தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சென்னை பாக்ஸ் ஆஃபிஸ்

Go down

சென்னை பாக்ஸ் ஆஃபிஸ் Empty சென்னை பாக்ஸ் ஆஃபிஸ்

Post  ishwarya Sat Mar 02, 2013 5:55 pm


5. ஹ‌ரிதாஸ்
இந்த வருடம் தமிழில் வெளியான படங்களில் நல்ல படம் ஹ‌ரிதாஸ். ஆனால் கலெக்சன்..? சென்ற வாரம் வெளியான இப்படம் முதல் மூன்று தினங்களில் 6.1 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது. படத்தின் விமர்சனங்கள் கலெக்சனை வரும் நாட்களில் அதிகப்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது. இல்லையெனில் அது நமது ரசனைக்கு விழுந்த அடி, சந்தகமில்லை.

4. ஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ்
இரண்டு வாரங்கள் முடிவில் சென்னையில் இப்படம் 14.3 லட்சங்களை வசூலித்துள்ளது. சென்ற வார இறுதியில் இதன் வசூல் 2.14 லட்சங்கள். வார நாட்களில் 4.4 லட்சங்கள்.

3. வனயுத்தம்
சென்ற வார இறுதியில் இப்படம் 3.8 லட்சங்களையும், வார நாட்களில் 3.7 லட்சங்களையும் வசூலித்து மூன்றாவது இடத்தில் உள்ளது. இதன் இதுவரையான சென்னை வசூல் 15.4 லட்சங்கள்.

2. அமீ‌ரின் ஆதிபகவன்
சென்ற வாரம் வெளியான இப்படம் முதல் மூன்று தினங்களில் சென்னையில் 1.38 கோடியை வசூலித்து இரண்டாமிடத்தில் உள்ளது.

1. விஸ்வரூபம்
தொடர்ந்து அதே முதலிடத்தில் விஸ்வரூபம். வார இறுதியில் ஆதிபகவன், ஹ‌ரிதாஸ் படங்கள் வெளியானதாலும், பல திரையரங்குகளிலிருந்து விஸ்வரூபம் தூக்கப்பட்டதாலும் வசூல் 91 லட்சங்களாக கீழிறங்கியது. வார நாட்களில் வசூல் 1.43 கோடி. 18 தினங்களில் இதன் சென்னை வசூல் 10.6 கோடிகள். இந்த வருடத்தின் இரண்டாவது அதிகபட்ச வசூல்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum