அன்று செக்யூரிட்டி இன்று செலிபிரிட்டி - கல்லாபெட்டி சர்ப்ரைஸ்
Page 1 of 1

கல்லாப்பெட்டி... அஸ்வின் பாலாஜி... பி.எஸ்.கருணாநிதி...
அட, எந்த பெயரும் தெரியலையே என்று சந்தேகமாகதான் ஆடியோ விழாவுக்குப் போனதே. விழாவின் சிறப்பு விருந்தினர் கே.பாலசந்தர். தள்ளாத வயதில் இவர் எப்படி அங்கே என்று அனைவருக்கும் ஆச்சரிம். அதனை மேடையிலேயே போட்டுடைத்தார் பாலசந்தர்.
உடம்புக்கு முடியலை இப்போதும் டாக்டரை பார்த்துட்டுதான் வர்றேன் என்று பேச்சை ஆரம்பித்தார் இயக்குனர் சிகரம். தன்னுடைய காலத்தில் புதியவர்களுக்கு அவ்வளவு சீக்கிரம் அங்கீகாரம் கிடைக்காது, ஆனா இப்போ அப்படியில்லை என்றவர், இந்தப் படத்தையும் புதுமுகங்கள்தான் உருவாக்கியிருக்கிறார்கள் அவர்களை வாழ்த்துவதற்காகதான் வந்தேன் என்றார். ஆனால் அதைவிட முக்கிய காரணம் ஹீரோ அஸ்வின் பாலாஜி.
இவர் ஒருகாலத்தில் பாலசந்தரின் வீட்டில் செக்யூரிட்டியாக வேலை பார்த்திருக்கிறார். பிறகு என்னைவிட பெரிய வீட்டுக்கு... கமல் வீட்டுக்கு செக்யூரிட்டியாகப் போனார் என்று பாலசந்தர் விளக்கிய பிறகே அவர் விழாவில் கலந்து கொண்டதன் காரணம் புரிந்தது.
இந்தப் படத்தை ரா ரா இயக்கியிருக்கிறார். ஹீரோயின் ரோஸிலின் ஜாலி, தயாரிப்பாளர் பி.எஸ்.கருணாநிதி.
திறமை யாரிடம் இருந்தாலும் இப்போது ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது என்ற பாலசந்தர் படத்தின் வெற்றி விழாவில் மீண்டும் சந்திப்போம் என்ற போது பார்வையாளர்களே நெகிழ்ந்து போயினர்.
என்றோ தனது வீட்டில் வேலை செய்தார் என்பதற்காக உடல்நிலை சரியில்லாத போதும் நேரடியாக விழாவுக்கு வந்து வாழ்த்தி தானொரு சிகரம்தான் என்பதை நிரூபித்தார் பாலசந்தர்.
மேன் மக்கள் மேன் மக்களே... சும்மாவா சொன்னாங்க.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அன்று எம்.ஜி.ஆர், இன்று அஜித்: சோ புகழாரம்
» தமிழகக் கல்வி அன்று இன்று நாளை
» நாயகனாக உயர்ந்த கே. பாலசந்தரின் செக்யூரிட்டி
» 3 – அன்று ஆச்சரியம் இன்று அய்யோ பாவம்
» மயக்கம் என்ன சர்ப்ரைஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum