தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஸ்வரூபம் விவகாரம் - விளக்கமளித்தார் விஷால்

Go down

விஸ்வரூபம் விவகாரம் - விளக்கமளித்தார் விஷால் Empty விஸ்வரூபம் விவகாரம் - விளக்கமளித்தார் விஷால்

Post  ishwarya Mon Mar 04, 2013 12:21 pm

விஸ்வரூபம் விவகாரத்தில் நடிகர் சங்கத்தை அவமதிக்கும் எதையும் செய்யவில்லை என்று நடிகர் விஷால் விளக்கமளித்துள்ளார்.

விஸ்வரூபம் பட விவகாரம் உச்சத்தில் இருந்த நேரம் விஷால் தனது ட்விட்டரில் கமலுக்கே இந்த நிலையா, நடிகர் சங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது என்று இரண்டு லைன் தட்டிவிட்டார். இது நடிகர் சங்க நிர்வாகிகள் குறிப்பாக சரத்குமாரையும் ராதாரவியையும் உசுப்பிவிட்டது. பொதுக்குழுவுக்கே வராத விஷால் என்று தொடங்கி சகட்டுமேனிக்கு அவரை வறுத்தனர். கூடவே நடிகர் சங்கத்தை அவமதித்த உங்களை ஏன் சங்கத்தைவிட்டு நீக்கக் கூடாது என்று நோட்டீசும் அனுப்பினர்.

இதற்கு விஷால் விளக்கமளித்துள்ளார். நடிகர் சங்கத்தை அவமதிக்கும் வகையில் எதையும் செய்யவில்லை என அவரது விளக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த விளக்கத்தை ஏற்பதா கூடாதா என்று நடிகர் சங்கம் டெலஸ்கோப் வைத்து ஆராய்ச்சி செய்து வருகிறதாம்.

விஷால் கேட்ட அதே கேள்வியைதான் நடிகர் சங்கத்தின் தலைவர் சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமியும் ட்விட்டரில் கேட்டிருந்தார். ஆனால் அவருக்கு எந்த நோட்டீஸும் அனுப்பப்படவில்லை.

ஏம்பா... ஜனநாயகம் ஜனநாயகம்ங்கிறாங்களே... அதை யாராவது நடிகர் சங்கம் பக்கம் பார்த்தீங்களா?

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» விஸ்வரூபம் விவகாரம்: நடிகர் சங்கத்திற்கு விஷால் கடிதம்
» விஸ்வரூபம் விவகாரம்: பேச்சுவார்த்தை தொடங்கியது
»  விஸ்வரூபம் பட விவகாரம்: மாலை 4 மணிக்கு முஸ்லிம் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை
»  விஸ்வரூபம் பட விவகாரம் : கமலுக்கு கொலை மிரட்டல் டிஜிபியிடம் புகார்
» கமலின் விஸ்வரூபம் பட விவகாரம் போட்டி கமிஷனில் விசாரணை தீவிரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum