தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பாஸ்ட் ஃபுட் வேஸ்ட் ஃபுட்

Go down

பாஸ்ட் ஃபுட் வேஸ்ட் ஃபுட்  Empty பாஸ்ட் ஃபுட் வேஸ்ட் ஃபுட்

Post  meenu Mon Mar 04, 2013 12:39 pm

இப்போதெல்லாம் இளைய சமுதாயத்தினரிடையே பாஸ்ட் புட் எனப்படும் துரித உணவுகளை வாங்கி சாப்பிடுவது பிரபலமாக உள்ளது. பள்ளி மாணவர்கள் கூட வீட்டிலிருந்து உணவு எடுத்துச் செல்வதை கவுரவ குறைவாக நினைத்து வெளியில் விற்கும் தின்பண்டங் களையும், குளிர்பானங்களையும் வாங்கி சாப்பிடுகின்றனர். இதனால் அவர்களது உடல் நலன் பெரும் அளவில் பாதிக்கப்படுவது அவர்களுக்கே தெரிவதில்லை. எல்லோரும் சாப்பிடுகின்றனர் என்பதற்காகவும், ஒரு பொழுது போக்காகவும் இப்படி துரித உணவு வகைகளை நாடுகின்றனர். இப்படி சாப்பிடும் துரித உணவு வகைளிலும் குளிர்பானங்களிலும் எந்தவித சத்துக்களும் இல்லை என்பதுடன் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்க இவை காரணமாகின்றன.

பிரஞ்சு பிரை எனப்படும் விரல் நீள உருளைக்கிழங்கு வருவல் : இதில் மாவுச் சத்து மட்டுமே உள்ளது. இதை தொடர்ந்து சாப்பிட்டால் உடல் எடை கூடும், மலச்சிக்கல் ஏற்படும்.

பர்கர் : இதுவும் தவிடு நீக்கி சுத்திகரிக்கப்பட்ட மாவில் செய்யப்படுவதுதான். இதில் எந்த சத்தும் இல்லை.

பிஸ்ஸா : இதில் சுத்திகரிக்கப்பட்ட, தவிடு நீக்கப்பட்ட மாவுதான் பயன்படுத்தப்படுகிறது. தவிடு நீக்கப்பட்ட தானிய மாவில் மாவு சத்து மட்டுமே உள்ளது. இதில், பயன்படுத்தப்படும் காய்கறிகள், பாலாடைக்கட்டி போன்றவை புதியவை தானா? உயிர்சத்துக்கள் இதில் அடங்கியுள்ளனவா என்பது சந்தேகத்திற்குரியது!

நூடுல்ஸ் : இதுவும் மாவுச்சத்து மட்டுமே மிகுந்த உணவுதான். இதையே சாப்பிட்டுக் கொண்டிருந்தால் மலச்சிக்கல் ஏற்படும்.

சோளா-பட்டூரா : இது மிக பெரிய பூரியாகும். தொட்டுக் கொள்ள மசாலா கொண்டை கடலை தருவார்கள். சோளா பட்டூரா திரும்பத்திரும்ப பொரித்த எண்ணையிலே பொரித்ததை சாப்பிடும்போதும் காரமான மசாலாவை சாப்பிடும்போதும் கேஸ்டிரோ-என்டிரிடிஸ் என்ற வயிற்றுக்கோளாறு ஏற்படும்.

வறுவல் : இதில் கொழுப்பு சத்து அதிகம். பல ரசாயனங்களை சேர்த்து வறுவல் மொறு மொறுப்பாக வைக்கப்படுகிறது. உடல் குண்டாகும். மந்த புத்தி ஏற்படும்.

குளிர்பானங்கள் : ரசாயன குளிர்பானங்கள் உடல் நலத்திற்கு எந்த விதத்திலும் உதவாது. குளிர் கண்ணாடி அணிந்து கொண்டு பந்தாவாக டி.வி. விளம்பரங்களில் இந்த குளிர்பானங் களுக்காக போஸ் கொடுப்பார்கள் பல பிரபலங்கள். ஆனால் இந்த குளிர் பானங்களை நீண்ட நாட்களாக சாப்பிட்டால் உடல் நலம் கெடும் என்பதில சிறிதும் சந்தேகம் இல்லை. இவ்வாறு மருத்துவ இயல் வல்லுனர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

நவநாகரீக உலகில் எல்லாமே வேகமாக நடக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். எதற்கும் பொறுமையாக காத்திருக்க முடிவதில்லை. சாப்பிடும் விஷயத்திலும் அப்படித் தான். உணவு விடுதிகளுக்குச் சென்று ஆர்டர் செய்துவிட்டு அரைமணி நேரம் காத்திருக்க அவகாசமில்லை. உணவாக சாப்பிடுவதற்குப் பதிலாக தண்ணீர் ஆகாரமாக சாப்பிட்டால் என்ன என்று யோசிக்கும் காலமிது. அதனால் தான் ஃபாஸ்ட் ஃபுட் - துரித உணவகங்கள் பெருகி வருகின்றன.

அவரவர் ஆஃபீஸ் அலுவலுக்கிடையில் ஓடுகிற ஓட்டத்தில் சில நிமிடங்கள் சாப்பாட்டுக் காக ஒதுங்குகிற இடம் ஃபாஸ்ட் ஃபுட்தான். ஒருவர் தொடர்ந்து துரித உணவகத்தில் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக்கு ஆபத்தாகலாம். எங்கு சாப்பிட்டாலும் தரமான உணவை முறை யான தயாரிப்பில் தயாரிக்கப் படுவதை சாப்பிடுகி றோமோ என்பதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். இந்த இடங்களுக்கு யார்தான் அதிகம் போகிறார்கள்? முதல் இடம் டீன் ஏஜ்காரர்களுக்குத்தான். குழந்தைகளும், அலுவலகம் போவோரும் கணிசமான அளவுக்கு ஃபாஸ்ட்டை நாடுகிறார்கள்.

இந்த உணவகத்தின் அடிப்படை தத்துவமே குறைவான நேரத்தில் சமைப்பது, அதிகமான தீயை உபயோகிப்பது நிறைய அயிட்டங்கள் விற்பனைக்கு இருந்தாலும் அவரவர் தேவைக்கு ஏற்ப சரியான, பொருத்தமான உணவை திட்டமிட்டு தேர்ந்தெடுக்க வேண்டும்.

சமையலறை எளிதில் கண்ணில் படக் கூடியதாக அமைந்திருக்கிறதா என்பதை பாருங்கள்.

பரிமாறக்கூடியவர்கள் கனிவாக பேசினாலும் சுத்தபத்தமாக இருக்கிறார்களா என்று நோட்டமிடுங்கள்.

பாத்திரங்களை கழுவ நல்ல தண்ணீரை உபயோகிக்கிறார்களா? அல்லது ஒரே தண்ணீரை நாள் முழுவதும் உபயோகிக்கிறார்களா என்பதையும் பார்க்கலாம்.

வாழை இலைக்குப் பதிலாக பிளாஸ்டிக் பயன்படுத்துகிறார்கள். பழைய பிளாஸ்டிக் பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்டதாக இருந்தால் நல்லதல்ல.

குடிநீர் பாதுகாப்பானதாக இருக்கிறதா?

உணவை தேர்ந்தெடுப்பதிலும் உஷாராக இருக்கவேண்டும்.

பிஸ்ஸா அயிட்டம் பிரபலமாகி வருகிறது. காய்கறிகள் அடங்கிய பிஸ்ஸா உடலுக்கு நல்லது. வெண்ணெய் பயன்படுத்தப்பட்டது இதய நோயாளிகளுக்கு ஏற்றதல்ல.

குளிர்பான மோகத்தால் குடிதண்ணீர் கூட இரண்டாவது இடத்திற்கு தள்ளப்படுகிறது. அதில் சிட்ரிக் ஆசிட்டும், ஃபாஸ்பாரிக் ஆசிட்டும் அதிகம். குளிர்பானங்களுக்குப் பதிலாக பழச்சாறு குடிக்கலாம்.

மில்க் ஷேக் அருந்தலாம்.

சென்னா - பட்டாணி, பருப்பு வகை உணவுகளுக்கு முன்னுரிமை அளிக்கலாம்.

மசாலா, காரம் மிகுதியாக உள்ள உணவுகளை தவிர்த்து பச்சைக் காய்கறிகள் நிரம்பியதை எடுத்துக் கொள்ளலாம்.

சத்துக்கள் நிறைந்த, தாதுக்கள் அதிகம் உள்ள எளிதாக ஜீரணமாகக் கூடியவைகளையே சாப்பிடவேண்டும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum