ரஜினிக்கு தலைவர்கள் வாழ்த்து
Page 1 of 1
ரஜினிக்கு தலைவர்கள் வாழ்த்து
இன்று பிறந்தநாள் காணும் ரஜினிகாந்துக்கு அரசியல் தலைவர்கள் தொலைபேசியில் வாழத்துகளை தெரிவித்தனர்.
நூறு வருடங்களுக்கொருமுறை வரும் அபூர்வ தினங்களில் ஒன்றுதான் 12-12-12. ரஜினியின் பிறந்தநாள் இந்த தினத்தில் அமைந்தது மேலும் சிறப்பை அளித்திருக்கிறது. ரசிகர்களைப் பொறுத்தவரை இதுவரை வந்த ரஜினியின் பிறந்தநாள்களில் இந்த பிறந்தநாள் அபூர்வமானது, ஆச்சரியமானது, கொண்டாட்டத்துக்கு உரியது.
பிறந்தநாளில் ரசிகர்கள் மற்றும் தலைவர்களின் வாழ்த்து நெருக்கடியிலிருந்து தப்பிக்க பிறந்தநாளில் வெளியூர்களுக்கோ, வெளிநாடுகளுக்கோ ரஜினி சென்றுவிடுவது வழக்கம். ஆனால் இந்தமுறை போயஸ்கார்டன் வீட்டில் அவர் ரசிகர்களை சந்தித்து அவர்களின் வாழ்த்துகளை நேரடியாக பெற்றுக் கொண்டார். பிறந்தநாளில் ரஜினியை அவரது ரசிகர்களில் பலர் பார்ப்பது இதுவே முதல்முறை என்பதால் போயஸ்கார்டனில் மகிழ்ச்சி கரைபுரண்டோடியது.
ஒவ்வெருவரும் அவரவர் பெற்றோரை கொண்டாடுங்கள் என்பதே ரஜினியின் பிறந்தநாள் செய்தி. அதேபோல் ரசிகர்களுக்கு கண்டிப்பாக கைமாறு செய்வேன், அரசியலை உற்றுக் கவனிக்கிறேன் என்றெல்லாம் அரசியல் எதிர்பார்ப்பை தூண்டும் எதையும் அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு பதிலாக ரஜினி கூறவில்லை. அதுபற்றி ஏற்கனவே பலமுறை கூறிவிட்டேன் புதிதாக சொல்ல ஏதுமில்லை என்பதாக இருந்தது அவரது பதில். ரசிகர்கள் அவரவர் கடமையை செய்ய வேண்டும் என்ற அவரது தெளிவான பதில் வரவேற்கத்தக்கது.
ரஜினியின் பிறந்தநாளுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் கருணாநிதி, வைகோ, தொல்.திருமாவளவன், மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி, மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், பா.ஜ.க. தலைவர் நிதின் கட்கரி, எல்.கே.அத்வானி உள்ளிட்ட ஏராளமான அரசியல் தலைவர்கள் ரஜினியை ஃபோனில் தொடர்பு கொண்டு வாழ்த்துகள் தெரிவித்தனர்.
ரஜினியின் நண்பரும் சமகால கலைஞருமான கமல்ஹாசன் பத்திரிகைகளில் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார். இப்படி பகிரங்கமாக அவர் பத்திரிகை விளம்பரம் வழியாக ரஜினியை வாழ்த்துவது இதுவே முதல்முறை.
ரஜினிக்கு நமது பிறந்தநாள் வாழ்த்துகள்.
ரஜினி பிறந்தநாள் வாழ்த்து, 12 12 2012

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ரஜினிக்கு விஸ்வரூபம் ஸ்பெஷல் திரையிடல்
» அசின் 27 வது பிறந்தநாள் – அக்ஷய்குமார் வாழ்த்து
» விக்ரம் பிரபுவிற்கு அஜீத் வாழ்த்து
» ராஜாராணிக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்
» தாய்மையடைந்துள்ள ஐஸ்வர்யா ராய்க்கு சல்மான்கான் வாழ்த்து

Permissions in this forum:
You cannot reply to topics in this forum