தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சாகஸ ஒளிப்பதிவாளர் கர்ணன் மரணம்

Go down

சாகஸ ஒளிப்பதிவாளர் கர்ணன் மரணம் Empty சாகஸ ஒளிப்பதிவாளர் கர்ணன் மரணம்

Post  ishwarya Tue Mar 05, 2013 1:39 pm


எம்.‌ஜி.ஆர். முதல் ர‌‌ஜினி வரை தமிழின் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கேமராமேன் கர்ணன் இன்று காலமானார். அவருக்கு வயது 79.

கர்ணன் என்றதும் இளைய தலைமுறைக்கு அவரது சாஃப்ட்போர்ன் படமான ஜம்பு நினைவுக்கு வரும். ஜெய்சங்கர் நடித்த இந்தப் படம் இப்போதும் ரசிக்கத்தக்க வகையில் எடுக்கப்பட்டிருக்கும். அதேபோல் கார்த்திக், ராதாரவி நடித்த இரட்டைக்குழல் துப்பாக்கி. இவ்விரு படங்களையும் கர்ணனே இயக்கியிருந்தார். இவை மட்டுமின்றி 20க்கும் அதிகமான படங்களை அவர் இயக்கியிருக்கிறார்.

அந்தக் காலத்தில் சாகஸக் காட்சிகளையும், சண்டைக் காட்சிகளையும் எடுப்பதில் கர்ணன் ஈடு இணையற்றவராக இருந்தார். குறிப்பாக கௌபாய் படங்களில் குதிரைகளில் துரத்திச் செல்லும் காட்சிகளை இவர் எடுத்திருக்கும் விதம் ஆச்ச‌‌ரியமளிக்கக் கூடியது. அதேபோல் ஜம்பு படத்தில் அண்டர் வாட்டர் காட்சிகள் அதிகளவில் இடம்பெற்றிருக்கும்.

எம்‌ஜிஆ‌ரின் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன், சிவா‌ஜியின் வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற அமர காவியங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவரும் இவரே.

சென்னை சூளைமேட்டில் வசித்து வந்த கர்ணன் இன்று மதியம் காலமானார். அவருக்கு மனைவியும், இரு மகள்களும் உள்ளனர். நாளை அவரது இறுதிச் சடங்கு நடக்க உள்ளது.
ஒளிப்பதிவாளர் கர்ணன் மரணம்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் படங்களின் ஒளிப்பதிவாளர் – இயக்குநர் கர்ணன் மரணம்
» பழம்பெரும் ஒளிப்பதிவாளர் கர்ணன் காலமானார்
» பிரபல ஒளிப்பதிவாளர் ஆர்.என்.கே.பிரசாத் மரணம்
» ஒளிப்பதிவாளர் பி.எஸ்.லோகநாத் மரணம் – கேபி, கமல் அஞ்சலி
» திரைப்பட ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமின் மகள் மாடியிலிருந்து விழுந்து மரணம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum