் சுரக்கும். அந்தளவுக்கு சுவைக்கு பெயர்போன வடைகறி அது.பட்டுக்கோட்டை அருகில் உள்ள வடசேரியை சேர்ந்த மாரிமுத்து தேவர்தான் இந்த உணவகத்தின் நிறுவனர். 50 வருடங்களுக்கு முன்பு பிழைப்பு தேடி சென்னைக்கு வந்தவர்,
முதலில் சிறிய டீக்கடைதான் ஆரம்பித்தார். சைடில் போண்டாவும், வடையும் போடுவார். மீதமாகிப்போன வடைகள் வீட்டில் வடைகறி ஆகிவிடும். காலப் போக்கில் ஹோட்டல் ஆரம்பித்த மாரிமுத்து, வடைகறியையும் பிரதான உணவுப்பட்டியலில் சேர்த்து
விட்டார். அதன் சுவையில் சென்னைவாசிகள் மயங்கிப்
போனார்கள்.அன்று தொடங்கி இன்றுவரை மாரி ஹோட்டல் வடைகறிக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள்.காலை 7 மணி முதல் இரவு 9.30 வரை சுடச்சுட வடைகறி கிடைக்கி றது. இட்லி,தோசைக்கு இருப்பது போல வடைகறிக்கும் தனி மாஸ்டர்கள் இருக்கிறார்கள். இன்று இந்த ஹோட்டலை மாரிமுத்து வின் மகன்கள் கிருஷ்ணமூர்த்தி,குமரன் ஆகியோர் நிர்வகிக்கிறார்கள்.பட்டாணி மாவோடு சிறிது கடலைமாவு கலந்து வடை தட்டப்படுகிறது. மாவை கெட்டியாகப் பிசைந்து பக்கோடாவைப் போல எண்ணெயில் போட்டு பொரித்து, தேவைப்படும் அளவுக்கு இருப்பு வைத்துக் கொள்கிறார்கள். இஞ்சி, பூண்டு,மிளகாய், லவங்கம், கறி வேப்பிலையை அரைத்துப் போட்டு, தாளித்து,தண்ணீர் ஊற்றி, பொரித்துவைத் த வடையை அதில் கொட்டி கொதிக்க விடுகிறார்கள். வடை வாசனை காற்றில்
ஊசலாடினால், வடைகறி ரெடியாகி விட்டது என்று அர்த்தம்.இட்லி, தோசை, பரோட்டா,சப்பாத்தி என அனைத்து சிற்றுண்டிகளுக்கும் தகுந்த சைட்டிஷ் இது. ஒரு தடவை வடைகறி சாப்பிட்டால் பிறகு சட்னி,சாம்பாரை நாக்கு சீண்டாது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» இது சைதாப்பேட்டை ஸ்பெஷல் வடைகறி
» வடைகறி
» ஸ்பெஷல் புளியோதரை
» ஸ்பெஷல் பூரி
» இது மத்தூர் ஸ்பெஷல் வடை
» வடைகறி
» ஸ்பெஷல் புளியோதரை
» ஸ்பெஷல் பூரி
» இது மத்தூர் ஸ்பெஷல் வடை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum