தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

லால் மகன் படத்தில் பாவனா

Go down

லால் மகன் படத்தில் பாவனா Empty லால் மகன் படத்தில் பாவனா

Post  ishwarya Mon Mar 04, 2013 11:48 am

சண்டக்கோழி என்றதும் விஷாலுடன் மனதில் தோன்றும் இன்னொரு நபர் லால். காசியாக வில்லத்தனத்தில் தூள் கிளப்பியிருப்பார். பிறகு மாசி என்ற பெயாரில் மருதமலையில் நடித்தார். பிறகு பல படங்கள்.

லால் அடிப்படையில் இயக்குனர். இவரும் ப்ரெண்ட்ஸ், காவலன் படங்களை இயக்கிய சித்திக்கும் நண்பர்கள். ஒன்றாக பாசிலிடம் அசிஸ்டெண்ட் டைரக்டராக பணியாற்றியவர்கள். இவர்கள் இருவரும் இணைந்து முதல் படத்தை இயக்கினர். ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங் என்ற அந்தப் படம் சூப்பர்ஹிட். பிறகு இருவரும் இணைந்து இன் ஹரிஹர் நகர், காபுள்ளி வாலா, வியட்நாம் காலனி, காட்ஃபாதர் என்று படங்களாக எடுத்துத் தள்ளினர். எல்லாமே சூப்பர்ஹிட். இதில் கொஞ்சம் சோடை போனது என்றால் காபுள்ளி வாலா. அதுவும் நூறு நாள் படம் என்றால் மற்றப் படங்களின் ஓட்டத்தைப் பற்றி யோசித்துப் பாருங்கள்.

ஹிட்லர் படத்தில் இந்த இணை பிரிந்தது. ஹிட்லரை சித்திக் மட்டும் இயக்கினார். ஆனால் படத்தை தயாரித்தது லால்.

ஜெயராஜின் களியாட்டத்தில் லால் முதல்முறையாக நடித்தார். பிறகு நடிப்புக்காக தேசிய விருது வாங்கும் அளவுக்கு பல்வேறு வேடங்கள். சில நேரம் நடிகன் லாலுக்காக தயாரிப்பாளர் லால் படத்தை தயாரித்ததும் உண்டு.

தற்போது லாலின் மகன் ஜியன் பால் லால் இயக்குனராகியிருக்கிறார். முதல் படம் ஹனிபீ. இதில் பாவனா, ஆசிப் அலி, பாபுராஜ் ஆகியோர் நடிக்கிறார்கள். பாவனா இந்தப் படத்தைதான் அதிகம் நம்பியிருக்கிறார்.

(ஜியன் என்பதை பிரெஞ்சில் ழான் என்று உச்சரிக்க வேண்டும். மலையாளத்தில் எப்படி...?)

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» அருண் வைத்தியநாதன் படத்தில் நடிக்கவில்லை.. விஜய்யுடன் மட்டுமே நடிக்கிறேன் – மோகன் லால்
» விஜயகாந்த் மகன் படத்தில் காமெடியன் யார்? புது குழப்பம்!!
» ‘கடல்’ படத்தில் நடிக்கும் கார்த்திக், ராதா மகன் – மகள் படங்கள்: மணிரத்னம் வெளியிட்டார்
» மகன் படத்தில் பிராமனர்களை இழிவுபடுத்தும் காட்சி: நடிகர் மோகன்பாபு வீடு மீது திடீர் தாக்குதல்
» காதலில் விழுந்தார் பாவனா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum