தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ராகுல் காந்தியால் தேர்தல் வெற்றிகளை பெற முடியுமா?

Go down

ராகுல் காந்தியால் தேர்தல் வெற்றிகளை பெற முடியுமா? Empty ராகுல் காந்தியால் தேர்தல் வெற்றிகளை பெற முடியுமா?

Post  meenu Sat Mar 02, 2013 1:29 pm

இந்தியாவை ஆளும் கூட்டணிக்கு தலைமையேற்கும் காங்கிரஸ்
கட்சியின் துணைத் தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்டுள்ளது தொடர்பில்
மாறுபட்ட கருத்துக்கள் வந்துள்ளன.

அவரால் அடுத்து வரக்கூடியத் தேர்தல்களில் கட்சியை
வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்ல முடியும் என ஒரு சாராரும், அவருக்கு
அத்தகைய வல்லமை இல்லை என்று மறு சாராரும் கூறுகிறார்கள்.









<blockquote>
"காங்கிரஸ் கட்சி ஒரு குடும்பத்தை மட்டுமே நம்பியுள்ளது பரிதாபகரமான நிலை"

</blockquote>




என் ராம்







தற்போது
காங்கிரஸ் கட்சி தோல்வி மேல் தோல்வியடைந்து ஒரு நெருக்கடியில் உள்ளது
என்றும், ராகுல் காந்தியால் உறுதியாக கட்சிக்கு வெற்றியை தேடித் தரமுடியும்
என்று கூற முடியாது என்றும் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்
''இந்து''பத்திரிகையின் முன்னாள் தலைமை ஆசிரியர் என் ராம்.





என். ராம் பேட்டி














ராகுல் காந்தியின் பதவி உயர்வு:ராம் கருத்து

காங்கிரஸ் கட்சியின்
துணைத் தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்டுள்ளது குறித்து இந்து
பத்திரிகையின் முன்னாள் தலைமை ஆசிரியர் என் ராம் கருத்து.


கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள்
உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ்
பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க
வேண்டும்.

மிகச் சமீபத்திய வடிவில் பிளாஷ் பிளேயரைத் தரவிறக்கம் செய்யவும்

மாற்று மீடியா வடிவில் இயக்க





இளைஞர் காங்கிரஸை வலுப்படுத்துவதில் ஓரளவுக்கு
அவர் வேலை செய்திருந்தாலும், அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னர் அவரால்
பெரிய அளவில் ஒன்றும் சாதித்துவிட முடியாது எனவும் அவர் கூறுகிறார்.

"பெரிய வெற்றிகளைப் பெறவில்லை"


மாநிலக் கட்சிகள் பலமாக இருக்கும் சூழலில், அவரால்
அக்கட்சிகளின் தலைவர்களை எந்த அளவுக்கு சமாளிக்க முடியும் என்பதும்
கேள்விக்குறியே என்றும் கூறுகிறார் ராம்.




ராகுல் காந்தியால் தேர்தல் வெற்றிகளை பெற முடியுமா? 120307164725_n_ram_304x171_hindu_nocreditஇந்து பத்திரிகையின் முன்னாள் தலைமை ஆசிரியர் என் ராம்



இதுவரை அவரால் காங்கிரஸ் கட்சி குறிப்பிடத்தகுந்த அளவுக்கு வெற்றிகளைப் பெறவில்லை எனவும் அவர் மேலும் கூறுகிறார்.

அடுத்தப் பொதுத் தேர்தலுக்கு முன்னர் ராகுல்
காந்தி பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்படுவதும் சந்தேகமே எனவும்
அவர் சுட்டிக்காட்டுகிறார்.

அதே நேரம் பிரதான எதிர்கட்சியான பாரதிய ஜனதா
கட்சியும் பெரிய பலத்துடன் இருப்பதாக கருத முடியாது என்றும், குஜராத்
மாநிலத்தின் முதல்வர் நரேந்திர மோடி, மாநில அரசியலைவிட்டு தேசிய
அரசியலுக்கு வரும் போது தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களே
எதிர்ப்பார்கள் எனவும் என் ராம் கூறுகிறார்.

2009 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி பெற்ற வெற்றிக்கு
ராகுல் காந்தியே காரணம் என அக்கட்சி கூறியது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று
எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஒரு குடும்பத்தை மட்டுமே காங்கிரஸ் கட்சி நம்பியுள்ளமை மிகவும் பரிதாபகரமான நிலை எனவும் என் ராம் சுட்டிக்காட்டுகிறார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஓராண்டுக்கு சஸ்பெண்டு செய்யப்பட்ட 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள், மேல்–சபை தேர்தலில் ஓட்டுப்போட முடியுமா? தேர்தல் ஆணையம் முடிவு செய்கிறது
» தமிழக தேர்தல் களம் தேர்தல் கண்ணோட்டம்; தமிழக பார்லிமென்ட் தேர்தல் முடிவுகள்
» தேர்தல் சுதந்திரமாக நடைபெற மக்களின் பங்களிப்பு அவசியம் தலைமை தேர்தல் கமிஷனர் வி.எஸ்.சம்பத் பேச்சு
» வெற்றிகளை எதிர்பார்க்கும் ஸ்ருதி.
» தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தது ஏன் என்று விளக்கம் கேட்டு கன்னட நடிகை குத்து ரம்யாவுக்கு கர்நாடக மாநில இளைஞர் காங்கிரஸ் தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். குத்து ரம்யாவின் தாத்தா எஸ்.எம்.கிருஷ்ணா. காங்கிரஸ் கட்சியி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum