உறுப்புகள் இடம் மாறி உள்ளனவாம்
Page 1 of 1
உறுப்புகள் இடம் மாறி உள்ளனவாம்
எனக்கு வயது 25, என் உடலில் இதயம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகள் இடம் மாறி உள்ளனவாம் (situs in versus). இரண்டாண்டுகள் முன்புதான் இது தெரிய வந்தது. நான் திருமணம் செய்து கொள்ளலாமா? குழந்தை பிறப்பில் பிரச்னை ஏற்படுமா? குழந்தை குறைகளுடன் பிறக்க வாய்ப்புண்டா? என் உடல் மெலிந்திருப்பதற்கு என் குறைபாடுதான் காரணமா?
பொதுவாக எல்லோரது உடலமைப்பிலும் இதயம் மண்ணீரல், மலக்குடல் போன்றவை இடப்புறமும் கல்லீரல், குடலின் சில பகுதி போன்றவை வலப்புறமும் இருக்கும். அதேபோல, நுரையீரலின் ஒரு பாகம் வலப்புறமும் ஒரு பாகம் இடப்புறமும் இருக்கும். வலது சிறுநீரகம் உயரத்திலும் இடது இறங்கியும் இருக்கும். இது அப்படியே மாறியிருந்தால் அதுதான் situs inversus. இது உடலமைப்பின் மாற்றம்தானே ஒழிய நோயல்ல. கரு உண்டாகி 20 முதல் 25 நாட்களில் கரு அப்படியே 360 டிகிரிக்கு சுற்றும். சிலருக்கு 80 டிகிரி சுழலும்போதே அரெஸ்ட் ஆகி அப்படியே நின்று விடும். இதுதான் உங்களுக்கு நேர்திருக்கிறது. ஐம்பதாயிரத்தில் ஒருவருக்கு இது போல் ஆவதுண்டு.
இவர்களுக்கு உடலில் அணுக்களின் இயக்கம் குறைவாக இருக்கும். இதனால் சில பிரச்னைகள் வரும். மூக்கு, நுரையீரல், கர்ப்பப்பை போன்ற பகுதிகளில் இந்த இயக்கம் குறைந்தால் சைனஸ், சளித்தொல்லை, கர்ப்பப்பை பிரச்னை வரலாம்.
நீங்கள் மாதவிலக்கு நாட்களில் கர்ப்பப்பைக்குள் முட்டை வந்து சேருகிறதா என்று மருத்துவரின் உதவியுடன் சோதித்துப் பார்க்கலாம். முட்டை வந்து விட்டால் ஒரு பிரச்னையுமில்லை. தாராளமாகக் கரு உருவாகும். அது உங்களுக்கு இருக்கிற எந்தக் குறைபாட்டுடனும் பிறக்க வாய்ப்பே இல்லை. உங்கள் உடலமைப்புக்கும் இதற்கும் எந்த சம்பந்தமுமில்லை.
வயிற்றுப் போக்கினாலும் சில உணவு வகைகள் உடலுக்கு ஒத்துக்கொள்ளாமலும் இருந்தால் கணையத்திலிருந்து வரும் ஜீரண சுரப்பி திருப்திகரமாக இருக்காது. இதனால் உடல் மெலியலாம். உங்களுக்கு இவை எதுவும் இல்லையெனில், மரபு ரீதியாகக் கூட நீங்கள் ஒல்லியாக இருக்கலாம். உடல் மெலிவதற்கும் இதற்கும் எந்தத் தொடர்புமில்லை.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பனியும் வெயிலும் மாறி மாறி அட்டாக் : உடல் சோர்வு ஏற்படுத்தும் புதுவித வைரஸ் நோய்
» காவலரின் உடல் உறுப்புகள் தானம்
» உள் உறுப்புகள் பலப்பட
» ஒரு விளக்கின் உறுப்புகள் தெய்வங்களைக் குறிப்பவை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum