தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திமிரு நடிகையும் திருந்தாத நடிகர்களும்

Go down

 திமிரு நடிகையும் திருந்தாத நடிகர்களும் Empty திமிரு நடிகையும் திருந்தாத நடிகர்களும்

Post  ishwarya Sat Mar 02, 2013 6:22 pm

அந்த நடிகைக்கு திமிரு அதிகம். அவரை அறிமுகப்படுத்தியதற்காக வெட்கப்படுறேன். இயக்குனர் இமயம் பாரதிராஜா மனம் வருந்தி இப்படிச் சொன்னது காஜல் அகர்வாலை.

சாதாரண சேல்ஸ் கேர்ளாக இருந்த காஜல் அகர்வாலை தனது பொம்மலாட்டம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகப்படுத்தினார் பாரதிராஜா. இன்று அவர் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இந்தியிலும் முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கிறார்.

தன்னை ஏற்றிவிட்ட ஏணி தமிழ் சினிமா என்பதை சொல்ல இவருக்கு ஏனோ கேவலம். தமிழ், தெலுங்கைவிட இந்திதான் பெஸ்ட் என்று சொல்லிக் கொண்டிருந்தவர் இப்போது தெலுங்குடன் கம்பேர் செய்தால் தமிழ் ஒன்றுமேயில்லை என பேச ஆரம்பித்திருக்கிறார். படப்பிடிப்பில் இவர் காட்டும் அலம்பல் அளவில்லாதது. இவருக்காக தயா‌ரிப்பாளர்கள் செய்யும் செலவில் ஒரு படம் எடுக்கலாம்.

இவ்வளவு தூரம் தமிழை தரையில் போட்டு மிதித்த பிறகும் இவரை‌த் தேடிச் சென்று வரவேற்கிறது தமிழ் சினிமா என்றால் அது எவ்வளவு பெ‌ரிய அவமானம்?

தமிழை தொடர்ந்து தரக்குறைவாக விமர்சித்துவரும் இவரை தமிழ்ப்பட இயக்குனர்களும் நடிகர்களும் புறக்கணிப்பார்கள் என்று நினைத்தால் அது நமது ஏமாளித்தனம். அடுத்து விஜய் நடிக்கும் ‌ஜில்லா படத்துக்கு இவரைதான் அணுகியிருக்கிறார்கள். கோடிக்கு மேல் கொடுக்கவும் நம்மாட்கள் தயார். கார்த்தியின் அழகுராஜாவிலும் இவர்தான் நாயகியாம்.

தன்மானம்.. தன்மானம்னு ஒண்ணு உண்டே... அதை எங்கயாச்சும் பார்த்தீங்களா?
காஜல் அகர்வால், ஜில்லா, விஜய்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum