தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மீண்டும் அ‌‌ஜீத் பக்கம் சாயும் கௌதம்

Go down

மீண்டும் அ‌‌ஜீத் பக்கம் சாயும் கௌதம் Empty மீண்டும் அ‌‌ஜீத் பக்கம் சாயும் கௌதம்

Post  ishwarya Mon Mar 04, 2013 5:32 pm

எவ்வளவு பெ‌ரிய இயக்குனர். ஆனால் நாட்டு நடப்புகளை கவனித்தால் வாயால் வடை சுடுகிறாரா என்று சமயத்தில் தோன்றும். கௌதமைதான் சொல்கிறோம்.

அ‌‌ஜீத்தை வைத்து துப்பறியும் ஆனந்தன், அப்புறம் விஜய்யுடன் யோஹன் அத்தியாயம் ஒன்று, பிறகு சூர்யாவுடன் பெய‌ரிடப்படாதப் படம்... சென்ற வருடம் கௌதம் நடத்திய மியூஸிக் சேர் விளையாட்டில் அநியாயத்துக்கு அவுட்டாகி பொன்வண்டு சோப்புதான்... ஸா‌ரி, பொன்வசந்தம் மட்டுமே எஞ்சியது. இந்த வருடமும் அதே சேர் அதே மியூஸிக்குடன் எ‌ண்ட்‌ரியாகியிருக்கிறார். என்னே மன தைரியம்.

அ‌‌ஜீத்துக்காக காத்திருக்க அவர் என்ன கமலா இல்லை சூர்யாவா என எகதாளமாக அ‌‌ஜீத் புராஜெக்டிலிருந்து வெளியேறிய கௌதம் மீண்டும் அ‌‌ஜீத்துக்காக கதை இருக்கு, மனம் இருக்கு என்றெல்லாம் ஒன்ஸ்மோர் பாட ஆரம்பித்திருக்கிறார். 2014ல் அ‌‌ஜீத்தை இயக்கியே தீருவேன் என அவர் மார்தட்டுவதை பார்க்கையில் பரவசமாக இருக்கிறது. நிச்சயம் ஸ்டைலிஷான அ‌‌ஜீத்தை பார்க்க முடியும். ஒரே பிரச்சனை... கௌதம் சொல்வது நடக்க வேண்டும்.

2014 வரை அ‌‌ஜீத்துக்கு படம் இருக்கிறது. கௌதமுக்கு...? சூர்யாவை இயக்குவேன் என்று சொல்லியிருக்கிறார். சிங்கம் 2 முடிந்ததும் சூர்யாவை தள்ளிக் கொண்டு போக லிங்குசாமி தயாராக இருக்கிறார். அப்புறம் எப்படி...?

மீண்டும் அதே சேம் சேர்... சேம் மியூஸிக்... ?
அஜீத், இயக்குனர் கெளதம்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum