தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கோச்சடையான் படம்: ரஜினி முழு திருப்தி!

Go down

கோச்சடையான் படம்: ரஜினி முழு திருப்தி!  Empty கோச்சடையான் படம்: ரஜினி முழு திருப்தி!

Post  ishwarya Sat Mar 02, 2013 5:27 pm

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி! கோச்சடையான் திரைப்பட ஷூட்டிங்குகள் முடிந்து போஸ்ட் புரொடக்சன் நிலையில் உள்ளது. இதனால் படம் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

சமீபத்தில் எடிட் செய்யப்பட்ட முழுப் படத்தையும் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினி படம் எவ்வளவு நன்றாக வந்திர்க்கிறது என்று முழு திருப்தி அடைந்ததோடு, ஆச்சரியத்தையும் வெளியிட்டாராம்.

ரஜினி எதிர்பார்த்தைவிட பிர்ம்மாண்டமாகவும் விறுவிறுப்பாகவும் படம் வந்துள்ளதாக இயக்குனர் கே.எஸ். ரவிகுமாரும் தெரிவித்துள்ளார். ஆனால் இந்தப் படத்தின் இயக்குனர் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா என்பது குறிப்பிடத்தக்கது.

தந்தையிடமிருந்து கிடைத்த இந்த திடீர் பாராட்டினால் மக்ழிச்சியில் உள்ளார் சௌந்தர்யா.

படத்தின் டப்பிங், ஸ்பெசல் எபெக்ட்ச் ஆகியவை லண்டன், லாஸ் ஏஞ்சலஸ் மற்றும் ஹாங்காங்கில் ஒரே நேரத்தில் நடக்கவிருப்பதாக தெரிகிறது. மார்ச் 15ஆம் தேதி இந்த வேலைகள் நடைபெறும் என்று தெரிகிறது.

ஹாலிவுட் படங்களான அவதார், டின்டின் படங்கள் போன்று மோஷன் கேப்ச்சர் டெக்னாலஜி இந்தப் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

படத்திற்கு இசை ஏ.ஆர். ரஹ்மான், கதை, திரைக்கதை, வசனம் கே.எஸ்.ரவிக்குமார்.

ஆஸ்கார் வென்ற ரசூல் பூக்கூட்டி ஒலி அமைப்பை கையாள்கிறார்.

தமிழ், இந்தி, தெலுங்கு, மற்றும் ஆங்கிலத்தில் உலகம் முழுதும் கோச்சடையான் ரிலீஸ் ஆகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கோச்சடையான் படம் தீபாவளிக்கு ரிலீஸ்! – விமான நிலையத்தில் ரஜினி பேட்டி
» ரஜினி உடல் நலம் – சிங்கப்பூர் டாக்டர்கள் திருப்தி-பரிசோதனைக்குப் பின் ஷூட்டிங் திரும்புகிறார்
» ஷாரூக்கான் – ரஜினி இணையும் முதல் படம் – கோடிக்கணக்கான ரஜினி ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி
» கோச்சடையான்… ரஜினி அதிருப்தியா?
» சுறா – திருப்தி… பரம திருப்தி!: விஜய்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum