தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உடலும் வாசனைப் பொருட்களும்

Go down

உடலும் வாசனைப் பொருட்களும் Empty உடலும் வாசனைப் பொருட்களும்

Post  ishwarya Sat Mar 02, 2013 1:23 pm

FILE
நீண்ட நேர வாசனைக்கு, வாசனைத் திரவியம் உடல் முழுவதும் படிப்படியாக சேர்க்க வேண்டும். ஒரே விதமான வாசனைத் திரவியத்தை குளிக்கும் நீரிலும் அதன் பின் உடம்பிலும் பயன்படுத்தவும்.

உங்கள் உணவு கூட நீங்கள் பயன்படுத்தும் வாசனைப் பொருட்களின் வாசனையை மாற்றக் கூடும். வாசனைப் பொருளைப் பயன்படுத்துபவர் கொழுப்பு சத்துள்ள உணவு மற்றும் மசாலாக்கள் அதிகம் கலந்த உணவு உண்பவரானால் வாசனை அதிகமாக இருக்கும். உணவுப் பழக்கத்தில் திடீர் மாற்றத்தை ஏற்படுத்தினால், அது வாசனையின் தன்மை மாற்றிக் காட்டக் கூடும்.

தோலின் தன்மை கூட வாசனையை மாற்றிக் காட்டும். எண்ணெய்ப் பசையுள்ள சருமத்தில் வாசனை நீண்ட நேரம் நீடிக்கிறது. உலர்ந்த சருமம் நீண்ட நேரம் வாசனையைப் பாதுகாப்பதில்லை. ஆகவே அது போன்ற தோலின் தன்மை கொண்டவர்கள் அடிக்கடி வாசனைப் பொருட்களை பயன்டுத்த நேரிடலாம்.

மூன்றுக்கும் மேற்பட்ட வாசனைகளை முகராதீர்கள். உங்கள் மூக்குக்கு அதற்கு மேற்பட்ட வாசனைகளை வித்தியாசப்படுத்திக் காட்ட இயலாது. புதிய வாசனை பொருட்களை போட்டுப் பார்க்கும் போது அவற்றை நேரடியாக உங்கள் தோலில் போட்டு முகர்ந்து பார்க்கவும். பாட்டிலில் இருந்தபடியே முகர்ந்து பார்த்தால் சரியான வாசனையை கண்கொள்ள முடியாது. சில துளிகளை உங்கள் கையின் மேல்புறம் தோலில் தெளித்து முகர்ந்து பார்க்கவும். மேலும் சில வாசனைகளை ‘டெஸ்ட்’ செய்ய விரும்பினால் அடுத்த கையின் ‘மேல் தோலில் தடவி முகரவும். மற்றவற்றை வேறு இடங்களில் தடவி முகரலாம்.

10 நிமிடங்கள் ஆன பிறகே நீங்கள் எந்த வாசனையைப் பற்றியும் முடிவெடுக்கவும்.

வாசனைப் பொருட்களை நீண்ட காலம் சேமித்து வைப்பதால் அது கெட்டு விடும் அல்லது காற்றில் கரைந்து விடும்.

வாசனைப் பொருட்களை துணிகள் மேல் நேரடியாக தெளிக்காதீர்கள். அது கரைகளை ஏற்படுத்தலாம்.

எந்த வாசனைப் பொருட்களையும் மற்றவர் பயன்படுத்துவதால் தேர்வு செய்யாதீர்கள். வாசனை என்பது எல்லா மனிதருக்கும் ஒரே மாதிரியானதாக இருப்பதில்லை. உங்களின் உடல் வாகைப் பொருத்துதான் எந்த வாசனையின் தன்மையும் அமையும்.

உங்கள் உள்ளங்ககைகளில் வாசனைப் பொருட்களைத் தெளித்து நீண்ட நேரம் அதன் வாசத்தை அனுபவியுங்கள்.

ஒவ்வொருவருக்கும் ஒரு கையின் நீட்டம் வரை ஒரு வாசனை வட்டம் அமைந்துள்ளது. அப்படியா! என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. இதை நினைவில் வைத்துக் கொண்டு நீங்கள் வாசனைப் பொருட்களை பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் மற்றவர் அதிக வாசனைப் பொறுக்காமல் முகம் சுளிக்கலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum