தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வெற்றிமாறன் படத்தில் நடிக்கவில்லை - ஃபகத் பாசில்

Go down

வெற்றிமாறன் படத்தில் நடிக்கவில்லை - ஃபகத் பாசில் Empty வெற்றிமாறன் படத்தில் நடிக்கவில்லை - ஃபகத் பாசில்

Post  ishwarya Mon Mar 04, 2013 11:47 am

இயக்குனர் பாசிலின் மகன் ஃபகத் பாசில் வெற்றிமாறனின் புதிய படத்தில் நடிப்பதாக வெளியான செய்தியை மறுத்துள்ளார்.

ஃபகத் பாசில் மலையாளத்தில் முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்து வருகிறார். சென்ற வருடம் மலையாள சினிமாவை தலைநிமிரச் செய்த பல படங்கள் ஃபகத் பாசில் நடித்தது. சமீபத்தில் இவரது நடிப்பில் அன்னாயும் ரசூலும் என்ற படம் வெளியானது. படத்தைப் பார்த்த வெற்றிமாறன் ஃபகத் பாசிலுக்கு போன் செய்து தனது பாராட்டுக்களை தெரிவித்தார். இதுதான் இந்த வதந்தி கிளம்ப மைய காரணம்.

வெற்றிமாறன் தனுஷை வைத்து புதிய படத்தை தொடங்குககிறார். கிளவுட் நைன் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் முக்கியமான வேடத்தில் ஃபகத் பாசில் நடிப்பதாக சிலர் செய்தி வெளியிட்டனர். இதனை வெற்றிமாறன் மறுத்தார். அவரைத் தொடர்ந்து ஃபகத் பாசிலும் தனது மறுப்பை தெரித்துள்ளார்.

அன்னாயும் ரசூலும் படத்தைப் பார்த்துவிட்டு வெற்றிமாறன் போனில் அழைத்துப் பாராட்டினார். அவரது படத்தில் நான் நடிப்பதாக எப்படி செய்தி வெளியானது ஏன் என்றே தெரியவில்லை. இதுவரை நடிக்கக் கேட்டு வெற்றிமாறன் தரப்பினர் என்னை தொடர்பு கொள்ளவில்லை என விரிவாக விளக்கம் தந்துள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum