இதய நோய்களை தவிர்க்கும் மீன் உணவு
Page 1 of 1
இதய நோய்களை தவிர்க்கும் மீன் உணவு
வளர்ந்த நாடுகளில் மட்டுமல்லாது, வளர்முக நாடுகளிலும் நிகழ்கின்ற மரணங்களுக்கு இதயத்தாக்கும், மூளைத்தாக்குமே பெரும்பாலும் காரணமாக இருப்பது தெரியவந்துள்ளது. மூளைத் தாக்கினால் இறப்பவர்களை விட இதயத் தாக்கினால் இறப்பவர்களின் எண்ணிக்கையே மிகுதியாக உள்ளது. மீன் மற்றும் மீன் பொருள்களை உணவில் கணிசமாகச் சேர்த்துக் கொள்வதன் மூலம் இவ்வகை இதயத் தாக்குகளைத் தவிர்க்கலாம் என்பதும் அண்மைக்கால ஆய்வுகளின் மூலம் தெரியவருகிறது.
இதயத்தாக்கிற்கான காரணம்
இதயத்தசைகளுக்கு இரத்தத்தை அளிக்கும் கரோனரித் தமனிகளில் அடைப்பு ஏற்படும் போது, அவ்வழியே இரத்தவோட்டம் குறைவதாலோ அல்லது முற்றிலுமாகத் தடைப்படுவதன் விளைவாகவோ இதயத்தாக்கு உண்டாகிறது. இதயத்திற்குக் கிடைக்கும் இரத்தம் குறிப்பாக இரு முக்கிய காரணங்களால் தடைப்படுகிறது.
1. இரத்தக் குழாய்களில் லிப்பிடுகள் படிந்து குழாய் விட்டம் குறுகுதல்
2. இதயத் தமனிகளில் இரத்தம் உறைந்து போதல்.
இயல்பான நிலைகளில் இரத்த ஓட்டத்தில் எவ்விதத்தடங்கலும் ஏற்படுவதில்லை. மேற்சொன்ன இரு கோளாறுகள் உண்டாகும் போது, கரோனரித் தமனிகளின் இரத்தக் குழாய்கள் தடித்து அவற்றின் உள்விட்டம் குறுகுகின்ற போது இரத்தம் போக முடியாமல் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு விடுவதாலும் இரத்தத்திலுள்ள தட்டையங்கள் பிசுபிசுப்படைந்து இரத்தக் குழாய்களில் ஒட்டிக் கொள்வதாலும் இரத்தம் உறைதல் தூண்டப்பெற்று இரத்தக்குழாய் அடைப்பையும், இதயத்தாக்கையும் உண்டு பண்ணுகிறது.
உணவுக் கொழுப்பும், லிப்பிடுகளும்
கொலஸ்ட்ரால் உயர்விற்கும், இதய நோய்களுக்கும் இடையேயான தொடர்பு நிரூபிக்கப்பட்டுவிட்ட ஒன்று. கொலஸ்ட்ரால் இரத்தத்தில் இருக்கின்ற போது, லிப்போ புரோட்டீன் எனப்படும் கூட்டுப் பொருட்களுடன் இணைந்தே இருக்கிறது. இந்த லிப்போ புரோட்டீன் என்னும் கொழுப்புப் புரதங்கள் இரு வகைப்படும்.
1. உயர் அடர்த்தி லிப்போ புரோட்டீன்
2. தாழ் அடர்த்தி லிப்போ புரோட்டீன்
இதில் தாழ் அடர்த்தி லிப்போ புரோட்டீன் தான் உடல் நலத்திற்கு ஊறு விளைவிக்கக்கூடியது என்று கருதப்படுகிறது. இதனுடன் கொலஸ்ட்ரால் இணைகின்றபோது இரத்தக் குழாய்களில் கொழுப்பு படியத் தொடங்குகிறது. இதனால் இரத்தக் குழாய்களில் குறுக்கமும் அடைப்பும் ஏற்பட வாய்ப்பாகிறது.
இதற்கு மாறாக உயர் அடர்த்தி லிப்போ புரோட்டீன்களுடன், கொலஸ்ட்ரால் இணைகின்ற போது, அது இரத்தச் சுற்றோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டு விடுவதால் இதய நோய்கள் வருவது தடுக்கப்படுகிறது.
தாழ் அடர்த்தி லிப்போ புரோட்டீன்களின் அளவு குறைவாகவும், உயர் அடர்த்தி லிப்போ புரோட்டீன்கள் செறிவாகவும் உள்ள உணவுப் பொருள்களில் மீன் வகைகள் முதலிடம் பெறுகின்றன. எனவே ஒவ்வொருவரும் தங்கள் உணவில் சரியான விகிதத்தில் மீன் பொருட்கள் சேருமாறு கவனமுடன் திட்டமிடுவது அவசியம். இதன்மூலம் இதய நோய்கள் வராமல் காத்துக்கொள்ள முடியும். மேலும் மீன் இதயத்திற்கேற்ற அரிய உணவாக உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகளாலும், மருத்துவர்களாலும் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது.
மீன் நல்ல உணவாவதோடு, நோய்களுக்குக், குறிப்பாக இதய நோய்களுக்கு ஏற்ற மருந்தாகவும் செயல்படுகின்றது. வாரத்திற்கு இருமுறை மீன் உணவுகளுடன் கூடிய உணவு முறைகளைக் கடைப்பிடிப்போருக்கு, இதயத்தாக்கு வருவதற்கான வாய்ப்பு பாதியாகக் குறைக்கப்படுகிறது. தாவர எண்ணெய்யையும், மீன் எண்ணெய்யையும் ஒப்பீட்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் மூலம், நான்கு வாரங்கள் மீன் எண்ணெய் உட்கொண்டவர்களின் கொலஸ்ட்ரால் அளவு அதே நான்கு வாரங்கள் தாவர எண்ணெய் எடுத்துக் கொண்டவர்களுடைய கொலஸ்ட்ரால் அளவை விட 5 மடங்கு குறைவாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. மீன்களின் ஒமேகா 3 எனப்படும் உயர்அடர்த்தி லிப்போ புரோட்டீன் மிகுந்தும் தாழ் அடர்த்தி புரோட்டீன் குறைந்தும் இருப்பதே இதற்குக் காரணம் எனவும் தெரியவந்துள்ளது.
இதய நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மீன் எண்ணெய் அடங்கிய பொருள்கள் பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகின்றன. என்றாலும் மீன்களின் கல்லீரலில் இருந்து எடுக்கப்படும் காட்லிவர் ஆயில் மற்றும் ஷார்க் லிவர் ஆயில் போன்றவைகளில் உடலுக்கு நன்மை அளிக்கும் செறிவுறா கொழுப்பு அமிலங்களுடன் வைட்டமின்களும் அடங்கியுள்ளன. மீன்களின் தசைகளிலிருந்து பெறப்படும் எண்ணெயில் இவ்வைட்டமின்கள் மிகுதியாக இருப்பதில்லை. எனவே இதய நோயுற்றவர்கள் இவ்வகை மீன் எண்ணெயை உட்கொள்வது நல்லது.
இரத்தக் குழாய்களில் படிந்துள்ள லிப்பிடுகளைக் குறைக்கவும், பல்வேறு காரணங்களால் இரத்தம் உறைவதை தவிர்க்கவும், நோய் நீக்கவல்ல டோஸ்களில் மீன் எண்ணெய் தேவைப்படுவதால், தினசரி திட்ட உணவுகளில் மீன்களையும் சேர்த்துக் கொள்வது நல்லது. மேலும் அன்றாடம் மீன் உணவு உண்போர்கள் இடையே நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் அவர்களுக்கு இதயத்தாக்கு வருவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருப்பதாக அறியப்பட்டுள்ளது.
மீன்களில் காணப்படும் துத்தநாகம், செலினியம், பாஸ்பரஸ் போன்ற மணிச்சத்துக்கள் மூளை வளர்ச்சிக்கும், பொட்டாஷியம் இரத்த அழுத்தத்தை ஒரே சீராக வைத்திருப்பதற்கும் கால்சியம் வலுவான எலும்பு வளர்ச்சிக்கும், அயோடின், உடலின் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்தவும் துணை நிற்கின்றன. இவை தவிர, சருமப் பாதுகாப்பளித்து, இரத்தவோட்டைத்தைத் தூண்டி செயல்படும் வைட்டமின் E மீன்களில் தேவையான அளவு அடங்கியுள்ளது.
மேலும் மீன்களில் காணப்படும் ஒமேகா - 3 எனப்படும் கொழுப்புப் பொருள்
உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
சருமநோய் வராமல் தடுக்கிறது.
முடக்குவாதம், மூட்டுப்பிடிப்பு போன்ற எலும்பு தொடர்புடைய கோளாறுகளை நிவர்த்தி செய்கிறது.
மூளை வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
அனைத்திற்கும் மேலாக, இதயத்தாக்கு வராமல் காக்கிறது.
தவிரவும் இதயநோய் காரணமாக உடற் பருமனைக் குறைக்க விரும்புவோருக்கு ஏற்ற வகையில் குறைந்த கலோரித் திறனையே மீன் தருகிறது. 100 கிராம் எடையுள்ள மீன் உணவை உண்கிற போது, கிடைக்கின்ற கலோரிகள் 100 -க்கும் குறைவானதுவே. மேலும் 100 கிராம் மீன் உண்ணும்போது கிடைக்கக்கூடிய கொழுப்பு 0.1 இருந்து 0.2 வரை மட்டுமே. ஆனால் இதே அளவு (100கிராம்) ஆட்டிறைச்சி 11ம் கொழுப்பினைக் கொண்டுள்ளது.
100 - 200 கிராம் அளவு மீனை வாரம் இரண்டு அல்லது மூன்று முறை உணவில் சேர்த்துக் கொண்டால் அது இதய நோய்களைத் தவிர்க்க உதவும். மீன் சாப்பிடப் பிடிக்காதவர்கள், மீன் எண்ணெய் மாத்திரைகளை தக்க மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ளலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கருச்சிதைவை தவிர்க்கும் உணவு முறைகள்.....
» மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் மீன் உணவு

» கடல் மீன்/கடல் உணவு உண்பதனால் ஏற்படும் பயன்கள்
» மாதவிடாய் பிரச்சனையை தவிர்க்கும் உணவுகள்!!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum