நாளை கண்டனம் படப்பிடிப்பு ஆரம்பம்
Page 1 of 1
நாளை கண்டனம் படப்பிடிப்பு ஆரம்பம்
சுப்ரமணியன் ஜனார்தன் இயக்கும் கண்டனம் படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது.இயக்குனர் சுப்ரமணியன் ஜனார்தன் அக்ஷய் குமார் நடித்த ஜக்மி தில், ரிஷி கபூர் - மனீஷா கொய்ராலா நடித்த கன்யாதன் உட்பட நான்கு ஹிந்திப்படங்களை இயக்கியிருக்கிறார்.
தமிழில் சிக்கி முக்கி மனிதாக இரு ஆகிய படங்களில் இணை இயக்குனராகப் பணியாற்றியிருக்கிறார். தற்பொழுது முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் கண்டனம் திரைப்படத்தைத் தமிழில் தனது முதலாவது படமாக இயக்குகிறார். ஹிந்தியில் ராஜு சுப்ரமணியன் என்கிற பெயரில் படங்களை இயக்கியவர் தமிழுக்காக சுப்ரமணியன் ஜனார்தன் என்று தனது பெயரை மாற்றிக் கொண்டிருக்கிறார்.
ராதா ராம்தாரி புரொடக்ஷன் - அசோக் கோஸுவாமி & ராம்தாரி தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தின் தொடக்க விழா பிப்ரவரி 1 ஜே ஸ்டுடியோவில் பாடல்பதிவுடன் நடந்தது. படப்பிடிப்பினைப் பிரபல இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் கிளாப் அடித்து தொடங்கிவைத்தார்.நிழல்கள் ரவி ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாயகன் - நாயகியாக புதுமுகங்கள் விஷால், கார்த்திக் கட்டாக், சாய் ராகேஷ், கமலி மற்றும் ஜிடா மரியா ஆகியோர் நடிக்கும் இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது.
இளமையும் புதுமையுமாக உருவாகவிருக்கும் கண்டனம் படத்திற்கு பி.ஆர்.ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார் ஜெய் பிரகாஷ் இசையமைக்கிறார். நடன அமைப்பாளராகப் பணியாற்றுகிறார் செல்வி.
வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் சென்னையில் கண்டனம் படத்தின் படப்பிடிப்புத் தொடங்குகிறது

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கோச்சடையான் படப்பிடிப்பு மார்ச் 15-ல் ஆரம்பம்!
» பீட்சா-2: ஏப்ரலில் படப்பிடிப்பு ஆரம்பம்.
» அஜீத் - தமன்னா ஜோடி: ஏப்ரலில் படப்பிடிப்பு ஆரம்பம்.
» அஜீத் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பம்.
» இயக்குநர்கள் சங்கத்துக்கான இணையதளம் புதுப்பொலிவுடன் நாளை ஆரம்பம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum