தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சோனியா கெட்டப்பில் பி‌ரியாமணி - போலீஸ் விசாரணை

Go down

சோனியா கெட்டப்பில் பி‌ரியாமணி - போலீஸ் விசாரணை Empty சோனியா கெட்டப்பில் பி‌ரியாமணி - போலீஸ் விசாரணை

Post  ishwarya Sat Mar 02, 2013 5:42 pm

சோனியாகாந்தியின் கெட்டப்பில் அரசியல் படம் ஒன்றில் பி‌ரியாமணி நடிக்கிறார். இதன் காரணமாக போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளதாக செய்தி பரவியுள்ளது.

தெலுங்கில் சாண்டி என்ற புதிய படத்தின் தொடக்க விழா நடந்தது. இதில் சேலை அணிந்து சோனியா காந்தியின் கெட்டப்பில் பி‌ரியாமணி கலந்து கொண்டார். படம் அரசியல் சம்பந்தப்பட்டது. இதன் காரணமாக சோனியா காந்தியின் வாழ்க்கையை படமாக்குகிறார்களா என்று பி‌ரியாமணியிடமும், இயக்குனர் சமுத்திராவிடமும் போலீஸார் விசாரணை மேற்கொண்டதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து படத்தின் ஸ்கி‌ரிப்டை சமுத்திராவிடமிருந்து போலீஸார் வாங்கியுள்ளனர்.

ஆந்திர அரசியலில் செல்வாக்குடன் இருக்கும் இளம் தலைவர் கொல்லப்படுகிறார். அவருக்குப் பதிலாக கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் அவரின் தங்கையை அரசியலுக்கு அழைத்து வருகிறார்கள். தனது திறமையால் எப்படி அந்த கல்லூரி மாணவி ஆந்திர அரசியலில் பெரிய இடத்துக்கு வருகிறார் என்பதுதான் படத்தின் கதை. இதில் கல்லூரி மாணவியாக பி‌ரியாமணி நடிக்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சோனியா வேடத்தில் பிரியாமணி: போலீஸ் விசாரணை
» ரஞ்சிதா குறித்து சென்னை அபார்ட்மென்டில் பெங்களூர் போலீஸ் விசாரணை!
» நடிகர் மன்சூர் அலிகான் மீது கந்து வட்டிப் புகார் – போலீஸ் விசாரணை
» இண்டர்நெட்டில் “7 ஆம் அறிவு”,“வேலாயுதம்” படங்களை வெளியிட்டது யார்? சைபர் கிரைம் போலீஸ் விசாரணை
» புது கெட்டப்பில் ஆதி!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum