செவ்வாயில் நீரோடைகள் இருந்துள்ளமைக்கான ஆதாரங்கள் கிடைத்தன'
Page 1 of 1

செவ்வாய்க் கிரகத்தில் தரையிறங்கி 7 வாரங்களே கடந்துள்ள நிலையில் நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் என்ற ஆய்வு ஊர்தி முற்காலங்களில் செவ்வாயின் தரையில் நீரோடைகள் இருந்துள்ளமைக்கான ஆதாரங்களை பூமிக்கு அனுப்பிவைத்துள்ளது.
தொடர்புடைய விடயங்கள்
செவ்வாயின் தரையில் ஊர்ந்து ஆதாரங்களை சேகரித்துவரும் கியூரியாசிட்டி ரோவர் என்ற ரோபோ ஊர்தி அனுப்பி வைத்துள்ள படங்களில் கிரவெல் (சரளை) கற்களும் மணலும் கலந்து உருவான பாறைப் படிமங்கள் காணப்படுகின்றன.
இந்தப் பாறைப் படிமங்களில் காணப்படும் உருண்டை
வடிவான குறுணிக் கற்களின் அளவையும் தன்மையையும் பார்க்கும்போது அவை
நீரோட்டத்தால் அள்ளுண்டு வந்துள்ளமையை காட்டுவதாக இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ள
விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
செவ்வாயில் முற்காலங்களில் காணப்பட்ட நீரோடைகளின்
கட்டமைப்புத் தொகுதியொன்றை இந்த ஆய்வு ஊர்தி கண்டுபிடித்துள்ளதாக
ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
'செவ்வாயின் தரையில் பல பில்லியன் ஆண்டுகளுக்கு
முன்னர் காணப்பட்டுள்ள இந்த நீரோட்டங்கள் நீண்டகாலத்துக்கு நிலைத்து
இருந்திருக்கலாம்' என்று நாசா நிலையத்தில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில்
விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
பல்லாயிரம் மில்லியன் ஆண்டுகளாக இந்த நீரோட்டங்கள் செவ்வாயின் தரையில் நிலைத்து இருந்திருக்கலாம் என்று அவர்கள் நம்புகின்றனர்.
நீண்டகாலமாக விண்வெளியிலிருந்து செவ்வாய்க்
கிரகத்தை ஆராய்ந்துவந்த விண்கலங்கள் தரைக்கு அனுப்பிய படங்களில்,
செவ்வாயில் நீரோட்டங்கள் இருந்துள்ளமைக்கான ஆதாரங்கள் ஏற்கனவே
கிடைத்துள்ளன.
ஆனால், இப்போது கியூரியாசிட்டி ரோவர்
ஆய்வு ஊர்தி அங்கு நேரடியாக தரையிறங்கி நடத்திய ஆய்வுகள் மூலம் கிடைத்துள்ள
படங்கள் முன்னைய ஆய்வுகளை உறுதிப்படுத்துகின்ற நேரடி ஆதாரங்களாக
பார்க்கப்படுகின்றன.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஆறு ஆதாரங்கள்
» ஆறு ஆதாரங்கள்
» செவ்வாயில் உயிர்கள் வாழ்ந்தமைக்கான அறிகுறி கண்டுபிடிப்பு

» தேவர்கள் பூமிக்கு வந்த உண்மை ஆதாரங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum