தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

படம் இயக்குகிறார் ரஹ்மான் - ரசூல் பூக்குட்டி

Go down

படம் இயக்குகிறார் ரஹ்மான் - ரசூல் பூக்குட்டி Empty படம் இயக்குகிறார் ரஹ்மான் - ரசூல் பூக்குட்டி

Post  ishwarya Sat Mar 02, 2013 6:00 pm

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும், அவருடன் ஆஸ்கர் வென்ற ரசூல் பூக்குட்டியும் நல்ல நண்பர்கள். ரசூல் தனது நண்பர் ரஹ்மான் குறித்து சொல்லியிருக்கும் ஒரு விஷயம் இந்தியா முழுக்க ஆச்ச‌ரியத்தை கிளப்பியிருக்கிறது.

ரஹ்மான் விரைவில் இயக்குனராகிறார். இதுதான் அந்த செய்தி.

நடிப்பு, இசை, கலை இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங் என பலதுறைகள் இணைந்த சினிமாவில் கேப்டன் ஆஃப் தி ஷிப் என்றால் அது இயக்குனர்தான். கேப்டன் தொப்பியை வேறு யாராலும் - அவர் ஆஸ்கர் வாங்கிய இசையமைப்பாளராக இருந்தாலும் அணிய முடியாது. அந்த தொப்பியை ஒருமுறையேனும் அணிய வேண்டும் என்ற ஆசை ஒவ்வொருவருக்குள்ளும் உண்டு. ரஹ்மானுக்குள்ளும் இருந்திருக்கிறது.

அமெ‌ரிக்காவில் வைத்து படத்துக்கான கதை, திரைக்கதையை ரஹ்மான் எழுதியதாகவும், கதையை அவர் தன்னிடம் சொன்னதாகவும் ரசூல் தெ‌ரிவித்துள்ளார். விரைவில் ரஹ்மான் அந்த கதையை இயக்குவார் எனவும் அவர் தெ‌ரிவித்துள்ளார்.

இசை... இசை... மேலும் இசை... என்றிருக்கும் ரஹ்மானின் இசை உலகத்துக்குள் இயக்குனர் ஆசை என்ற அந்நியப் பறவை இவ்வளவு நாள் சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தது என்பதை அவருக்கு நெருக்கமானவர்களாலேயே நம்ப முடியவில்லை.

நமக்கும்தான்.
ரஹ்மான், ரசூல் பூக்குட்டி

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  இயக்குனராகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்: ரசூல் பூக்குட்டி
» ரஹ்மான் – ரசூல் பூக்குட்டி ஆஸ்கர் வாங்கும்போது நான் வாங்க மாட்டேனா? – சரத்குமார்
» ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி சொந்தமாக படம் தயாரிக்கிறார்
» ரசூல் பூக்குட்டி படத்தில் ரஜினி நடிக்கவில்லை!- சௌந்தர்யா
»  ரசூல் பூக்குட்டி படத்தில் ரஜினி நடிக்கவில்லை: சௌந்தர்யா மறுப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum