சுவரொட்டி மூலம் பங்கம் ஏற்படுத்தினால் நடவடிக்கை - திமுக
Page 1 of 1

திமுக தலைவர் மு கருணாநிதியின் மகனும் மத்திய உரத்துறை
அமைச்சருமான மு.க.அழகிரியின் பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு வாழ்த்துக்
கூறுவதாகக் காட்டிக் கொண்டு, ஆனால் கட்சிக்கு அவப்பெயரும் இழுக்கும்
ஏற்படுத்தும் வகையில் தவறான வாசகங்களைக் கொண்ட சுவரொட்டிகளை அச்சிட்டு
ஒட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைக்கழக அறிவிப்பொன்று
எச்சரிக்கிறது.
எதிர்வரும் ஜனவரி 30ஆம்நாள் தான் அழகிரியின்
பிறந்த நாள். பொதுவாக மதுரையில் அவரது ஆதரவாளர்கள் விமரிசையாகக்
கொண்டாடுவர். இம்முறை அழகிரியின் படத்தினைத் தாங்கிய சுவரொட்டிகள் சென்னை
மாநகரெங்கும் காணப்படுகின்றன. அவற்றில் கண்ணகி சிலம்பும், மனோகரன்
விலங்கும் வீழ்ந்ததா வீழ்த்தியதா. அதுக்கும் மேல.. அதுக்கும் மேல... அண்ணன்
உசுருலே. இங்கே பரமசிவனும் இல்லை. நாங்கள் கருடனும் இல்லை. நடப்பது ராம
நாடகமே என்பன போன்ற சொற்றொடர்களும் காணப்படுகின்றன.
கருணாநிதியின் இல்லம் உள்ள கோபாலபுரம்
பகுதியிலும், அண்ணா அறிவாலயத்திலும், கருணாநிதி அறிவாலயத்துக்குச் செல்லும்
வழியில் அத்தகைய சுவரொட்டிகள் பல காணப்பட்டன. அனைத்தையும் திமுகவினர்
கிழித்துப் போட்டதாகவும் கூறப்படுகிறது.
அரசியல் வாரிசு
ஆனால் அந்தச் சுவரொட்டிகளை அச்சிட்டு ஒட்டியவர்கள்
என்று காணப்படும் பெயர்கள், கழகத்தில் எந்தக் கிளை உறுப்பினர்கள் என்று
தெரியவில்லை, கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும். அதுபோன்று தங்களை
வெளிக்காட்டிக் கொள்ளாமல், கழகத்திற்கு இழுக்கு ஏற்படுத்துவோர் எவராயினும்
அவர்கள்மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தலை,மைக்கழக்
செய்திக்குறிப்பு கூறுகிறது.
இரண்டாவது மகன் ஸ்டாலின் தான் தனது அரசியல்வாரிசு
என்ற ரீதியில் கருணாநிதி பேசிவரும் நிலையில், மூத்த மகனும் தென் மண்டலச்
செயலருமாகிய அழகிரி கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் சுவரொட்டிகள்
அவருடைய சினத்தின் வெளிப்பாடு, அது கருணாநிதியை இன்னமும் சீற்றம் கொள்ளச்
செய்திருக்கிறது என்கின்றனர் நோக்கர்கள்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஆசிரியை மீது அவதூறு சுவரொட்டி: கொக்குவில் பிரபல பாடசாலை மாணவர் ஏழு பேர் இடைநிறுத்தம்
» வடிவேலுவின் வாயால் கெட்ட திமுக!
» தமிழகத்தில் அதிரடி! திமுக தலைவர்கள் அடுத்தடுத்து கைது
» ஸ்டாலின் திமுக தலைவர் ஆவதையே விரும்புகிறேன்: கருணாநிதி
» சைதாப்பேட்டை மாஜி திமுக எம்எல்ஏ சைதை கிட்டு மரணம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum