கண்களைக் கவரும் உதடுகள்
Page 1 of 1
கண்களைக் கவரும் உதடுகள்
முகத்திற்கு மேக்கப் போட நேரமில்லை என்றாலும் உதடுகளுக்கு மேக்கப் போட யாரும் மறப்பதில்லை. பார்ப்பவர் கண்களைக் கவரும் உதடுகளைப் பெற...
லிப் லைனர்: இது பென்சிலைப் போன்ற தோற்றம் உடையது. உதடுகளின் வடிவத்தை லிப் லைனரைக் கொண்டு வரைந்து, அதன் பிறகு அதற்குள் லிப்ஸ்டிக்கால் நிறத்தை நிறப்புவது நல்லது. லிப்ஸ்டிக் உதட்டைவிட்டு வெளியே பரவுவதை இது தடுக்கும்.
லிப்ஸ்டிக்கின் நிறத்திற்கு ஏற்றதாக லிப் லைனரின் நிறம் இருக்க வேண்டும். இல்லையென்றால் உதட்டின் அழகு கெட்டுவிடும். அதற்காக ஒவ்வொரு லிப்ஸ்டிக் வாங்கும் போதும் அதற்கேற்ற லிப் லைனர் வாங்க வேண்டும் என்று அவசியமில்லை. லிப்ஸ்டிக்கின் நிறத்தைச் சார்ந்த நிறமாக இருந்தாலும் போதுமானது.
உதாரணத்திற்கு சிவப்பு நிறத்தைச் சார்ந்த லிப்ஸ்டிக்குகளுக்கு சிவப்பு நிற லிப்லைனரும், பிரவுன் நிறத்தைச் சார்ந்த லிப்ஸ்டிக்குகளுக்கு பிரவுன் நிற லிப்லைனரும் உபயோகிக்கலாம்.
தேவைப்பட்டால் லிப் லைனரைக் கூட லிப்ஸ்க்காக பயன்படுத்தலாம்.
குறிப்பு: மாய்ஸ்சுரைசர் இல்லாத லிப்லைனரை லிப்ஸ்டிக்காக பன்படுத்தினால், மறக்காமல் சிறிதளவு க்ரீம் தடவ வேண்டும். இது உதடுகள் காய்ந்து வெடிக்காமல் இருக்க உதவும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum