தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆஸ்துமா குறைய‌

Go down

ஆஸ்துமா குறைய‌  Empty ஆஸ்துமா குறைய‌

Post  oviya Tue Mar 05, 2013 8:57 pm

அறிகுறிகள்:

ஆஸ்துமா.
மூச்சு திணறல்.
ஜீரண சக்கி குறைவு.

தேவையான பொருள்கள்:

சீரகம்.
கருஞ்சீரகம்.
கிராம்பு.
ஓமம்.
அதிமதுரம்.
சுக்கு.
மிளகு.
பசும்பால்.
இளநீர்.
நெய்.

செய்முறை:

சீரகத்தை சுத்தம் செய்து 250 மி.லி வெந்நீரில் ஊற வைத்து நிழலில் உலர்த்தி இடித்து பொடியாக்கி கொள்ளவும்.
கருஞ்சீரகத்தை சுத்தம் செய்து 150 மி.லி கொதிக்க வைத்த பசும்பாலில் ஊற வைத்து நிழலில் உலர்த்தி இடித்து பொடியாக்கி கொள்ளவும்.
கிராம்பின் மேல் உள்ள பூவை நீக்கி விட்டு ஒன்றிரண்டாக தட்டி இளம் வறுவலாக வறுத்து இடித்து பொடியாக்கி கொள்ளவும்.
ஓமத்தை சுத்தமான நீரில் கழிவி நிழலில் உலர்த்தி இளம் வறுவலாக வறுத்து எடுத்து கொள்ளவும்.
சுக்கை இடித்து 150 மி.லி பசும்பாலில் போட்டு பால் வற்றும் வரை காய்ச்சி பிறகு நிழலில் உலர்த்தி பொடியாக்கி கொள்ளவும்.
மிளகை ஒன்றிரண்டாக இடித்து 50 மி.லி நெய்யை விட்டு இளம் வறுவலாக வறுத்து பிறகு நிழலில் உலர்த்தி பொடித்து கொள்ளவும்.

பிறகு எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து மீண்டும் ஒருமுறை இடித்து பொடியாக்கி சலித்து வைத்து கொள்ளவும்.

உபயோகிக்கும் முறை:

இந்த பொடியை 1 கிராம் அளவு எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டு பிறகு வெந்நீர் குடித்து வர வேண்டும். ஒரு நாளைக்கு 3 வேளை உணவு உண்ணும் முன் இதை சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா குறையும்.

சாப்பிட கூடாத உணவுகள்:

மொச்சை, கடலை வகைகள், வாழைத்தண்டு, முற்றிய காய்கள், பரங்கிக்காய், பூசணி, பழ வகைகள், தயிர், இளநீர், குளிர்ந்த பானங்கள், எண்ணெய் பலகாரங்கள்.

சாப்பிட கூடிய உணவுகள்:

இளங்காய்கள், மோர், எள் எண்னெய், துவரம் பருப்பு, மிளகு, சீரகம், பூண்டு, வெங்காயம், தேன், பால், மலை வாழைப்பழம், மாதுளம் பழம், புழுங்கலரிசி சோறு, வெந்நீர், சிறிது புளி, பிஸ்கட்.

குறிப்பு:

மருந்து சாப்பிட்டு வரும் நாட்களில் மலச்சிக்கல் ஏற்பட்டால் உணவில் மோர், நெய், கீரைகள் ஆகியவற்றை அதிகமாக சாப்பிட்டு வர வேண்டும்.

oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum