தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எஸ்தர், பியா‌ரிட்ஸ்... பார்வதி?

Go down

 எஸ்தர், பியா‌ரிட்ஸ்... பார்வதி? Empty எஸ்தர், பியா‌ரிட்ஸ்... பார்வதி?

Post  ishwarya Sat Mar 02, 2013 6:11 pm

கடலும் கடல் சார்ந்த கதைக்களமும் அவ்வளவு எளிதில் நம்மைவிட்டுப் போகாது போலிருக்கிறது. நீர்ப்பறவை, கடல், டேவிட்டை தொடர்ந்து அலைகளின் இரைச்சலுடன் வரவிருக்கிறது ம‌ரியான்.

பரத்பாலா இயக்கத்தில் தனுஷ், பூ பார்வதி நடிக்கிறார்கள்.

நீர்ப்பறவையில் கடலோர எஸ்தராக நடித்தார் சுனைனா. வழக்கமான தமிழ் ஹீரோயினாக இல்லாமல் கடலோர கிராமத்தின் எளிய கிறிஸ்தவப் பெண்ணாகவே அதில் வாழ்ந்திருந்தார். கடல் பியா‌ரிட்ஸ் எஸ்த‌ரின் இன்னொரு வார்ப்பு. இருவருமே ஹீரோவுக்கு பாவமன்னிப்பு நல்கி நல்வழிப்படுத்தியவர்கள்.

இதே நல்ல மனம் கொண்ட கடலோர கிராமத்துப் பெண்ணாக ம‌ரியானில் நடித்து வருகிறார் பார்வதி. எஸ்தர், பியா‌ரிட்ஸைப் போல பார்வதியின் கேரக்டரும் படத்தில் அழுத்தமாக அமையும் என்கின்றார்கள் ம‌ரியான் யூனிட்டில். பார்வதியில் பூ பார்வதி என்று என்னை குறிப்பிடுகிறவர்கள் இந்தப் படம் வந்தால் ம‌ரியான் பார்வதி என்பார்கள் என்கிறார் நம்பிக்கையுடன்.

நமது கவலையெல்லாம் கடல் சார்ந்த மூன்று படங்களுக்கும் நேர்ந்த கதி ம‌ரியானுக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதே.
பார்வதி, மரியான், பரத்பாலா

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum