தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

யுகே, யுஎஸ் விஸ்வரூபம் 3வது வார வசூல்

Go down

 யுகே, யுஎஸ் விஸ்வரூபம் 3வது வார வசூல் Empty யுகே, யுஎஸ் விஸ்வரூபம் 3வது வார வசூல்

Post  ishwarya Mon Mar 04, 2013 12:22 pm

யுகே-யில் விஸ்வரூபம் இன்னும் நல்ல வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. மூன்றாவது வார இறுதியில் இதன் யுகே வசூல் 21 திரையிடல்களில் 30,231 பவுண்ட்கள்.

இதுவரை - அதாவது கடந்த ஞாயிறுவரை விஸ்வரூபத்தின் யுகே வசூல் 2,75,318 பவுண்ட்கள். நமது ரூபாய் மதிப்பில் 2.33 கோடிகள்.

கடல் படம் யுகே-யில் இரண்டாவது வார இறுதியில் நான்கு திரையிடல்களில் 3,189 பவுண்ட்கள் வசூலித்துள்ளது. கடந்த ஞாயிறுவரை இதன் யுகே வசூல் 30.2 லட்சங்கள்.

யுஎஸ்ஏ-வில் விஸ்வரூபம் மூன்றாவது வார இறுதியில் 32 திரையிடல்களில் 59,953 அமெரிக்கன் டாலர்களை வசூலித்துள்ளது. இதன் இதுவரையான யுஎஸ் வசூல் 5.38 கோடிகள்.

விஸ்வரூபம் தெலுங்கு பதிப்பு யுஎஸ்-ஸில் சென்ற வார இறுதியில் 15 திரையிடல்களில் 16,047 அமெரிக்கன் டாலர்களை வசூலித்துள்ளது. இதுவரையான அதன் வசூல் நமது ரூபாய் மதிப்பில் 1.03 கோடி.

எந்திரனுக்குப் பிறகு வெளிநாடுகளில் இப்படியொரு அபரிதமான வசூலை பெற்ற படம் விஸ்வரூபம் என்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum