பழ மோதகம் வெறும் பதார்த்தம் மட்டுமல்ல
Page 1 of 1
பழ மோதகம் வெறும் பதார்த்தம் மட்டுமல்ல
மோதகம் வெறும் பதார்த்தம் மட்டுமல்ல... அது ஒரு தத்துவப் படிமம். எங்கும் வியாபித்திருக்கும் பிரம்மமானது மிகவும் பரிபூரணமானது என்பதே மோதகத்தின் செய்தி (உப்புச்சப்பு இல்லாத இந்த வாழ்க்கையைக் கடந்து, பிரம்மத்தை நோக்கிச் சென்றால் வாழ்க்கை பூரணமாக இனிக்கும்).
இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி ஒன்றுபோல கொண்டாடப்பட்டாலும், மோதகம் மட்டும் அப்பகுதியின் சூழலுக்கேற்ப வித்தி யாசப்படும்.
மகாராஷ்டிராவில் பனை ஓலை மோதகம், பலா இலை மோதகம், கொய்யா இலை மோதகம், பூரண மோதகம், மோதகக் கொழுக்கட்டை என 8 வகை மோதகங்கள் செய்து விநாயகருக்குப் படையலிடுவார்கள். தஞ்சாவூருக்குப் பக்கத்திலுள்ள கணபதி அஹ்ரகாரம் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி அன்று ஒரே ஒரு மோதகம் மட்டுமே செய்கிறார்கள். பிரமாண்டமான அந்த மோதகத்தை விநாயகருக்குப் படைத்து ஊரில் உள்ள அனைவருக்கும் பிரசாதமாகக் கொடுக்கிறார்கள்.
பெரும்பாலும் பருப்பும் வெல்லமும் கலந்த பூரணத்தை வைத்தே மோதகம் செய்யப்படுகிறது. கேரளாவில் செய்யப்படும் பழ மோதகம் சீடையைப் போல மொறுமொறுவென இருக்கிறது. அரிசிமாவில் வாழைப்பழத்தைக் கலந்து செய்யப்படுகிறது. வாழைப்பழம், இயற்கையின் கொடை. மண்ணின் தன்மைக்கேற்ப வாழைப்பழத்தின் வடிவமும் சத்தும் வேறுபடுகிறது. தஞ்சைப் பகுதியில் பூவன், மொந்தன் பழங்கள் விளைகின்றன. பூவன் மருந்துக்கு என்றால், மொந்தன் சுவைக்கு.
அதிலும் தோல் கறுத்து, கனிந்த மொந்தன் பழம் சாப்பிடுவது அப்படியொரு அனுபவம். புதுக்கோட்டையை ஒட்டிய செம்மண் காடுகளில் ரஸ்தாலி, பச்சை. ரஸ்தாலி, மாவாக கரையும். பச்சை, நாவில் நின்று தித்திக்கும். தென்மாவட்டங்களுக்குச் சென்றால், பாளையங்கோட்டன், ரசகதலி, செவ்வாழை... தஞ்சையில் விளையும் பூவனைப் போல இருந்தாலும் பாளையங்கோட்டனில் இனிப்பு அதிகம். விரல்நீளமுள்ள ரசகதலி ரஸ்தாலிக்குத் தம்பி. செவ்வாழையைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை.
மிதமான வாசனை இதமான தித்திப்பு... குழந்தைப் பேறு இல்லாத தம்பதிகள் தினமும் செவ்வாழை சாப்பிடுவது பயனளிக்குமாம்! திண்டுக்கல் பக்கம் போனால் சிறுமலைப்பழம்... மலைவாழை என்பார்கள். இந்த குட்டியூண்டு பழம்தான் வாழைப்பழங்களுக்கே அரசன். குமரி மலைப்பழம், தனித்த வாசனையுடையது. சிறுமலைப் பழத்தை விட சற்று பெரிதாக இருக்கும்.
பழ மோதகம் நீங்களும் செய்யலாம்!
என்னென்ன தேவை?
பச்சரிசி - கால் கிலோ
வாழைப்பழம் - 5 (ரசகதலி அல்லது பூவன்)
சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - பொரித்தெடுக்கும் அளவுக்கு
உப்பு - தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
அரிசியை லேசாக வறுத்து நைஸாக அரைத்துக் கொள்ளுங்கள். அதில் உப்பு, வாழைப்பழம், சர்க்கரை சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளுங்கள். தேவைப்பட்டால் லேசாக தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம். பிசைந்த மாவை 1 மணி நேரம் ஊற வையுங்கள். பின்னர் சிறுசிறு உருண்டைகளாகப் பிடித்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுங்கள். பழமோதகம் பலே!
கேரள மக்களின் ஜீவன் என்றால் நேந்திரம் பழம்தான். பாலக்காடு ரசகதலியும் கேரள உணவில் முக்கிய அங்கம் வகிக்கிறது. வாழைப்பழத்தால் மட்டும் இந்தியாவுக்கு பலகோடி ரூபாய் அன்னியச்செலாவணி கிடைக்கிறது. குறிப்பாக, சிறுமலைப்பழம் கணிசமாக ஏற்றமதி செய்யப்படுகிறது. கேரள நேந்திரத்தையும் அனுப்புகிறார்கள். என்னதான் விளைச்சலில் முந்தியிருந்தாலும் பதப்படுத்தும் தொழில்நுட்பத்தில் நாம் வெகுவாகப் பின் தங்கியிருக்கிறோம். அமெரிக்காவில் நம்மூர் வாழைப்பழம், மாம் பழங்களை வாங்கி, பதப்படுத்தி நம்மூருக்கே திரும்ப அனுப்பி காசு பார்க்கிறார்கள்!
கேரளாவில், நம்மூரைப் போல பூரணம் வைத்து மோதகம் செய்பவர்கள் குறைவு. மலபார் பகுதிகளில் பனை ஓலை மோதகம் செய்கிறார்கள். திருவனந்தபுரம் உள்ளிட்ட பிற பகுதிகளில் பழமோதகம்தான் பிரதானம். நேந்திரம் சிப்ஸ் பொரிப்பது போல, இனிப்பக வாசலில் சுடச்சுட பழமோதகம் போட்டுத் தருகிறார்கள். - See more at: http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=1680&cat=500#sthash.4ISizXR0.dpuf

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பழ மோதகம்
» பழ மோதகம் வெறும் பதார்த்தம் மட்டுமல்ல
» வெல்லம், பருப்பு மோதகம்
» பழ மோதகம் பழ மோதகம்
» பழ மோதகம்
» பழ மோதகம் வெறும் பதார்த்தம் மட்டுமல்ல
» வெல்லம், பருப்பு மோதகம்
» பழ மோதகம் பழ மோதகம்
» பழ மோதகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum