தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ம‌ரியாதை ராமண்ணா ‌ரீமேக்கில் சந்தானம்!

Go down

ம‌ரியாதை ராமண்ணா ‌ரீமேக்கில் சந்தானம்! Empty ம‌ரியாதை ராமண்ணா ‌ரீமேக்கில் சந்தானம்!

Post  ishwarya Sat Mar 02, 2013 6:07 pm

கார்த்தி, ஆர்யாவுடன் காமெடி வேடத்தில் நடித்தாலும் படங்களில் கதாநாயக அந்தஸ்துடன்தான் வலம் வருகிறார் சந்தானம். போதாததற்கு கண்ணா லட்டு தின்ன ஆசையாவில் ஹீரோவாகவே அறிமுகம். இதையடுத்து மேலுமொரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இது சோலோ ஹீரோ.

பஸ்டர் கீடனின் த ஹாஸ்பிடாலிட்டி மௌனப் படத்தை தழுவி ராஜமௌலி எடுத்தப் படம் ம‌ரியாத ராமண்ணா. பெ‌ரிய ஹீரோக்களை மட்டும் வைத்து ஹிட் தருகிறார் என்று விமர்சனம் எழுந்த போது அதனை உடைப்பதற்காக ம‌ரியாதை ராமண்ணா படத்தில் காமெடி நடிகர் சுனிலை கதாநாயகனாக்கினார். படம் பம்பர்ஹிட்.

இந்தப் படத்தை சன் ஆஃப் சர்தார் என்ற பெய‌ரில் இந்தியில் ‌ரீமேக் செய்து வெளியிட்டு நூறு கோடி வசூல் பார்த்தனர். விரைவில், இதன் தமிழ் ‌ரீமேக் உ‌ரிமையை வைத்திருக்கும் பிவிபி சினிமா சந்தானத்தை ஹீரோவாக வைத்து தமிழில் இதனை ‌ரீமேக் செய்கிறது. இந்த ‌ரீமேக்கை ஆர்.கண்ணன் இயக்குவதாக இருந்தது. தற்போது முத்திரை படத்தை இயக்கிய ஸ்ரீகாந்தை தேர்வு செய்திருக்கிறார்கள்.

விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum