இணையத்தின் எதிர்கால ஆளுமை யார் கையில்?"
Page 1 of 1
இணையத்தின் எதிர்கால ஆளுமை யார் கையில்?"
துபாயில் துவங்கியிருக்கும் இணையம் தொடர்பான ஐநா மன்றத்தின் மாநாட்டில்
193 நாடுகளைச் சேர்ந்த இணையதொழில்நுட்ப அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள்
கலந்துகொண்டிருக்கிறார்கள். இந்த ஐநா மாநாடு, உலக அளவில் இணையத்தின்
செயற்பாடுகள் குறித்தும், அதன் நிர்வாகம் குறித்தும் விவாதிக்க இருக்கிறது.
இந்த
மாநாட்டின் கருப்பொருள் இணையமேலாண்மை என்பதாக இருந்தாலும் இதற்கு
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடமிருந்து கடும் எதிர்ப்பு
உருவாகியிருக்கிறது.
ஐநா மன்றத்தின் போர்வையில், உலக நாடுகளின்
அரசாங்கங்கள், இணையத்தின் தற்போதைய சுதந்திரத்தன்மையை பறித்து, அதை
அரசுகளின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவே இந்த மாநாடு வழிவகுக்கும்
என்று அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் சந்தேகம் வெளியிடுகின்றன; குற்றம்
சாட்டுகின்றன.
ஆனால் ஐநா அமைப்பு இந்த குற்றச்சாட்டை மறுக்கிறது.
இணையத்தின் இன்றைய சுதந்திரத்தை எந்த விதத்திலும் குறைப்பதோ, அல்லது
கட்டுப்படுத்துவதோ ஐநா மன்றத்தின் இந்த மாநாட்டின் நோக்கமல்ல என்று ஐநா
மன்ற அதிகாரிகள் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.
இணையதொழில்நுட்பம் தற்போது யாருடைய
கட்டுப்பாட்டிலும் இல்லாமல் சில தனியார் பெருவர்த்தக நிறுவனங்கள் மற்றும்
அவர்களின் கட்டுப்பாட்டில் மட்டுமே இருக்கும் நிலைமையை மாற்றி, அதை உலகு
தழுவிய அளவில் ஒழுங்குபடுத்துவது மட்டுமே தங்களின் நோக்கம் என்றும் ஐநா
மன்றம் தெள்வுபடுத்தியிருக்கிறது.
இந்த சர்ச்சைகள் குறித்து பிபிசி தமிழோசைக்கு
செவ்வியளித்த இந்தியாவின் பெங்களூருவில் இருக்கும் இணைய சமூகத்திற்கான
மையம் என்கிற தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த பிரானேஷ் பிரகாஷ்,
இதில் இரு தரப்பிலும் சில நியாயமான வாதங்கள் முன்வைக்கப்பட்டாலும்
இணையத்தின் இன்றைய சுதந்திரத்தை மேலும் மேம்படுத்தும் வகையிலேயே ஐநா
மன்றத்தின் முன்னெடுப்புக்கள் அமையவேண்டும் என்று கூறினார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» இணையத்தின் எதிர்கால ஆளுமை யார் கையில்?"
» அமிதாப் கையில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா?
» சக்தியின் அம்சமான விநாயகர் இங்கு சிவனின் ஆவுடை மீது வலது கையில் ஒடிந்த தந்தத்துடனும் இடது கையில் கொழுக்கட்டையுடனும் ஈசனின் திசையான ஈசான்யத்தை (வடகிழக்கு) நோக்கி அருள் பொழிகிறார். தனது பாதத்தில் சரணடைந்தால் அனைத்திலும் வெற்றி உண்டாகும் என்பதற்கேற்ப இடது பா
» ‘வேலாயுதம்’ படத்தில் மூன்று முக்கிய வில்லன்கள் யார் யார்?
» ஃபேஷியல் செய்து கொள்ளக்கூடாதவர்கள் யார் யார் தெரியுமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum