தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஷாலுடன் என்ன உறவு - தெ‌ளிவுபடுத்திய வரலட்சுமி

Go down

 விஷாலுடன் என்ன உறவு - தெ‌ளிவுபடுத்திய வரலட்சுமி Empty விஷாலுடன் என்ன உறவு - தெ‌ளிவுபடுத்திய வரலட்சுமி

Post  ishwarya Tue Mar 05, 2013 4:47 pm

போடா போடியில் வரலட்சுமியின் நடிப்பைப் பார்த்த அனைவரும் வஞசனையில்லாமல் பாராட்டி வருகின்றனர். தந்தை சரத்குமார் தன்னை பாராட்டியதை முக்கியமான பாராட்டாக கருதுகிறார் வரலட்சுமி. அடுத்து பொங்கலுக்கு இவர் நடித்த மத கஜ ராஜா வெளியாகிறது. இந்நிலையில் ஒரு சின்ன வதந்தி.

விஷாலும், வரலட்சுமியும் காதலிக்கிறார்கள், மத கஜ ராஜா வாய்ப்பை வாங்கித் தந்தது விஷால்.

இந்த காலில்லா வதந்திக்கு வரலட்சுமி தனது விளக்கத்தின் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

விஷால் குடும்பத்துக்கும் எங்கள் குடும்பத்துக்கும் நெருங்கிய நட்பு உண்டு. விஷாலின் தந்தை தயா‌ரித்த படங்களில் என்னுடைய தந்தை சரத்குமார் நடித்திருக்கிறார். அப்போதே எனக்கு விஷாலை தெ‌ரியும். அவர் என்னுடைய நெருங்கிய நண்பர். இதுதான் எங்களுக்கிடையே உள்ள உறவு.

மத கஜ ராஜா-வில் அவர் எனக்கு வாய்ப்பு வாங்கித் தரவில்லை. ஹீரோயினை தேர்வு செய்வதில் தலையிடுகிறவர் இல்லை விஷால் என வதந்திக்கு தெ‌ளிவான பதில் தந்திருக்கிறார் வரலட்சுமி.

இனியாவது வதந்தி கிளப்புவோர் வம்பு பேசமாட்டார்கள் என நம்புவோம்.
வரலட்சுமி, விஷால், மத கஜ ராஜா

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum