இணைய தமிழின் இன்றைய தேவையென்ன?
Page 1 of 1
இணைய தமிழின் இன்றைய தேவையென்ன?
செல்பேசிகள், Tablet Computers எனப்படும் பலகைக்
கணினிகள், ஐ.ஓ.எஸ் மற்றும் ஆண்டிராய்டு இயங்கு தளங்களில் தமிழைப் படித்தல்,
தமிழில் எழுதுதல் குறித்து விவாதிப்பதற்கான உலகத்தமிழ் இணைய மாநாடு
தமிழ்நாட்டின் சிதம்பரத்தில் டிசம்பர் 28 ஆம் தேதி வெள்ளிக்கிழமை துவங்கி
மூன்று நாட்களுக்கு நடக்கவிருக்கிறது.
உத்தமம் என்று சுருக்கமாக அழைக்கப்படும்
உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் என்கிற சர்வதேச அமைப்பும்,
தமிழ்நாட்டின் அண்ணாமலைப்பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் பதினோராவது
உலகத்தமிழ் இணைய மாநாட்டில், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து தகவல்
தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தமிழ் மொழியியலாளர்கள் பலரும்
கலந்துகொள்ளவிருக்கிறார்கள்.
துறைசார்
வல்லுநர்களுக்கான ஆய்வரங்கம், தமிழ்கணினி குறித்து மாணர்வகள் மற்றும்
பொதுமக்களுக்கு விளக்குவதற்கான மக்கள் கூடம், தமிழ் கணினி மென்பொருட்களை
பார்க்கவும் வாங்கவுமான கண்காட்சி என்று மூன்று பிரிவுகளாக இந்த மாநாடு
நடக்கவிருக்கிறது.
மின் இதழ்கள் உள்ளிட்ட தமிழ் ஊடகங்களை
கைக்கருவிகளில் கொண்டுவர உதவும் செயலிகள் மற்றும் தொழில்நுட்பம்,
திறவூற்றுத் தமிழ் மென்பொருள்கள், தன்மொழியாக்கல், இயன் மொழிப்பகுப்பாய்வு,
பிழைதிருத்தி, தமிழ் எழுத்துரு பகுப்பி, ஒலி உணர்தல், தமிழில் தேடு
பொறிகள், இயந்திர மொழிமாற்றம், தகவல் அகழ்தல் போன்ற தொழில்நுட்ப விஷயங்கள்
இந்த மாநாட்டில் விவாதிக்கப்படவிருப்பதாக உத்தமம் அமைப்பின் தலைவர் மணி எம்
மணிவண்ணன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
மேலும் தமிழ் இணையத்தின் தற்போதைய நிலைமை,
வலைப்பதிவு, சமூகவலைத்தளங்கள், விக்கிப்பீடியா, குரல்வலை, தமிழ்
தரவுத்தளங்கள், கணினி வழி தமிழ் கற்றல் மற்றும் கற்பித்தல் குறித்தான
ஆய்வுகள், தமிழ்க் கணினி சொல்லாக்க ஆய்வுகள், கணினி வழி தமிழ்மொழி
பகுப்பாய்தல் மற்றும் கணினிக்கு தமிழ் மொழியறிவு ஊட்டல் பற்றிய ஆய்வுகள்
உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் இந்த மாநாட்டில் ஆய்வுக்கட்டுரைகள்
வாசிக்கப்பட இருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம் குறித்தும்
கணினி, இணையம், செல்லிடபேசிகள், பலகை கணினிகளில் தமிழ் எதிர்கொள்ளும்
சவால்கள் குறித்தும் மணி எம் மணிவண்ணன் அவர்கள் பிபிசி தமிழோசைக்கு அளித்த
விரிவான செவ்வியை நேயர்கள் இங்கே கேட்கலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» இணைய தமிழின் இன்றைய தேவையென்ன?
» தமிழின் சிறப்பு
» தமிழின் மொழியியல்பும் சொல்லியல்பும்
» இணைய உளவத்தில், குழந்தைகளை பாதுகாக்க
» உறவுகளோடு அன்பால் இணைய புதுப்பெண்ணிற்கு ஏற்ற டிப்ஸ்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum