இயற்கை உணவு ஓடப்பம்
Page 1 of 1
இயற்கை உணவு ஓடப்பம்
தென்னிந்தியாவில் அதிக பயன்பாட்டில் உள்ள உணவுப் பொருள்களில் மைதா முதன்மையானது. மைதாவைப் பயன்படுத்தும் பலருக்கு அது எதில் இருந்து தயாராகிறது என்பது புரிவதில்லை. மைதாவின் மூலப்பொருள் கோதுமை. கோதுமையின் உள்ளேயுள்ள மாவுப் பொருளே மைதா. அரிசியில் உள்ள பிரச்னைதான் இதிலும். சத்துக்கள் மிகுந்த மேல் தோலை அகற்றிவிடுகிறார்கள். கோதுமைக்கே உரித்தான மஞ்சள் நிறத்தைப் போக்கி, தும்பைப்பூ வெண்மையை கொண்டு வருவதற்காக பென்சாயில் பெராக்சைடு போன்றசில ரசாய னங்களைச் சேர்ப்பதாகச் சொல்கிறார்கள். இந்த ரசாயனங்கள் உடம்புக்கு ஒவ்வாதவை.
மைதாவை சில நாடுகளில் மட்டுமே உணவாகப் பயன்படுத்துகிறார்கள். ஐரோப்பா, சீனா, இங்கிலாந்தில் மைதா பயன்பாட்டில் இல்லை. இரண்டாம் உலகப்போரின் போது, அரிசி, கோதுமைத் தட்டுப்பாடு நிலவியதால் இந்தியர்கள் மைதாவை உணவாக்கிக் கொள்ளும் நிர்ப்பந்தம் ஏற்பட்டதாக எழுதுகிறார்கள் ஆய்வாளர்கள். கோதுமையில் இருக்கும் நார்ச்சத்து, மைதாவில் இல்லை.
நார்ச்சத்தில்லாத உணவு செரிமானத்தை சிரமத்துக்கு உள்ளாக்கும். இரவு பரோட்டா சாப்பிட்டால் மறுநாள் காலையில் வயிறு கபடி விளையாடும். காரணம், செரியாமை. மைதாவை தொடர்ந்து பயன்படுத்தினால், சிறுநீரக நோய், இதயநோய் வரக்கூடும் என்றெல்லாம் பயமுறுத்துகிறார்கள். பரோட்டாவை சால்னாவில் ஊறவைத்து கட்டுபவர்கள் கண்டிப்பாக கவலைப்பட வேண்டும்.
தமிழகத்தைப் பொறுத்தவரை கோதுமை மைதா பயன்பாட்டில் இல்லை. மரவள்ளிக்கிழங்கு மைதாவைத்தான் உபயோகிக்கிறோம். சேலம் வட்டாரத்தில் மரவள்ளிக்கிழங்கில் ஜவ்வரிசி, மைதா தயாரிக்கும் தொழிற்சாலைகள் ஏராளமாக உள்ளன. மரவள்ளிக்கிழங்கு மைதாவில் ரசாயனப் பயன்பாடு குறைவு. இருந்தும் அளவோடு பயன்படுத்த வேண்டும். கேரளத்தில், பிரேக்ஃபாஸ்ட் முதல் டின்னர் வரை எல்லாவற்றிலும் மைதா கலந்து உறவாடுகிறது.
நீரிழிவு, இதய நோய்கள் அதிகரிப்பதற்கு தொடர்ந்து மைதா பயன்படுத்துவதே காரணம் என்று எச்சரிக்கை மணி அடிக்கிறார்கள் கேரள மருத்துவர்கள்.
மைதா பயன்பாட்டைக் குறைக்கச்சொல்லி பிரசார இயக்கங்களும் ஆங்காங்கே நடத்தத் தொடங்கிவிட்டார்கள். கேரள தொலைக்காட்சிகளில் விவாதங்கள் தூள் பறக்கின்றன. உணவு வல்லுனர்கள், மைதா பயன்படுத்தாமல் சமைக்கும் நுட்பத்தை விளக்கி பயிற்சி முகாம்களை
நடத்துகிறார்கள்.
கேரள மக்கள் ஓடப்பத்தைக் கொண்டாடுகிறார்கள். எளிமையான செய்முறை கொண்டதால் பெரும்பாலும் இதுவே காலை டிபனாக இருக்கிறது.
ஓடில் செய்யப்படும் அப்பம். அதனால் ‘ஓடப்பம்’. ஓடென்றால் மண்பாண்டம். மிகவும் கலைநயத்தோடு செய்யப்பட்ட அப்ப ஓட்டின் மேல் மாவை ஊற்றி வேகவைக்கிறார்கள். இன்றைக்கு சமையல் தொழில்நுட்பம் எவ்வளவோ முன்னேறிவிட்டது.
இப்போது யார் வீட்டில் மண்பாண்ட பொருட்கள் எல்லாம் இருக்கப்போகிறது என்று சலித்துக் கொள்பவர்கள் ஒருமுறை கேரளாவுக்குச் செல்ல வேண்டும். கேரளத்தில் எல்லா வீடுகளிலும் மண்பாண்டத்தால் செய்யப்பட்ட அப்பஓடு, பணியாரச் சட்டி இருக்கும். எந்த உணவை எந்தப் பாத்திரத்தில் செய்வது என்பது சமையல் கலையில் முக்கிய அம்சம். அதற்கு கேரள மக்களிடம் பாடம் படிக்க வேண்டும்.
ஓடப்பம்
என்னென்ன தேவை?
மைதா - அரைகிலோ
முட்டை - 1
உப்பு - தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
மைதாவில் முட்டையை உடைத்து ஊற்றி, உப்பு, தண்ணீர் சேர்த்து தோசைமாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளுங்கள். இம்மாவை அப்ப ஓட்டில் ஊற்றி வேக வையுங்கள். ஓடப்பம் ரெடி.
இரும்பு, எவர்சில்வர், அலுமினியக் காலத்தைக் கடந்து இப்போது நான்ஸ்டிக் காலம். ஆனால், இந்த நான்ஸ்டிக் பொருட்களில் உணவுப் பொருள்கள் ஒட்டாமல் இருக்கப் பயன்படுத்தப்படும் ரசாயனம் உடம்பை கனக்கச் செய்துவிடும் என்று மிரட்டுகிறார்கள் ஆய்வாளர்கள். மண்பாண்டம்தான் மனித உடலுக்கேற்றது. மைதாவால் ஏற்படும் பாதிப்பை மண்பாண்டத்தால் சரிகட்டி விடுகிறார்கள் கேரள மக்கள். ஓடப்பம் செய்வதே ஒரு கலையம்சம் பொருந்திய வேலையாக இருக்கிறது. தேங்காய்ப்பால் இதற்குத் தகுந்த சைடிஷ். உருளைக்கிழங்கு ஸ்டியூவும் தருகிறார்கள். அசைவ உணவகங்களில் சிக்கன் தருகிறார்கள். - See more at: http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=1663&cat=500#sthash.WgMJVT75.dpuf

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» இயற்கை உணவு ஓடப்பம்
» இயற்கை உணவு இதமான வாழ்வு
» இயற்கை உணவு இதமான வாழ்வு
» உடலை உற்சாகமாக இயங்கச் செய்யும் இயற்கை உணவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum